search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோணம் அரசு கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஓத்திகை பயிற்சி
    X

    கோணம் அரசு கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஓத்திகை பயிற்சி

    • 72 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை பரப்பளவு உள்ளது
    • மாணவ- மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார் தலைமை தாங்கினார்.

    பேரிடர் காலங்களில் கட்டிடத்தின் மாடியில் சிக்கி இருப்பவர்களை மீட்பது எப்படி? வெள்ளத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக ஒத்திகை செய்து காட்டினர்.

    கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் தண்ணீரில் சிக்கினால் எப்படி தற்காத்துக் கொள்வது? என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி மூலமாக மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரை 72 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை பரப்பளவு உள்ளது. மேலும் மலைகள் அதிகம் இருப்பதால் மழைப்பொழிவு அதிகம் இருக்கும். எனவே வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மழை காலங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். பேரிடரில் சிக்கிக் கொண்டால் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவ- மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×