search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடங்கியது
    X

    பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடங்கியது

    • அத்தப்பூ கோலம் வரைந்து உற்சாகம்
    • பத்மநாபபுரம் அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    தக்கலை :

    குமரி மாவட்டம் தக்கலையில் பத்மநாபபுரம் அரண்மனை இருக்கிறது. குமரி மாவட்ட பகுதியில் இருந்த போதிலும் இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட் டில் இருந்து வருகிறது.

    பத்மநாபபுரம் அரண் மனைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். கேரள சுற்றுலா பயணிகளும் அதிக ளவில் வருவது வழக்கம். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டா டப்படும் போது இங்கும் ஓணம் விழா நடை பெறும்.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின்போது, அரண்மனையின் முன்பு தினமும் அத்தப்பூ கோலம் வரையப்படும். மேலும் பெரிய ஊஞ்சல் கட்டப்பட்டு, அரண்மனை முழுவதும் வண்ண விளக்கு கள் அலங்கரிக்கப்பட்டிருக் கும். ஆனால் இந்த ஆண்டு பத்மநாபபுரம் அரண்மனை யில் ஓணம் விழா நடத்தப் படவில்லை.

    நிதி பிரச்சினை காரண மாக ஓணம் விழா கொண் டாடப்படவில்லை என கேரள அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டிய ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதற்கு பத்மநாபபுரம் பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரண்மனையை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பத்மநாபபுரம் அரண்மனையில் வழக்கம் போல் ஓணம் விழாவை கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இதை யடுத்து பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா கொண்டாட கேரள அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று முதல் 5 நாட்கள் ஓணம் விழா கொண்டாடப் படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

    இதையடுத்து பத்மநாபபுரம் அரண்மனை முன்பு இன்று காலை அரண்மனை ஊழியர்கள் வண்ண வண்ண பூக்கள் அத்தப்பூ கோலம் வரைந்தனர். மேலும் அங்கு பெரிய ஊஞ்சலும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை பத்மநாபபுரம் பகுதி பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

    ஓணம் விழா தொடங்கப் பட்டிருப்பதை தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    Next Story
    ×