ஓட்டல் அதிபர் மனைவியிடம் நகை பறித்த 2 பேருக்கு வலைவீச்சு

சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணைஒருவன் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துள்ளான்.
ஓட்டல் அதிபர் மனைவியிடம் நகை பறித்த 2 பேருக்கு வலைவீச்சு
Published on

கருங்கல் :

கருங்கல் அருகே உள்ள நடுத்தேரியை சேர்ந்தவர் அனீஸ்பிரபு. இவர் கருங்கலில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சுஜாதா (வயது 38). இவர் வீட்டில் இருந்து தங்களது ஓட்டலுக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்றும் ஓட்டலுக்கு சென்று விட்டு சுஜாதா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த பேப்பரை சுஜாதா வாங்கி பார்த்த நேரத்தில், ஒருவன் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துள்ளான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். ஆனால் அதற்குள் 2 வாலிபர்களும் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசில் சுஜாதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து நகையை பறித்துச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com