என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி பலியான 2 சுற்றுலா பயணிகளின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர்
    X

    கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி பலியான 2 சுற்றுலா பயணிகளின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர்

    • பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் ஒப்படைப்பு
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கன்னியாகுமரி :

    கர்நாடக மாநிலம் பெங்களூரு டெக்கானிக்கல் பார்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 10 ஊழியர்கள் நேற்று முன்தினம் கன்னியா குமரிக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்தனர்.

    அவர்கள் கன்னியாகுமரி யில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று காலை கன்னியாகுமரி கோவளம் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கு சென்ற னர். பின்னர் அவர்கள் அங்குள்ள கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர்.

    அப்போது கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலையில் மணி (வயது 30), சுரேஷ் (32), பிந்து (25) ஆகிய 3 பேரும் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்தனர். உடனே இதுபற்றி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உதவியுடன் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அந்த 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் மணி மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே இறந்துவிட்டனர் என்று தெரிவித்தனர். பிந்து என்ற பெண் மட்டும் சிகிச்சைக்காக கன்னியா குமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பெங்களூ ரில் உள்ள மணி மற்றும் சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களது உறவினர்கள் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆசாரிப் பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ள பிணவறை யில் வைக்கப்பட்டிருந்த மணி மற்றும் சுரேஷின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர்களது உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவி னர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அவர்களது உடலை வாங்கி கொண்டு உற வினர்கள் இன்று சொந்த ஊரான பெங்களூருக்கு கொண்டு செல்கிறார்கள்.

    Next Story
    ×