search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் வசூல்
    X

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் வசூல்

    • உண்டியலில் இருந்து ரூ.22,99,588 ரொக்கமாகவும், 50 கிராம் தங்கம் மற்றும் 138 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தன
    • இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு, இரவு 8 அத்தாழபூஜை

    மணவாளக்குறிச்சி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல் மற்றும் 6 குடங்கள் ஆகியன கடந்த மே மாதம் 10-ந்தேதிக்கு பிறகு நேற்று மீண்டும் திறந்து எண்ணப்பட்டது.

    உண்டியலில் இருந்து ரூ.22,99,588 ரொக்கமாகவும், 50 கிராம் தங்கம் மற்றும் 138 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தன. மேலும் சவுதி 150 ரியால், அமெரிக்கா 25 டாலர், ஓமன் 2 ரியால், யு.ஏ.இ. 10 திர்காம் ஆகிய வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

    பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நாளை மறுநாள் (3-ந்தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜை, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை, 2-ம் நாள் (4-ந்தேதி) காலை 7 மணிக்கு பஜனை, 10 மணிக்கு ராஜமேளம், பகல் 11.30 மணிக்கு 7001 பொங்கல் வழிபாடு, மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. 3-ம் நாள் (5-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு, இரவு 8 அத்தாழபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×