என் மலர்
கன்னியாகுமரி
- நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குமரி மாவட்ட மீன் சந்தைகளுக்கு இன்று மீன்வரத்து இல்லை.
- கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் தங்களின் வருவாய் பாதித்திருப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் மீனவர்கள் கடும் சிரமத்துடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மழைக்கு மத்தியில் பலத்த காற்றும் வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி மிகவும் ஆக்ரோஷமாக அடித்து வருகிறது.
கடல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி குமரி மாவட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், புதுகிராமம், மணக்குடி, கீழமணக்குடி, சிலுவை நகர் உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களுக்கு சொந்தமான நாட்டுப் படகுகள், வள்ளம், கட்டு மரங்களை கடற்கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருக்கின்றனர்.
நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குமரி மாவட்ட மீன் சந்தைகளுக்கு இன்று மீன்வரத்து இல்லை. இதனால் கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், சின்ன முட்டம் மீன் சந்தைகள் மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் தங்களின் வருவாய் பாதித்திருப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
குளச்சலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000-த்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன் பிடித்து வருகிறார்கள். சில நாட்களாக குளச்சல் பகுதியில் மழை காணப்படுகிறது.
கடலுக்குள் பலத்த காற்று அடிக்கும் காரணத்தால் சில சமயங்களில் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் அதிகமாக மீன் பிடிக்க செல்லாமல் இருக்கும். தற்போது இரு தினங்களாக குளச்சல் கடல் பகுதியில் கடலுக்குள் காற்றழுத்தம் காணப்படுவதால், காற்றின் காரணமாகவும் அதிகமான பைபர் வளங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
சில விசைப்படகுகள் இன்று கரை திரும்பின. அந்த விசைப்படகுகளில் குறைந்த அளவே கணவாய் மீன்கள் கிடைத்தன. அதை வியாபாரிகள் ஏலம் விட்டு எடுத்தனர். பைபர் வள்ளங்களில் அதிகமான மீன்கள் இன்று வரவில்லை. இதனால் இன்று மீன்கள் வரத்து குறைந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் தட்டான் விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் பிரவீன் (30), மர வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ரூபா (28). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர். பிரவீனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் பிரவீன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் விஷ மாத்திரையை குழந்தைகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது குழந்தைகள் அதை சாப்பிடாமல் துப்பி உள்ளது.
பின்னர் கணவன்-மனைவி இருவரும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளனர். தனது சகோதரரிடம் சென்று தானும் மனைவியும் விஷம் தின்று விட்டதாக கூறியுள்ளார். உடனே அவரது சகோதரர் பிரவீனையும், ரூபாவையும் சிகிச்சைக்காக பீச் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ரூபா நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். பிரவீனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் பிரவீனும் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து பிரவீன், ரூபா இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரவீன், ரூபா தற்கொலைக்கான காரணம் குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக பிரவீன், மனைவியுடன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
தொழிலில் ஏற்பட்ட கஷ்டத்தால் இந்த முடிவை எடுத்துக்கொள்வதாகவும் தனக்கு சொந்தமானவற்றை விற்று கடனை கொடுத்து விடுங்கள் என்றும் கூறியிருந்தார். தற்கொலை செய்து கொண்ட பிரவீன் முதலில் பன்றி பண்ணை ஒன்றை வைத்துள்ளார். அதில் போதிய அளவு லாபம் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் மர வியாபாரம் செய்துள்ளார். மேலும் கான்கிரீட் போட பயன்படுத்தப்படும் பலகை, வீடு கட்டும் உபயோகப்படுத்தப்படும் மர சாமான்களை வாங்கியும் விற்பனை செய்துள்ளார்.
அடுத்தடுத்து தொழிலில் நஷ்டம் ஏற்படவே பிரவீன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் பிரவீன் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லாட்டரி சீட்டில் அவருக்கு பணம் கிடைக்கும் என்று நம்பி இருந்தார். அந்த பணத்தின் மூலம் கடனை அடைத்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் லாட்டரி சீட்டிலும் அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட பிரவீன், ரூபாவின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானவர் அங்கு திரண்டு உள்ளனர்.
பிரவீன், ரூபா தம்பதியினரின் 2 குழந்தைகளும் பாட்டியின் பராமரிப்பில் தற்போது உள்ளது. கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
- 25 சதவீதங்கள் மட்டுமே வேளாண் துறை மூலம் வழங்கப்படும்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:-
குமரி மாவட்டம் முழுவதும் தற்பொழுது சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், பறக்கை உட்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் விதை நெல் தட்டுப்பாடு உள்ளது.
உழவர் செயலி மூலம் தகவலை தெரிந்து கொள்ளலாம் என்றால் விதை நெல் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் தங்கு தடை இன்றி வழங்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது பொன்மணி, திருப்பதிசாரம் 3 விதை நெல்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பொன்மணி ரக நெல்லை இனி பயிர் செய்தால் காலதாமதம் ஏற்படும். எனவே திருப்பதி சாரம் 3 ரக நெல்லை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. தாழக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. திருப்பதி சாரத்திலுள்ள வேளாண் விதை மையத்தில் 12 ஏக்கர் நிலம் தரிசாக போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் அதை பயன்படுத்தாவிட்டால் விவசாயிகளுக்கு அந்த விதை பண்ணையை குத்தகைக்கு வழங்க வேண்டும். அதில் விவசாயிகள் பயிர் செய்வார்கள்.
செண்பகராமன்புதூர் பகுதியில் தென்னை மேம்பாட்டு கழகம் பல ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் தற்போது பொன்மணி, திருப்பதி சாரம் 3 ரக நெல்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2-வது பருவத்தில் 5,845 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதங்கள் மட்டுமே வேளாண் துறை மூலம் வழங்கப்படும். மீதமுள்ள விதை நெல்களை விவசாயிகளே தயார் செய்து விடுவார்கள்.
அதன் அடிப்படையில் தற்போது 92 டன் விதை நெல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவை என்றால் சம்பந்தப்பட்ட வேளாண் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பதி சாரத்தில் 40 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட பிறகு 30 ஏக்கர் வேளாண் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 17 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டது. இனி வரும் பருவத்தில் 31 ஏக்கரில் நெல் விதை பயிர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நாகர்கோவில் அருகே உள்ள களியங்காட்டில் நடந்தது
- மலர் மகளிர் அமைப்பு கவுரவத்தலைவர் செலின்மேரி தலைமை தாங்கினார்
நாகர்கோவில் :
சமூக பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு குமரி மாவட்ட மலர் மகளிர் அமைப்பு, கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் கன்னியாகுமரி ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி சிறு தானிய உணவு திருவிழா மற்றும் சிறுதானிய உணவு தயாரித்தல் விழிப்புணர்வு பயிற்சி நாகர்கோவில் அருகே உள்ள களியங்காட்டில் நடந்தது.
மலர் மகளிர் அமைப்பு கவுரவத்தலைவர் செலின்மேரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் லிட்வின் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் மேரி ேஜாஸ்பின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் சன்லைட் நல்வாழ்வியல் மையம் பயிற்சியாளர் டாக்டர் அரசு மற்றும் அலமேலு மங்கை நாச்சியார், அனிஷா, ராஜகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- செந்தூராம் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சியில் 20-வது வார்டுக்குட்பட்ட பிருந்தாவன் காலனியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 36-வது வார்டுக்குட்பட்ட செந்தூராம் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 38-வது வார்டுக்குட்பட்ட பாரதி தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவை நடைபெற உள்ளது. இந்த பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் ஆன்றோ ஸ்னைடா, ரமேஷ், சுப்பிரமணியம், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- 1000 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்
- வீராங்கனைக்கு நிதி உதவியும் வழங்கினார்.
கன்னியாகுமரி :
மாநில அளவிலான 37-வது இளையோர் தடகள போட்டியில் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி தனுஷா நீளம் தாண்டும் போட்டி மற்றும் 1000 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
இவர் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள் ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு வாழ்த்துக் களையும், பாராட்டுக்களை யும் தெரிவித்தார். மேலும் அந்த வீராங்கனைக்கு நிதி உதவியும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ஜான் சன், மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், வார்டு செயலாளர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் துணை தலைவர் அரிகிருஷ்ண பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது
- கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதிக்கு ஏறிச் செல்வதற்கு வசதியாக 139 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கன்னியாகுமரி :
இந்தியாவில் 182-க்கும் மேற்பட்ட கலங்கரை விளக்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் முதல் கலங்கரை விளக்கம் 1796-ம் ஆண்டில் சென்னையில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மகாபலிபுரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மணப்பாடு, முட்டம், கன்னியாகுமரி உள்பட பல பகுதிகளில் கலங்கரை விளக்கம் ஏற்படுத்தப்பட்டன.
கன்னியாகுமரியில் புதிய பஸ்நிலையத்துக்கு செல்லும் கோவளம் ரோட்டில் கலங்கரை விளக் கம் அமைந்து உள்ளது. இந்த கலங்கரை விளக்கம் தரைமட்டத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்திலிருந்து 180 மீட்டர் உயரத்திலும் அமைந்து உள்ளது. கடற்கரைப் பகுதியில் இருந்து 29 மீட்டர் தொலைவுக்கு நன்றாக வெளிச்சம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதிக்கு ஏறிச் செல்வதற்கு வசதியாக 139 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 3 மணி முதல் 6.30 மணி வரையிலும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் பயணிகளுக்கு ரூ.10-ம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.25-ம், சிறுவர்களுக்கு ரூ.5-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கிடையில் மும்பை யில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கப்பல்கள் மற்றும் தீவிர வாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 2012-ம் ஆண்டு இந்த கலங்கரை விளக்கத்தில் ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் நவீன"ரேடார்"கருவி பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகள் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி நின்று பார்ப்பதற்கு வசதி யாக "லிப்ட்" வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
1927-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட கலங்கரை விளக்கம் பாதுகாப்பு சட்டத்தின் படி ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21-ந்தேதி இந்திய கலங்கரை விளக்க தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி யில் உள்ள கலங்கரை விளக்கத்தில் 96-வது இந்திய கலங்கரை விளக்க தினம் கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சுதந்திரக் கொடி மற்றும் கலங்கரை விளக்கதுறையின் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கலங்கரை விளக்க அதிகாரி பிரகாஷ் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து பேசினார். கலங்கரை விளக்க தொழில் நுட்ப உதவியாளர்கள் சுரேஷ், வினோத்குமார் ஆகியோர் கலங்கரை விளக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்பம் பற்றி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலங்கரை விளக்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலங்கரை விளக்கத்தில் "லிப்ட்" வசதி செய்யப்பட்ட பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 24 ஆயிரத்து 127 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர். இதில் 120 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவார்கள். கலங்கரை விளக்கு தினத்தை யொட்டி கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் இன்று இலவச மாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
- சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை (22-ந் தேதி) முதல் 3 நாட்கள் செயல்படாது.
நாகர்கோவில் :
விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த சிலைகள் விஜர்சனத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ஊர்வலம் நடை பெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை (22-ந் தேதி) முதல் 3 நாட்கள் செயல்படாது.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
- கோர்ட்டு உத்தரவு எதிரொலி
- அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் சீல் வைத்து பூட்டி கையகப்படுத்தினர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 36 சென்ட்பரப்பளவு உள்ள தானிய களஞ்சியம் கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் அருகில் அமைந்துள்ளது.
இந்த இடம் தனிப்பட்ட நிறுவனத்தின் கையில் பல வருடங்களாக இருந்து வந்தது. இந்த யாத்திரிகர்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்த இந்த இடத்தை மீட்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்க ளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய தைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடத்தை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர்ரத்தின வேல் பாண்டியன்தலைமையில் நாகர்கோவில் இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் தங்கம் முன்னி லையில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், ஆய்வாளர் சுஜித், மரமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் சீல் வைத்து பூட்டி கையகப்படுத்தினர்.
இந்த சொத்தின் மதிப்பு ரூ.18 கோடி ஆகும். இதனை எதிர்த்து இந்து யாத்திரிகள்தங்கும்விடுதி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி இந்து யாத்திரிகர்கள் தங்கும் விடுதியில் சீலை திறந்து அவர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி கன்னியாகுமரி சன்னதி தெருவில்சீல்வைத்து பூட்டி வைக்கப்பட்டு இருந்த இந்து யாத்திரிகர்கள் தங்கும்விடுதி 2 மாதங்களுக்கு பிறகு சீல் திறக்கப்பட்டு இந்து யாத்திரிகர்கள் தங்கும்விடுதி பொறுப்பாளர் எம்.எஸ்.மணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
- மாற்றுப்பாதையில் போக்குவரத்து இயக்கம்
- மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகவும் பிரதான சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டாகும்.
தென்தாமரைகுளம் :
சந்தையடி ஊரில் 2ரெயில்வே கேட்டுகள் உள்ளது. இதில் ஒன்று சந்தை யடி ஊருக்குள் செல்லும் வழியிலும், மற்றொன்று கோட்டையடியிலிருந்து கொட்டாரம் செல்லும் சாலையில் சந்தையடியில் உள்ளது. இந்த ரெயில்வே கேட் சந்தையடி, இடை யன்விளை, வெள்ளையன் தோப்பு, ஈச்சன்விளை, மேலசந்தையடி, விஜயநகரி, கரும்பாட்டூர், கோட்டையடி ஆகிய பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகவும் பிரதான சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டாகும்.
அந்த இடத்தில் இரட்டைரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (21-ந்தேதி) மாலை6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை ரெயில்வே கேட் மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்தையடி ஊரில்உள்ள மற்றொரு கேட்டு அடைக்கப்படாததால் அந்த கேட் வழியாக வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் ஊர் மக்களின் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கு அறிவிப்பு பலகை ரெயில்வே நிர்வாகம் சார்பில் வைக்க ப்பட்டுள்ளது.
- சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
- இரணியல் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இரணியல் :
இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கில் ஜெயிலில் இருந்த ஒரு நபரை நீதிமன்றம் அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது அவர் தலக்குளம், கள்ளியங்காடு பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர் என தெரிய வந்தது. விசாரணையில் அவர் முளகுமூடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (வயது 42) என்பதும், திருவட்டார் பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கொலை செய்தது தெரியவந்தது. மேலும் நாகர்கோவில் பிரபல துணிக்கடையின் பின்புறம் நடந்த செயின் பறிப்பு வழக்கில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட விபரம் தெரியவந்தது. அவரை இரணியல் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடந்தது
கன்னியாகுமரி :
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் மாதந்தோறும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்த மாதம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலைஞரும் சங்கத்தமிழும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் ஆசிரியர் சிவதாணு, ஆசிரியை குறமகள் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். போட்டியில் மாணவர் அண்ணாமலை, மாணவிகள் சுப்பிரஜா, ஜியுபிளமிங், ஆஸ்லின் அபீஷ்மா, ஆன்றனி வித்யா ஆகியோர் வெற்றி யாளர்களாக அறிவிக்கப்பட்ட னர்.
தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் "அமரர் கலைஞருக்கு சூட்டும் வெண்பா மலர் 100" என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஓவியர் வை.கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி தலைமை தாங்கினார். பன்னாட்டு தமிழ் உறவு மன்ற இளங்கோ நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். கலைவாசல் அமைப்பின் தலைவர் குமரி எழிலன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.
நூலாசிரியர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் பொதுச்செயலாளர் புலவர் சிவதாணு ஏற்புரை ஆற்றி னார். அதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.
முடிவில் ஆசிரியை குறமகள் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி அரசு அருங் காட்சியக பணியாளர்கள் செய்து இருந்தனர்.






