என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஆயிரக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் அந்த குளத்தில் கலந்து வருவதால் தான் மீன்கள் செத்து மிதப்பதாக குற்றச்சாட்டு

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் பெரியகுளம் தற்பொழுது பெய்த மழை யின் காரணமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. பறவை கள் சரணாலயமாக அறிவிக் கப்பட்ட இந்த குளத்தில் தினமும் ஏராளமான வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. இந்த நிலையில் இந்த குளத்தில் நேற்று மாலை திடீரென மீன்கள் செத்து ஒதுங்கியது. நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து பார்வை யிட்டனர். மீன்வளத்துறை அதிகாரிகளும் செத்து போன மீன்களை ஆய்வு செய்தனர். தண்ணீரில் மாசு ஏற்பட்டு ஆக்சிஜன் குறைந்த தால் மீன்கள் செத்து மிதந்து இருக்கலாம் என்று கூறப்படு கிறது. இதுதொடர்பாக விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் அந்த குளத்தில் கலந்து வருவதால் தான் மீன்கள் செத்து மிதப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த பிரச்சனை தொ டர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் கள். மீன்கள் குளத்தில் செத்து மிதப்பதால் துர் நாற்றம் வீசி வருகிறது. குளத்தில் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்து வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    • பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து உயிர் பலி ஏற்படும்
    • ரப்பர் டியூபுகள் பயன்படுத்தி தானாக எப்படி காப்பாற்றி கொள்வது போன்ற ஒத்திகை பயிற்சிகள் நடைபெற்றது.

    களியக்காவிளை :

    வடகிழக்கு பருவமழை காலங்களில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். இந்த வெள்ளப் பெருக்கின் போது, பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து உயிர் பலி ஏற்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை எப்படி காப்பாற்றுவது? என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி குழித்துறை தீயணைப்பு துறை சார்பில் இன்று நடந்தது. நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் வீரர்கள் தத்ரூபமாக இதனை செய்து காட்டினர்.

    வெள்ளப் பெருக்கின் போது, பொது மக்கள் எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி மிதந்து தப்பிப்பது, கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்தால் எப்படி காப்பாற்றி கரை சேர்ப்பது? போன்ற ஒத்திகை பயிற்சிகள் தீயணைப்பு துறை சார்பில் நடை பெற்றது. பிளாஸ்டிக் கேன்கள், வாழைத் தண்டுகள், ரப்பர் டியூபுகள் பயன்படுத்தி தானாக எப்படி காப்பாற்றி கொள்வது போன்ற ஒத்திகை பயிற்சிகள் நடைபெற்றது.

    • நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
    • குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில் :

    குழித்துறை, முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே, அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆலுவிளை, மேல் பறம், மருதங்கோடு, கோட்ட விளை செம்மங்காலை, இடைக்கோடு, மலைக்கோடு, புலியூர் சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத்தெரு, முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, இரையு மன்துறை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலை யாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்கு ளம், சென்னித்தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய இடங்களுக்கும் அவற்றை சுற்றியுள்ள துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • செல்வராஜ கணபதி கோவில் முன் உற்சவர் சிலையை அலங்காரம் செய்து வீதி உலா நடந்தது
    • செக்காலத்தெரு மற்றும் சுற்று வட்டார கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இரணியல் :

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இரணியல் சுற்று வட்டார கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் செல்வராஜ கணபதி கோவில் முன் உற்சவர் சிலையை அலங்காரம் செய்து வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதுபோல் இரணியல் மேலத்தெரு சித்தி விநாயகர் ஆலயம், கீழத்தெரு சிங்க ரட்சக விநாயகர், பட்டாரியர் தெரு, ஆசாரித்தெரு, செக்காலத்தெரு மற்றும் சுற்று வட்டார கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வருகிற 24-ந்தேதி குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் திங்கள்நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று மண்டைக்காடு கடலில் கரைக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

    • கணவன் மனைவி, 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் ஒரு அறையில் கிடந்தனர்.
    • நேசமணி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் தட்டான் விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 30). இவரது மனைவி ரூபா (28). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

    பிரவீன் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கினார்.

    கடன் கொடுத்தவர்கள் பிரவீனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவரால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

    இது குறித்து மனைவி ரூபாவிடம் தெரிவித்தார். இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். நேற்று பிரவீன் விஷ மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அதனை இரவில் குழந்தைகளுக்கு கொடுத்தனர்.

    பின்னர் பிரவினும், ரூபாவும் விஷம் குடித்தனர்.விஷம் குடித்த பிறகு பிரவீன் வீட்டிலிருந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கணவன் மனைவி, 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் ஒரு அறையில் கிடந்தனர். இதை பார்த்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரவீன் அவரது மனைவி ரூபா மற்றும் 2 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் அவரது வீட்டில் இருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில் தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

    ஆனால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் இந்த முடிவை எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • நாகர்கோவிலில் போக்குவரத்தை மாற்றிவிட ஏற்பாடு
    • 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது.

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி குமரி மாவட்டம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

    சிவசேனா சார்பில் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (22-ந்தேதி) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து புறப்ப டும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தன்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கடலுக்கு கொண்டு செல்லப் பட்டு கரைக்கப்படுகிறது.

    23-ந்தேதி இந்து மகா சபா சார்பில் வைக்கப் பட்டுள்ள சிலைகளும், 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும் நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது.

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 10 இடங்களில் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.

    இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை யொட்டி போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையடுத்து போக்குவரத்தை சீர் செய்வது குறித்து போக்கு வரத்து போலீசார் ஆலோசனை மேற்கொண்ட னர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    நாளை (22-ந்தேதி), 23-ந்தேதி, 24-ந்தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா கோவில் திடலில் இருந்து ஆரம்பித்து நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலை களான ஒழுகினசேரி, வட சேரி, டவர் சந்திப்பு, வேப்ப மூடு, அண்ணா பேருந்து நிலையம், கோட்டார், செட்டிகுளம், சவேரியார் சந்திப்பு, கம்பளம், பீச் ரோடு, ஈத்தாமொழி பிரிவு வழியாக சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற் கரைக்கு செல்வதால் மாலை 3 மணி முதல் 6 மணி வரை மேலே குறிப்பிடப்பட்ட சாலைக ளில் போக்குவரத்து நெரி சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வெளியூர் பயணம் செல்பவர்கள், ரெயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சி களுக்கு செல்பவர்கள் தங்களது பயணநேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி பஸ் நிலையத்திலிருந்து அண்ணா பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் இடலாக்குடி, நாயுடு மருத்துவமனை, ரெயில்வே ரோடு வழியாக கோட்டார் ரெயில் நிலை யத்திலிருந்து இயக்கப்படும்.

    மேலும் ராஜாக்கமங்க லம், ஆசாரிப் பள்ளம், பார்வதிபுரம் மார்க்கமாக அண்ணா பஸ் நிலையம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வடசேரி பஸ் நிலையத்தி லிருந்து இயக்கப்படும்.

    மேலும் தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை மார்க்க மாக அண்ணா பஸ் நிலை யம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என பொதுமக்களுக்கு தெரி வித்துக்கொள்ளபடுகிறது. வழித்தடம் மாற்றம் செய்யப்பட்ட நேரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை (சிலை கரைப்பு ஊர்வல மானது நாகர்கோவில் மாநகரை கடந்து செல்லும் வரை) வழித்தடமாற்றம் தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரிய வந்தது.
    • இந்த ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்திலும், 66 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கி றார்கள். பழமை வாய்ந்த இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

    அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோ புரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 17-ந்தேதி நடந்தது. அப்போது பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்ட உத்தரவு கிடைத்தது. அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண் டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபி ஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும் பணி யை தொடங்க வேண்டும் என்றும், சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடப்பதற் காக வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை (22-ந்தேதி) கணபதி ஹோமம் நடக்கிறது. இதற்கிடையில் பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்திலும், 66 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது. இந்த ராஜகோ புரத்தின் மாதிரி வரை படத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனிடம் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் வழங்கினார்.

    • பாலமோரில் 35.2 மில்லி மீட்டர் பதிவு
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 38.05 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நீர்நிலைகளி லும், பாசன குளங்களிலும் தண்ணீர் பெருகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மழை சற்று குறைந்திருந்தது. நேற்று மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள் ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்ப குதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பாலமோரில் அதிகபட்ச மாக 35.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, சுருளோடு, மாம்பழத்துறையாறு, திற்பரப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்தும் அதி கரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 783 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.94 அடியாக இருந்தது. அணைக்கு 924 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 38.05 அடியாக உள்ளது.

    அணைக்கு 355 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 14.8, பெருஞ்சாணி 7.6, சிற்றார்1-7, சிற்றார் 2-2, பூதப்பாண்டி 2.8, களியல் 3.4, கன்னிமார் 12.4, குழித்துறை 2.6, சுருளோடு 10, பாலமோர் 35.2, மாம்பழத்துறையாறு 3, திற்பரப்பு 3.2.

    • 6 ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • ரசாயன பொடி கலந்து கோழி இறைச்சி, கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு பலியானார்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி கள் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

    தமிழகம் முழுவதும் ஓட்டலில் சோதனை நடந்து வருகிறது. குமரி மாவட்டத் தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் குமார் தலைமையில் மாநகர அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கரநாரா யணன் மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை ஆகி யோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் கோர்ட் ரோடு, கேப் ரோடு, ஆசாரிபள்ளம், பார்வதி புரம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. 17 ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோத னையில் 6 ஓட்டல்களில் ரசாயன பொடி கலந்து கோழி இறைச்சி, கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து அங்கிருந்த 25 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 6 ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஓட்டல் களிலும் உணவு பாது காப்பு துறை அதிகாரி களும், சுகாதாரத்து றையினரும் இன்று 2-வது நாளாக சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். உணவு களை பாது காப்பாக வைக்க வேண்டும். தேவையில்லாத ரசாயன பொடிகளை பயன்ப டுத்தக்கூடாது. கெட்டுப்போன உண வுகளை பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • 23-ந் தேதி நடக்கிறது
    • அரங்க போட்டிகள், அரங்கமல்லாத போட்டிகள் என 2 பிரிவுகளாக மொத்தம் 20 போட்டிகள் நடை பெறுகின்றன.

    கருங்கல் :

    கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போ ன்சா கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் வரும் 23-ந் தேதி (சனிக்கிழமை) தமிழகம் மற்றும் கேரள அளவிலான கல்லூரிகள் இடையான கலை இலக்கிய போட்டிகள் நடை பெறுகின்றன.

    அரங்க போட்டிகள், அரங்கமல்லாத போட்டிகள் என 2 பிரிவுகளாக மொத்தம் 20 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இப்போட்டிகள் குறித்து கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் கூறுகையில், கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைத் திறனுக்குக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு களமாக இப்போட்டிகள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளன.

    20 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழகம் மற்றும் கேரள அளவிலான கல்லூரிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, மாணவ மாணவிகளின் திறமைக்குக் களம் அமைத்து கொடுக்கும் நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாபெரும் கலை இலக்கிய போட்டிகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்திட வேண்டும் என்றார்.

    இப்போட்டியினைக் கல்லூரி கவின்கலை மன்றம் ஒருங்கிணைப்பு செய்துள்ளது

    • 72 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை பரப்பளவு உள்ளது
    • மாணவ- மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார் தலைமை தாங்கினார்.

    பேரிடர் காலங்களில் கட்டிடத்தின் மாடியில் சிக்கி இருப்பவர்களை மீட்பது எப்படி? வெள்ளத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக ஒத்திகை செய்து காட்டினர்.

    கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் தண்ணீரில் சிக்கினால் எப்படி தற்காத்துக் கொள்வது? என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி மூலமாக மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரை 72 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை பரப்பளவு உள்ளது. மேலும் மலைகள் அதிகம் இருப்பதால் மழைப்பொழிவு அதிகம் இருக்கும். எனவே வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மழை காலங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். பேரிடரில் சிக்கிக் கொண்டால் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவ- மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக குவிந்த பொதுமக்கள்
    • 9 இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், செப்.20-கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 75 சதவீதம் பேருக்கு உரிமை தொகை கிடைத்துள்ளது. பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. நிராகரிப்பு குறித்து இதுவரை செல்போனில் எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை. எனவே கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தை பொருத்த வரை அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் திருவட்டார் ஆகிய 6 தாலுகா அலுவலகங்கள் மற்றும் நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் என மொத்தம் 9 இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த மையங்களில் 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்த பலரும் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஏராளமான பொதுமக்கள் உதவி மையங்களுக்கு வந்திருந்தனர். ஆனால் சர்வர் செயல்படாதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி மையத்திற்கு இன்று 2-வது நாளாக காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அவர்கள் உதவி மையங்களில் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டு காத்திருந்தனர். காலை 10.15 மணிக்கு உதவி மைய ஊழியர்கள் ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டை சரி பார்த்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தனர்.

    சிலருக்கு வங்கி கணக்கு குளறுபடி, வருமான வரி பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உதவி மையங்களுக்கு வந்த பொதுமக்களின் முகவரிகள் மற்றும் செல்போன் எண்களை பதிவு செய்துவிட்டு ஆன்லைன் மூலமாக குறைபாடுகளை பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதே போல் தாலுகா அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ×