என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே நண்பர்போல் நடித்து மோட்டார் சைக்கிள் திருட்டு
- சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த ராஜ், மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு திடுக்கிட்டார்
- பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ராஜ். மீனவரான இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவருடன் நண்பர் போல் பேசி பழகி உள்ளார்.
இதற்கிடையில் ராஜ் வீட்டுக்குள் சென்றதை பயன்படுத்தி அந்த மர்ம வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த ராஜ், மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு திடுக்கிட்டார்.
உடனே அவர் இதுபற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மோட்டார் சைக்கிளையும், மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபரையும் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






