என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டு தயார் நிலையில் உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அவ்வப்போது தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளத்துக்கரைகள், கால்வாய் கரைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இந்த தூய்மை பணி நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் ஆவின் பாலகத்துக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் ஏராளமான புற்களும், செடி-கொடிகளும் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. அந்த புதர்களை வெட்டி அகற்றும் பணி இன்று நடந்தது. இந்த தூய்மை பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்து பணிகளை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. காய்ச்சல் பாதிப்பானது பரவலாக உள்ளதே தவிர ஒரே இடத்தில் மக்கள் மொத்தமாக பாதிக்கப்படவில்லை. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. காய்ச்சல் பாதிப்பை கண்காணிக்க களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் 1,165 பணியாளர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டு உள்ளனர். கேரளாவில் நிபா வைரஸ் பரவியதையடுத்து குமரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டது. 5 சோதனைச் சாவடிகளில் போலீசாருடன் சுகாதாரத்துறை பணியாளர்கள் இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை. குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டு தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 27-வது வார்டு ஆசாரிமார் பெரிய தெருவில் ரூ.5.10 லட்சத்தில் தார் சாலை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிவிளை அம்மன் கோவில் மேலத் தெரு பகுதியில் ரூ.2.50 லட்சத்தில் கான்கிரீட் தளம், 32-வது வார்டு சைமன் நகரில் ரூ.51 லட்சத்தில் தார் சாலை, 33-வது வார்டு கம்பர் தெருவில் ரூ.5.81 லட்சத்தில் கான்கிரீட் தளம், 50-வது வார்டு வெள்ளாரன்விளையில் ரூ.27 லட்சத்தில் கான்கிரீட் தளம், 41-வது வார்டு வட்டவிளை, சானல் கரை பகுதியில் ரூ.1.80 லட்சத்தில் மழைநீர் வடிகால் ஓடை பக்க சுவர், 40-வது வார்டு பைத்துமால் நகரில் ரூ.7.50 லட்சத்தில் தார் தளம், 27-வது வார்டு ஆசாரிமார் பெரிய தெருவில் ரூ.5.10 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் கோபால சுப்பிரமணியன், தி.மு.க செயற்குழு உறுப்பினர் சாதாசிவன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மோகன்-விஜில் ராணி தம்பதியரின் மகள் ஜெய நந்தனாவுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்தது.
    • வசந்தம் குரூப்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள வசந்தம் தோல் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வன்-மனைவி கோகிலா ஆகியோரின் மகனும் முன்னாள் எம்.பி.யான எம்.சி. பாலனின் பேரனுமான டாக்டர் ஷரனுக்கும், குமரி மாவட்ட தேங்காய் வியாபாரிகள் நல சங்க தலைவர் மோகன்-விஜில் ராணி தம்பதியரின் மகள் ஜெய நந்தனாவுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்தது.

    அவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவில் தேரேகால்புதூரில் உள்ள கெங்கா கிராண்ட்யூரில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கவுன்சிலர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில திபர்கள், நண்பர்கள், உறவினர்கள், வசந்தம் குரூப்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை மணமக்களின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் செய்திருந்தனர். 

    • முதல் விற்பனையை ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.
    • குறிப்பிட்ட நேரத்தில் பால்பிங்கர் வாகனம் மூலம் பொருட்கள் ஏற்றி இறக்கி தரப்படும்

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி முப்பந்தல் கோவில் அருகில் புதிதாக தொடங்கப்பட்ட ஓம் கான்கிரீட் பிளாக் நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனர் தினேஷ் தலைமை வகித்தார். நிறுவனத்தை தினேசின் தந்தை கல்லூரி முதல்வர், முன்னாள் பேராசிரியர் கணபதி திறந்து வைத்தார். முதல் விற்பனையை அவரது தாய் தமயந்தி தொடங்கி வைத்தார். திருமதி தினேஷ் வரவேற்றார். ஆரல்வாய்மொழி உஷா ஆஸ்பத்திரி டாக்டர் உஷா தியாகராஜன், டாகடர் தியாகராஜன் குத்து விளக்கேற்றி வைத்தனர். முதல் விற்பனையை ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.

    ஓம் கான்கிரீட் பிளாக் நிறுவனத்தில் 6, 8, 10 இன்ச் சைஸ்களில் சாலிட் கான்கிரீட் செங்கல்கள், பிளை ஆஷ் பிரிக்ஸ், இன்ட ர்லாக்கிங்டைல்ஸ், இண்டர் லாக்கிங் பேவர்கள், இண்டர் லாக்கிங் செங்கல்கள் உள்ளிட்ட கற்கள் தயார் செய்யப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர் களின் கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப குறித்த நேரத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பால்பிங்கர் வாகனம் மூலம் பொருட்கள் ஏற்றி இறக்கி தரப்படும். கட்டிடத்தின் முதல் தளம் வரை ஏற்றி தரப்படும்.

    நிகழ்ச்சியில், வி.ஐ.பி. கார்டன் உரியமயாளர் சுயம்புலிங்கம், ஏதன் கார்ஸ் உரிமையாளர் ராபின்சன், கங்கா லாட்ஜ் உரிமையாளர் கங்காதரன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • க்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை செல்ஜின் அனீஸ் பரிதாபமாக இறந்தார்.

    குளச்சல்:

    குளச்சல் அருகே உள்ள கொடும்பனை சிலுவையா தெருவைச் சேர்ந்தவர் செல்வம், மீன்பிடி தொழிலாளி.

    இவரது மகன் செல்ஜின் அனீஸ் (வயது 22). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் குருசடி திருவிழாவில் பங்கேற்பதற்காக செல்ஜின் அனீஸ் ஊருக்கு வந்தார். நேற்று மாலை அவர் தனது நண்பனின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு வெளியில் சென்றார்.

    வாணியக்குடி ஆரோக்கியமாதா குருசடி சாலையில் செல்ஜின் அனீஸ் சென்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    இந்த விபத்தில் செல்ஜின் அனீஸ் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை செல்ஜின் அனீஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தந்தை செல்வம் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    குருசடி விழாவுக்கு வந்த கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் குளச்சல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட திரளானோர் பங்கறே்பு
    • காவல்துறை மூலம் இந்த வழியாக செல்லுகின்ற லாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும்

    ஆரல்வாய்மொழி :

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மங்கம்மாள் சாலை வழியாக இரவு- பகலாக சுமார் 500-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்களும் பேரூராட்சி நிர்வாகமும் அதிகாரிகளுக்கு பல தடவை மனு கொடுத்தும் பலன் இல்லை. மேலும் வாகனம் செல்லக் கூடாது என்று எச்சரித்தும் வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

    இதைக் கண்டித்து பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டார்கள்.

    இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த வழியாக டாரஸ் லாரிகள் செல்லும் போது பல்வேறு விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. தடுக்க வேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. தமிழகத்திலே பெறப்படுகின்ற மனுக்கள் குப்பை தொட்டிக்கு தான் செல்கிறது. பொதுமக்கள் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் இந்த வழியாக செல்லுகின்ற லாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அடுத்த கட்டமாக இந்தப் பகுதி வழியாக வருகின்ற டாரஸ் லாரியை சிறை பிடிக்க போவதாக தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுதா பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் ஜெனட், சதீஷ்குமார், பாலமுருகன், மணி, நவமணி, ஜோசப் ரெத்தின ராஜ், ஏசுமணி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமலிங்கம், கச்சேரி நாகராஜன், கண்ணாடி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், எபநேசர், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
    • அனந்தமங்கலம் - பள்ளிக்கல் செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.5 - லட்சம்

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பைங்குளம் ஊராட்சியில் உள்ள ஊற்றுக்குழி முதல் ஊற்றுக்குழி சர்ச் செல்லும் சாலை, கைசூண்டி மோகன் மருத்துவமனை முதல் பொற்றவிளை செல்லும் சாலை, அனந்தமங்கலம் - பள்ளிக்கல் செல்லும் சாலை ஆகிய மூன்று சாலைகள் பல வருடங்களாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இந்த சாலைகளில் பொது மக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலைகளை காங்கிரீட் சாலைகளாக சீரமைத்து தர வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஊற்றுக்குழி முதல் ஊற்றுக்குழி சர்ச் செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.5 -லட்சமும், கைசூண்டி மோகன் மருத்துவமனை முதல் பொற்றவிளை செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.9 - லட்சமும், அனந்தமங்கலம் - பள்ளிக்கல் செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.5 - லட்சமும் என மூன்று சாலைகளையும் சீரமைக்க மொத்தம் 19 - லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தார்.

    இதையெடுத்து இந்த 3 சாலைகளும் காங்கிரீட் சாலைகளாக சீரமைக்கும் பணிகள் முடிவடை ந்ததையடுத்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. மூன்று சாலைகளையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வங்கியில் இருந்து எடுத்து வந்ததை கண்காணித்து கைவரிசை காட்டிய கும்பல்
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், செப்.20-

    வெள்ளிச்சந்தை அருகே உள்ள பேயோடு சாந்தபுரத்தை சேர்ந்தவர் பெஞ்சமின். இவரது மனைவி மேரி குளோபல் (வயது 72). இவர் நேற்று பேயோடு சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த தனது நகையை வாங்க சென்றார். அங்கு 15 பவுன் நகையை வாங்கி கை பையில் வைத்துக்கொண்டு நாகர்கோவிலுக்கு புதுத்துணி வாங்க அரசு பஸ்சில் வந்தார்.

    அண்ணா பஸ் நிலையத்தில் இறங்கிய மேரி குளோபல் செம்மாங்குடி ரோட்டில் உள்ள கடை ஒன்றில் துணி வாங்க சென்றார். அங்கு வைத்து தனது கை பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 15 பவுன் நகையை காணவில்லை. அதோடு ரூ.15 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.

    இதனால் திகைத்து போன அவர் உடனடியாக பஸ் நிலையத்துக்கும், அங்கிருந்து தான் நடந்து வந்த பாதையிலும் சென்று நகையையும், பணத்தையும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பஸ்சில் வந்த போது தனது நகையையும், பணத்தையும் யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் மேரி குளோபல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வங்கியில் இருந்து மேரி குளோபல் நகை வாங்கி வந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கி றார்கள். இதன் காரணமாக வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீ சார் ஆய்வு செய்து வருகி றார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் இதுபோன்ற நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    ஓடும் பஸ்சில் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    அதே சமயம் நகை திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வரும் கும்பல் நேரடியாக நகை திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    • 23-ந்தேதி நடக்கிறது
    • முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு வருகிற 23-ந்தேதி நடக்கிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் அன்று காலை 10.30 மணிக்கு கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கருத்தரங்கில் மாவட்ட உதவி இயக்குனர் வேலைவாய்ப்பு அலுவலகம், மேலாளர், மாவட்ட தொழில் மையம், மேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், மேலாள், முன்னோடி வங்கி, மேலாளர், நபார்டு வங்கி, உதவி இயக்குனர், கதர் மற்றும் கிராம தொழில்கள், உதவி இயக்குனர், திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் இந்த மாவட்டத்தில் ஏற்கனவே தொழில் அதிபர்களாக உள்ள முன்னாள் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுயதொழில் தொடங்கிட ஆலோசனைகளை வழங்கு கின்றனர்.

    வங்கியிலிருந்து சுய தொழில் கடன்களை பெறுவதற்கும், மானியங்கள் பெறுவதற்கும் இந்த கருத்தரங்கு ஏதுவாக அமையும். சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யார் அவர்? போலீசார் விசாரணை
    • மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கோவ ளம் செல்லும் ரோட்டில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரிய வில்லை. இது பற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு விரைந்து சென்று பிணத்தை கைப் பற்றி விசாரணை நடத்தி னார்கள். அதன் பிறகு அவரது உடல் அங்கு பரி சோதனை செய்யப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த கூட்டத்தில் முடிவு
    • கடல்சார் வாரியம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள படகு தளத்தில் ஒரே ஒரு படகு மட்டுமே நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளது. இதனால் படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் மற்ற படகுகள் ஏற்கனவே சென்ற படகு கரை திரும்பும் வரை கடலில் சுற்றுலா பயணிகளுடன் காத்து நிற்கவேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

    இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் கூடுதல் படகு கட்டும் தளம் அமைக்க அரசுக்கு தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விவேகானந்தர் மண்ட பத்தில் கூடுதலாக படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.20 கோடி செலவில் 100 மீட்டர் நீளத்தில் புதிய படகு தளம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி தொடங்கியது.

    படகு தளம் கட்டுவத ற்காக மொத்தம் 1500 சிமெண்ட் பிளாக்குகள் தயார் செய்யப்பட்டன. இதில் 1200 சிமெண்ட் பிளாக்குகள் மட்டுமே சின்னமுட்டம் துறைமுக த்தில் இருந்து கடல் வழியாக மிதவை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு ராட்சத கிரேன் மூலம் கடலில் இறக்கி நிரப்பும் பணி நடந்த வந்தது.

    இந்த நிலையில் படகு கட்டும் தளம் அமைக்க ப்படுவதால் வாவத்துறை பகுதி மீனவர்கள் தங்க ளுக்கு கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்ய முடியாத ஆபத்தான நிலை இருந்து வருவதாகவும் இந்தப் படகு கட்டும் தளம் அமைக்கப்படுவதன் மூலம் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் கூறி கடும் எதிர்ப்பு தெரிவி த்தனர்.

    இது சம்பந்தமாக வாவ த்துறை பகுதி மீனவர்கள் குமரி மாவட்ட கலெக்ட ரையும் நேரில் சந்தித்து விவேகானந்தர் மண்ட பத்தில் கூடுதல் படகுதளம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து மனு கொடுத்தனர். இதற்கிடையில் வாவத்துறை பகுதி மீனவர்கள் கன்னியா குமரி சட்டமன்ற உறுப்பினர். தளவாய் சுந்தரத்தையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த னர்.

    அதன் அடிப்படையில் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தில் தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. முன்னி லையில் பொதுப் பணி த்துறை அதிகாரிகள் மற்றும் வாவத்துறை பகுதி மீன வர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நேற்று மாலை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையில் குமரி மாவட்ட பொதுப்ப ணித் துறை கட்டிட பிரிவு செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி, உதவி செயற்பொறியாளர் முருகே சன், உதவி பொறியாளர் மாரித்துரை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பழனி, தமிழ்நாடு கடல் சார் வாரிய துறைமுக பாதுகாப்பாளர் தவமணி மற்றும் வாவத்துறைபகுதி மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது இது சம்பந்தமாக தமிழ்நாடு கடல்சார் வாரிய பொறியாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி. நிறுவன பொறியா ளர்களை வரவழைத்து விவேகானந்தர் மண்டப த்தில் மீனவர்களின் மீன்பி டித் தொழில் பாதிக்காத வண்ணம் படகு தளம் அமைப்பது குறித்து ஆய்வு செய்வது என்றும் அதற்காக 20 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் அதிகா ரிகள் உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம்நடந்த இந்த இந்த பேச்சுவார்த்தை முடி வுக்கு வந்தது. அதன் பிறகு மீனவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து அங்குஇருந்து கலைந்து சென்றனர்.

    • இரணியல்-ஆளூர் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ராஜீவ் பிணமாக கிடந்தார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரணியல் :

    வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (வயது 54). இவர் கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வந்தார். தற்பொழுது கேரளாவில் இருந்து ஊருக்கு வந்த ராஜீவ் மீண்டும் கேரளாவிற்கு செல்வதற்கு தயாரானார்.

    இதையடுத்து நேற்று மாலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலை இரணியல்-ஆளூர் ெரயி ல்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ராஜீவ் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இட த்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராஜீவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி ப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜீவ் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜீவ் தற்கொலைக்கான காரணம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    ×