இரணியலில் விநாயகர் சிலை வீதி உலா

செல்வராஜ கணபதி கோவில் முன் உற்சவர் சிலையை அலங்காரம் செய்து வீதி உலா நடந்ததுசெக்காலத்தெரு மற்றும் சுற்று வட்டார கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இரணியலில் விநாயகர் சிலை வீதி உலா
Published on

இரணியல் :

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இரணியல் சுற்று வட்டார கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் செல்வராஜ கணபதி கோவில் முன் உற்சவர் சிலையை அலங்காரம் செய்து வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதுபோல் இரணியல் மேலத்தெரு சித்தி விநாயகர் ஆலயம், கீழத்தெரு சிங்க ரட்சக விநாயகர், பட்டாரியர் தெரு, ஆசாரித்தெரு, செக்காலத்தெரு மற்றும் சுற்று வட்டார கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வருகிற 24-ந்தேதி குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் திங்கள்நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று மண்டைக்காடு கடலில் கரைக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com