என் மலர்
கன்னியாகுமரி
- அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி கொள்கை பரப்பு செயலாளர் பேட்டி
- எங்களை நாடி வருபவர்களை மதிப்போம்
குழித்துறை :
அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மார்த்தாண்டத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. முதல் தேர்தல் பிரசார கூட்டத்தை நாங்கள் தான் தொடங்கி உள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் மழை வடிவில் எங்களை வாழ்த்தினர். 38 மாவட்டங்களிலும் எங்கள் பொது செயலாளர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய உள்ளார். எங்களை நாடி வருகிறவர்களை நாங்கள் மதிப்போம். பலர் எங்களை தேடி வருகின்றனர். எங்கள் கூட்டணி பலமாக அமையும். விரைவில் நல்ல முடிவு வரும். அதை ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார்.
எங்கள் கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் தான் போட்டி நடைபெறும். நடிகர் ரஜினிகாந்தை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்ததை ஜெயக்குமார் தவறாக கூறியுள்ளார். கோடநாட்டில் நடந்த கொலை கொள்ளைகளுக்கு எடப்பாடி பழனிசாமிடம் விசாரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சிறை சென்று விட்டால் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும் ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஒன்றாகி விடும்.
சசிகலா வந்தால் நல்லது சின்னம்மாவுடன் நீண்ட நாள் நான் பயணம் செய்துள்ளேன். மணிப்பூர் கலவரம் குறித்து கண்டனம் தெரிவித்து ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எதுவும் கூறவில்லை. ஏனென்றால் மணிப்பூர் எங்கே இருக்கும் என்று அவருக்கு தெரியாது. பாரதிய ஜனதா லஞ்சத்தை ஒழிப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் லஞ்சம் வாங்குபவர்களை கூடவே வைத்துள்ளனர். அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ச்சியாக நடக்காமல் 3 நாள் நடந்து விட்டு மறுநாள் கோயம்புத்தூர் போய் நிற்கிறார். மீண்டும் நடைபயணம் செல்கிறார். இது நடைபயணமா என்றே தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் செல்லப்பா, மாநில இலக்கிய அணி இணை செயலாளர் ராஜா டைட்டஸ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரெத்தினசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.
கன்னியாகுமரி :
ஒடிசா மாநில கவர்னர் கணேஷிலால் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார்.
கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு 6 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு சென்றார். அங்கு வந்த அவரை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பழனி வரவேற்றார்.
மாலை 4 மணியுடன் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டதால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஒடிசா கவர்னர் படகுமூலம் சென்று நேரடியாக பார்க்க முடியவில்லை.
இதனால் படகுதுறையில் போடப்பட்டு இருந்த விசேஷ நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அவர் சுமார் ½ மணி நேரம் பார்த்து ரசித்தார். அதன்பிறகு இரவு 7 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு வந்த அவரை கோவில் மேலாளர் ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் அவர் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்து உள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அயப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் மற்றும் சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு இரவு 8 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்பி சென்றார். இரவு அங்கு தங்கினார். 2-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று அதிகாலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தார். அதன் பிறகு காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தனி படகு மூலம் சென்று பார்வையிட்டார்.
அதன் பின்னர் அவர் கார் மூலம் புறப்பட்டு சென்றார். ஒடிசா கவர்னர் வருகையை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 16 இடங்களில் நடக்கிறது
- குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-
கண்புரை நோயாளி களுக்கான சிகிச்சை முறைகள் மிக வேகமாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. முந்தைய காலங்களில் கையாண்ட கண்புரை அறுவை சிகிச்சை முறைகள் தற்போது செய்யப்படுவ தில்லை. அதற்கு பதிலாக அதிநவீன முறையிலான மற்றும் பழைய முறையை விட மிகவும் மேம்ப டுத்தப்பட்ட கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையே கண்புரை நோயாளிகளுக்கு தற்போது செய்யப்பட்டு வருகிறது. இம்முறையில் கண்புரை நோயாளியின் கண்களில் உள்ள பழுதுபட்ட லென்ஸ்களுக்கு பதிலாக புதிதான வேறொரு லென்ஸ் மிகவும் எளிதான முறையில் பொருத்தப்ப டுவதால் கண்புரை நோயாளிகளுக்கு பார்வை யானது மிக தெளி வா கவும், மிக நேர்த்தியா கவும் கிடைக்கி றது. புதிய லென்ஸ் பொருத்தப்படுவதால் மிக நீண்ட நாட்கள் பார்வை தெளிவாக இருக்கிறது.
மிக கனமான கண்ணாடி அணிய தேவையில்லை, மிக குறுகிய காலத்திலேயே அதாவது ஒரு வாரத்தில் இயல்பான பணிகளை செய்ய முடியும். மேலும் 'கண் லென்ஸ்' பொருத்தும் சிசிச்சையின் முக்கியத்து வத்தை மக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முழு பயனையும் கண்புரை நோயாளிகள் பெறுவதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளி லும் கண் லென்ஸ் பொருத் தும் முகாம் மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் முகாம்கள் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 8-ந்தேதி பன்னிகோடு அரசு துணை சுகாதார நிலையம், 9-ந்தேதி ஒரு நூறாம் வயல் துணை சுகாதார நிலையம், 11-ந்தேதி சிங்களேயர்புரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 14-ந்தேதி மிடாலம் அரசு துணை சுகாதார நிலையம், கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15-ந்தேதி வாட்ஸ்புரம் சத்து ணவு மையம், பள்ளியாடி சேரிக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18-ந்தேதி பளுகல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், 21-ந்தேதி மருங்கூர் இருப்பு ராஜாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், 22-ந்தேதி ஜேம்ஸ் டவுன் லட்சுமிபுரம் சத்து ணவு மையம், 25-ந்தேதி முன்சிறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சரல் அரசு துணை சுகாதார நிலையம், திருவிதாங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 27-ந்தேதி பூதப்பாண்டி அரசு மருத்துவ மனை ஆகிய இடங்களில் முகாம்கள் நடக்கிறது.
இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் அனைத்து கண்புரை நோயாளி களுக்கும் இலவச மாக கண் லென்ஸ் பொருத் தும் சிகிச்சை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- போலீசார் விசாரணையில் பரபரப்புதகவல்கள்
- தமிழகம்-கேரளாவில் வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்
குழித்துறை :
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு வெட்டுக்காட்டுவிளையைச் சேர்ந்தவர் மெர்லின் ராஜ் (வயது 39). முன்னாள் ராணுவ வீரர். இவர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக, 2016-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அதன்பிறகு மெர்லின் ராஜ், தனது வாழ்க்கை செலவுகளுக்காக திருட்டு மற்றும் வழிப்பறி சம்ப வங்களில் ஈடுபட்டுள்ளார். 2019-ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் ெரயில்வே ஸ்டேஷனில் முதல்முறையாக நகை திருட்டில் ஈடுபட்டார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த் தாண்டம், திருவட்டார், ஆசாரிப்பள்ளம், நேசமணி நகர், மண்டைக்காடு, இரணியல், கொல்லங்கோடு பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் இறங்கினார்.
இதனால் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொலை, மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கிலும் சிக்கினார். மேலும் 13 அடிதடி வழக்குகளும் அவர் மீது உள்ளன. இதனை தொடர்ந்து மெர்லின் ராஜை, தமிழகம் மற்றும் கேரள போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதற்கிடையில் அவருடன் மேக்காமண்டபம் பூந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவனும் கூட்டாளியாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. ஒரு சில இடங்களில் போலீசாரின் வாகன சோதனையின் போது சிக்கிய போதும், ராணுவத்தில் பணியாற்றிய அடையாள அட்டையை காண்பித்து மெர்லின் ராஜ் தப்பி சென்றுள்ளார்.
இந்த நிலையில் மார்த் தாண்டம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் தலைமையில் போலீசார் திக்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் மெர்லின் ராஜ், மணிகண்டன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் தேடப்படும் கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இருந்து 20 பவுன் நகைகள், கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, மெர்லின்ராஜ் போலீ சாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு வருமானம் எதுவும் இல்லை. இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் வழிப்பறி கொள்ளையில் இறங்கினேன். இந்த வருமானம் மூலம் தேவைக்கு ஏற்ப மதுபானங்கள் தாராள மாக வாங்கினேன்.
கேரள மாநிலம் விழிஞ்சத்தில் போலீசார் வாகன சோதனையில் குடிபோதையில் இருந்த நான் சிக்கினேன். எனது மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இந்த மோட்டார் சைக்கிள், விழிஞ்சம் போலீஸ் நிலைய வளா கத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை அதிகாலை வேளை யில் சென்று திருடி வந்தேன். இது தொடர்பாக விழிஞ்ஞம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.
கோவில்பட்டியில் குடிபோதையில் சென்ற போது வாகன சோதனையில் சிக்கினேன். அப்போது ராணுவ அடையாள அட்டை காண்பித்து தப் பித்து விட்டேன். கொள்ளை யடித்த நகை-பணத்தை வைத்து ஏராளமான பெண்கள் மற்றும் துணை நடிகைகளு டன் குற்றாலம் மற்றும் பல்வேறு இடங்க ளுக்கு சென்று உல்லாசம் அனுபவித்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி பேட்டி
- உலக ஆசிரியர் தினமான அக்டோபர் 5-ந்தேதி டெல்லியில் ரத யாத்திரை நிறைவடைகிறது.
கன்னியாகுமரி :
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ரத யாத்திரை நடைபெறுகிறது. இந்தியாவின் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி கன்னியாகுமரி உள்பட 4 இடங்களில் தொடங்கி உலக ஆசிரியர் தினமான அக்டோபர் 5-ந்தேதி டெல்லியில் ரத யாத்திரை நிறைவடைகிறது.
இந்த 4 குழுக்களையும் ஒருங்கிணைத்து டெல்லியில் அக்டோபர் 5-ந் தேதி மாபெரும் மாநாடு நடக்கிறது. அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட நேரிடும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை கொண்டுள்ள மத்திய அரசு, 7-து ஊதியகுழு பரிந்துரையின்படி ஒரே ஊதிய முறையை அமுல் படுத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை வந்தால் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
- குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது
இரணியல் :
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், ரமணிரோஸ், விஜயன், ஏசு ரெத்தினராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜாண்லீபன், பேரூர் செயலாளர்கள் சுஜெய் ஜாக்ஸன், சேவியர் ஏசுதாஸ், ராஜூலின் ராஜகு மார், சகாய கிறிஸ்துதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெய சீலன், வைகுண்டதாஸ் உட்பட பலர் கலந்துகொண்ட னர். நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா நன்றி கூறினார்.
கூட்டத்தில் இளைஞர் அணியினரை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோச னைகள் வழங்க குமரிக்கு வருகை தரும் இளைஞரணி செயலாளரும், அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சியில் திரளான இளை ஞர்கள் கலந்துகொள்வது. டிசம்பர் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது, போக்குவரத்து சுங்கச்சாவடி கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரி வித்துக்கொள்வது, மந்தமாக நடந்து வரும் நெய்யூர்-பரம்பை ரெயில்வே மேம்பால பணியால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே தண்டவாள விரிவாக்கம் மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க தென்னக ரெயில்வே துறையை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமையில் நடந்தது
- அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் பரமராஜா உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி :
கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியான கிட்டங்கி தெருவில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக அலங்கார தரை ஓடுகள் பதிக்கப்பட உள்ளது. பணியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி அலங்கார தரை ஓடுகள் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
துணை தலைவி விமலாமதி, மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் வினோத், தமிழ்மாறன், தி.மு.க. கிளை செயலாளர் மதி, மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன்ஜானி, மாவட்ட தி.மு.க.இளைஞர்அணி துணைஅமைப்பாளர் பொன்ஜாண்சன், பேரூராட்சி கவுன்சிலர் தங்ககுமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் பரமராஜா உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
- பிரதிஷ்டை செய்ய கட்டுப்பாடு
- ஒரு அடி முதல் 7 அடி வரை உயரத்திற்கு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். குமரி மாவட்டத்தில் விநாய கர் சதுர்த்தி விழா விமர்சை யாக கொண்டா டப்படுவது வழக்கம்.
இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்ப டும். விநாயகர் சதுர்த்தி யையொட்டி தற்பொழுது இரணியல் கண்ணாட்டு விளை, சுங்கான்கடை பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. ஒரு அடி முதல் 7 அடி வரை உயரத்திற்கு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
அன்ன விநாயகர், கற்பக விநாயகர், வலம்புரி விநாயகர், தாமரை விநாயகர் என பல வடிவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வருகிற 18-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படு கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவில்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைக ளில் கரைக்க 3 நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 23-ந்தேதி தேதியும், இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 24-ந்தேதியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படு கிறது.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும், ஊர்வலங்கள் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே பிர திஷ்டை செய்ய வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சிலைகளை அலங்கரிக்க கூடாது.
நீர்நிலைகள் மாசுபடு வதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்ப டுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதற்கு அந்தந்த பகுதி போலீசாரிடம் உரிய அனுமதிபெற வேண்டும். புதிதாக இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பிறர் மனதை புண்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் 11 இடங்களில் கரைப்பதற்கு போலீசார் அனுமதித்துள்ள னர்.
சிலைகள் கரைக்க உள்ள இடங்களில் மின்விளக்கு வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்வதற்கு பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
- வேளாண் பொறியியல் துறை சார்பில் நடந்தது
நாகர்கோவில் :
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் விவசாயி களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து குமரி மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேளாண் பொறியியல் துறை சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு பால்வளத்து றை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூறியதா வது:-
தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியையும், விவசாயி களின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திர மயமாக்குதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்கு றை நிவர்த்தி செய்யப்படு வதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ளவும் வழிவகுக்கப்படுகிறது. நடப்பு 2023-24-ம் நிதியாண்டில், வேளாண்மை நிதி நிலை அறிக்கை 2023-24-ன் படி, சிறு, குறு விவசாயிகள் சிறிய வேளாண் எந்திரங்கள் மானியத்தில் பெற்று பயன்பெறும் நோக்கத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்ட கிராமங்களுக்கு 5 ஆயிரம் பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவிகள் ரூ.41.23 கோடி மானியத்தில் வழங்க இலக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 27 பவர் டில்லர்கள் மற்றும் 13 விசை களை எடுப்பான் கருவிகள் ஆக மொத்தம் 40 எண்கள் விவசாயிகளுக்கு சுமார் ரூ.27.94 லட்சம் மானியத்தில் வழங்கப்படு கிறது. மேலும் உழவன் செயலி வாயிலாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் விவசா யிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டத்தில், 50 சதவிகித மானிய அடிப்படையில் அதிகபட்சமாக பவர் டில்லர்களுக்கு ரூ.85 ஆயிரம், விசை களை எடுப்பான்களுக்கு ரூ.63 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசா யிகளுக்கு அவர்களின் பங்களிப்பு தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்ப டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பிரின்ஸ் எம்.எல்.ஏ., வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- கண்காட்சி அமைத்து பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட வுள்ளது.
- பணியாளர்களால் உருவாக்கப்பட்ட ஊட்டச் சத்து குறித்த விழிப்புணர்வு கோல கண்காணட்சியினை பார்வையிட்டார்.
நாகர்கோவில் ;
கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட் டத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக முகப்பில் தேசிய ஊட்டச் சத்து மாத விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, ஊட்டச்சத்து கண்காட்சி அரங்கினை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்வானது கொண்டா டப்பட்டு வருகிறது. தொடர்ந்து குமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் இந்த வருடம் தேசிய ஊட்டச்சத்து மாத நிகழ்வானது ஊட்டச் சத்தான இந்தியா, கல்வி நிறைந்த இந்தியா மற்றும் வலுவான இந்தியா என்ற கருத்தின்கீழ் கொண் டாடப்படவுள்ளது.
இந்நாட்களில் பொது மக்களுக்கு ஊட்டச்சத்து ஏற்படுத்தும் வகையில் ஊட்டசத்து குறித்து கண்காட்சி அமைத்து பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட வுள்ளது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கி யமான உடல்நிலையை அடை வது, ஊட்டசத்து மற்றும் ஆரோக்கியமான கருத்துக்களை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எடுத்து கூறுவது, சத்தான உணவு, தூய்மையான குடிநீர், சுகாதாரம், சரியான தூய்மை, பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்க வழக்கங்களை எடுத்து கூற துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட் டது.
மேலும் மாவட்டத்திற் குட்பட்ட ஒவ்வொரு வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிளிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து தரப்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் சிறந்த ஆரோக்கிய மானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உருவெடுப்பதற்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண் டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் ஸ்ரீதர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்ததோடு, ஊட்டசத்து குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் உருவாக்கப்பட்ட ஊட்டச் சத்து குறித்த விழிப்புணர்வு கோல கண்காணட்சியினை பார்வையிட்டார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வரு வாய் அலுவலர் பாலசுப்பிர மணியம், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி வன அலுவலர் (பயிற்சி) வித்யாதார், உசூர் மேலாளர் ஜூலியன் ஹூவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.]
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கிங்ஸ்லின் சுதித் பரிதாபமாக இறந்தார்.
திருவட்டார் :
திருவட்டார் அருகே உள்ள அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மகன் கிங்ஸ்லின் சுதித் (வயது 35), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கிங்ஸ்லின் சுதித் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து அவர் வெளியே சென்றார். அதன்பிறகு இரவில் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் கிங்ஸ்லின் சுதித் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்தவர்கள் அவரது உறவினர் சிங் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து கிங்ஸ்லின் சுதித்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கிங்ஸ்லின் சுதித் பரிதாபமாக இறந்தார். அவரது தாயார் லைசம்மாள் புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் சிக்கினார்
- தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் டெரிக் ஜங்ஷனில் வர்த்தக நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
மறுநாள் கடைக்கு வந்தபோது மேஜை டிராயரில் இருந்த ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதையடுத்து சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் மேஜையை திறந்து பணத்தை எடுத்துச்செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் இம்மானுவேல், நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கொள்ளையனின் உருவம் சிக்கியது. அதை கைப்பற்றி விசாரணையை தொடங்கினார்கள்.
விசாரணையில் வர்த்தக நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது வடசேரி பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்தனர். பிடிபட்ட நபரை நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் வர்த்தக நிறுவனத்தில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரித்தபோது, வர்த்தக நிறுவனம் பூட்டுவதற்கு முன்பாகவே அந்த நிறுவனத்திற்குள் சென்று ஒருபுறத்தில் மறைந்து கொண்டதாகவும் கடை ஊழியர்கள் கடையை பூட்டி சென்ற பிறகு பணத்தை எடுத்து விட்டு மாடி வழியாக தப்பி சென்றதாகவும் கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






