சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள்

23-ந் தேதி நடக்கிறதுஅரங்க போட்டிகள், அரங்கமல்லாத போட்டிகள் என 2 பிரிவுகளாக மொத்தம் 20 போட்டிகள் நடை பெறுகின்றன.
சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள்
Published on

கருங்கல் :

கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போ ன்சா கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் வரும் 23-ந் தேதி (சனிக்கிழமை) தமிழகம் மற்றும் கேரள அளவிலான கல்லூரிகள் இடையான கலை இலக்கிய போட்டிகள் நடை பெறுகின்றன.

அரங்க போட்டிகள், அரங்கமல்லாத போட்டிகள் என 2 பிரிவுகளாக மொத்தம் 20 போட்டிகள் நடைபெறுகின்றன.

இப்போட்டிகள் குறித்து கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் கூறுகையில், கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைத் திறனுக்குக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு களமாக இப்போட்டிகள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளன.

20 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழகம் மற்றும் கேரள அளவிலான கல்லூரிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மாணவ மாணவிகளின் திறமைக்குக் களம் அமைத்து கொடுக்கும் நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாபெரும் கலை இலக்கிய போட்டிகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்திட வேண்டும் என்றார்.

இப்போட்டியினைக் கல்லூரி கவின்கலை மன்றம் ஒருங்கிணைப்பு செய்துள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com