குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை

பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து உயிர் பலி ஏற்படும் ரப்பர் டியூபுகள் பயன்படுத்தி தானாக எப்படி காப்பாற்றி கொள்வது போன்ற ஒத்திகை பயிற்சிகள் நடைபெற்றது.
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை
Published on

களியக்காவிளை :

வடகிழக்கு பருவமழை காலங்களில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். இந்த வெள்ளப் பெருக்கின் போது, பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து உயிர் பலி ஏற்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை எப்படி காப்பாற்றுவது? என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி குழித்துறை தீயணைப்பு துறை சார்பில் இன்று நடந்தது. நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் வீரர்கள் தத்ரூபமாக இதனை செய்து காட்டினர்.

வெள்ளப் பெருக்கின் போது, பொது மக்கள் எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி மிதந்து தப்பிப்பது, கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்தால் எப்படி காப்பாற்றி கரை சேர்ப்பது? போன்ற ஒத்திகை பயிற்சிகள் தீயணைப்பு துறை சார்பில் நடை பெற்றது. பிளாஸ்டிக் கேன்கள், வாழைத் தண்டுகள், ரப்பர் டியூபுகள் பயன்படுத்தி தானாக எப்படி காப்பாற்றி கொள்வது போன்ற ஒத்திகை பயிற்சிகள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com