மருந்துவாழ்மலையில் ஜோதிலிங்கேஸ்வரருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மருந்துவாழ்மலையில் ஜோதிலிங்கேஸ்வரருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயரம் உள்ள மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வ தவர்த்தினி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி விழா நடைபெற்றது. இதை யொட்டி மாலை 4.30 மணிக்கு மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் பர்வதவர்த்தினி அம்மனு க்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சா மிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடி யார்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண் பொங்கல், எள்ளு, உளுந்து, பஞ்சா மிர்தம், சாம்பார்சாதம் உள்ளிட்ட 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com