என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
    X

    குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

    • மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • க்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை செல்ஜின் அனீஸ் பரிதாபமாக இறந்தார்.

    குளச்சல்:

    குளச்சல் அருகே உள்ள கொடும்பனை சிலுவையா தெருவைச் சேர்ந்தவர் செல்வம், மீன்பிடி தொழிலாளி.

    இவரது மகன் செல்ஜின் அனீஸ் (வயது 22). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் குருசடி திருவிழாவில் பங்கேற்பதற்காக செல்ஜின் அனீஸ் ஊருக்கு வந்தார். நேற்று மாலை அவர் தனது நண்பனின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு வெளியில் சென்றார்.

    வாணியக்குடி ஆரோக்கியமாதா குருசடி சாலையில் செல்ஜின் அனீஸ் சென்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    இந்த விபத்தில் செல்ஜின் அனீஸ் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை செல்ஜின் அனீஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தந்தை செல்வம் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    குருசடி விழாவுக்கு வந்த கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் குளச்சல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×