இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி

பணத்தை வசூல் செய்யும் வேலையும் செய்து வந்தார்.வேகமாக வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது
இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி
Published on

இரணியல் :

மதுரை மாவட்டம் முனிச்சாலை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோராராம் (வயது43). ராஜ ஸ்தானை சேர்ந்த இவர் மதுரையில் சில்வர் பாத்தி ரங்களை மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் ஜெனாராம் (41). ஜெனாராம் அண்ணின் கம்பெனியில் உதவியாக இருந்து வந்தார். கணக்கு வழக்குகள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்கப்படும் பாத்திரங்களுக்கான பணத்தை வசூல் செய்யும் வேலையும் செய்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தொழில் நிமித்தமாக தக்கலை செல்ல நாகர்கோவிலில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். வில்லு க்குறி தாண்டி காரவிளையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த ஜனாராம் ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெனாராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அவரது சகோதரர் ஜோராராம் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com