என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • கன்னியாகுமரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட தெற்கு பகவதிபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர், கோரிக்கை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டில் இருந்து ரூ12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அந்த பணி முடிவடைந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கே.டி. உதயம் வட்டார தலைவர் கால பெருமாள், பேரூராட்சி தலைவி அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத் தலைவர் ஆன்றோ ஆண்ட்ரூஸ், திட்டக்குழு உறுப்பினர் ஆதிலிங்கபெருமாள், கன்னியாகுமரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விஜய்வசந்த் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார்.
    • கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    வைக்கலூர் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து செல்லப்பட்ட வீடு மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார்.


    இந்த நிகழ்வில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • அப்துல்கலாம் வேடமணிந்து வந்த பிளஸ்-1 மாணவன் தீபக் லியோ ரோச் தேசியகொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
    • மாணவர்களுக்கு முதல் 3 பரிசுகள் பள்ளி தலைவரால் வழங்கப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்க லாம் பிறந்த நாள் கொண்டா டப்பட்டது. பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முது நிலை முதல்வர் முன்னிலை வகித்தார்.சிறுவயதில் தமிழ் வழி கல்வி பயின்று விண்வெளி துறையில் சாதனைகள் படைத்த அப்து ல்கலாமின் பொன்மொழிகள், கவிதை, சிறப்புரை துணுக்கு முதலான பல நிகழ்ச்சிகள் காலை கூடுகையில் நடை பெற்றன. அப்துல்கலாம் வேடமணிந்து வந்த பிளஸ்-1 மாணவன் தீபக் லியோ ரோச் தேசியகொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்துல்கலாம் போல் வேடமணிந்து வந்த மாண வர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு முதல் 3 பரிசுகள் பள்ளி தலைவரால் வழங்கப்பட்டது.

    இந்தியாவின் ஏவுகணை யின் நாயகன் அப்துல்க லாமின் படைப்புகளை நினைவு கூறும் வகையில் மழலையர்களின் படைப்பு களான ராக்கெட் கண்காட்சி மழலையர்களால் விளக்க வுரையுடன் நடத்தப்பட்டது. மேலும் மழலையர்களால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பிடித்தம் செய்த தொகையை திரும்பி வழங்க கோரிக்கை
    • கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக 92 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடம் மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து சேமிப்பு நிதி மற்றும் மருத்துவ படியை பிடித்தம் செய்து வந்தனர். அந்த நிதியை ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் திரும்பி வழங்க கோரி இன்று காலை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து "திடீர்"என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் துப்புரவு பணிக்காக பயன்படுத்தும் மண்வெட்டி, கூடை மற்றும் உபகரணங்களை கையில் வைத்திருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழி லாளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இதில் அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்த சேமிப்பு நிதி மற்றும் மருத்துவ படியை திரும்பி வழங்கு வதற்கான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • தாசில்தார் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் உடன்பாடு
    • கனரக வாகனத்தில் இருந்து பாறாங்கல் விழுந்த விவகாரம்

    பூதப்பாண்டி :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முறையான அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் செல்லும் கனரக லாரிகளால் விபத்துகளும், சாலை சேதமும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 10 சக்கரங்களுக்கு மேலான கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தடை விதித்தார்.

    ஆனால் லாரி உரிமை யாளர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவுக்கு அவகாசம் பெற்றனர். இதனை தொடர்ந்து கனிமவளங்கள் ஏற்றிய கனரக லாரிகள் மீண்டும் செல்லத் தொடங்கின.

    கடந்த வாரம் இறச்சகுளம்-களியங்காடு வழியாக ஒரு கனரக வாகனம், கனிமவளங்களை ஏற்றிச் சென்றது. அப்போது அந்த லாரியில் இருந்து பெரிய பாறாங்கல் சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சாலையில் அப்போது யாரும் இல்லாததால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. அதே நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை போலீசாரதும் அதிகாரிகளும் சமரசம் செய்தனர். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தன். இதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    அதிகாரிகள் கொடுத்த காலக்கெடு முடிந்த நிலையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இன்று காலை தோவாளை தாசில்தார் வினைதீர்த்தான் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறச்சகுளம்-களியங்காடு சாலையில் இரு வழியாகவும் கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளதாகவும், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் அந்த வழியாகச் செல்லும் கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் செல்ல தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக 15 நாட்களில் முடிவு செய்வது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    அவர்கள் கூறுகையில்,15 நாட்களில் உறுதியான முடிவு காணப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றி தழ்கள் வழங்கி பாராட்டினார்
    • கண்காணிப்பாளர் லட்சுமிபதி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திரு மலை திருப்பதி தேவஸ்தா னத்தின் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி நேற்று இரவு ஒரே நேரத்தில் 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார்கள். இந்த பரத நாட்டியத்தில் கலந்து கொண்ட நடன பெண் கலை ஞர்களுக்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றி தழ்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் கேமதர் ரெட்டி, கோவில் சேவகர்கள் ஜெய ராம், கண்ணன், நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் சிவகு மார் மற்றும் திருமலை திருப்பதி தேவ ஸ்தான விஜி லென்ஸ் அதிகாரி விஷ்ணு ராம், கண்காணிப்பாளர் லட்சுமிபதி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடித்து செல்வதாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது

    குளச்சல் :

    குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்பட குகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.

    கட்டுமரம்,வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.இந்த மீனவ ர்கள் தூண்டிலை பயன்ப டுத்தி மீன் பிடிக்கி ன்றனர்.இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த கட்டுமங்கள் தடை செய்யப்பட்ட 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடித்து செல்வதாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து விடுகிறது என்றும், மீன்கள் உற்பத்தி பாதிக்க ப்படுகிறது என்றும், இதனால் கட்டுமர மீனவ ர்களின் வாழ்வ தாரம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் இந்த 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை கண்டித்து குளச்சலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.

    இதில் பாதர் தாமஸ் கொச்சேரி மீன் பிடி தொழிலாளர்கள் யூனியன் உள்பட குளச்சல் 4 சங்கங்கள் மற்றும் கொட் டில்பாடு,சைமன்காலனி ஆகிய ஊரை சேர்ந்த கட்டுமர மீனவர்களும் கலந்து கொண்டனர்.மீன் பிடிக்க செல்லாத கட்டு மரங்கள் மணற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது.

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடிமைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு பகுதியான அஞ்சுகூட்டு விளை அருந்ததியர் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில்இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடிமைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநா தன்,பேரூராட்சி 15- வது வார்டு கவுன்சிலர் பூலோகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி பாராளு மன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் சாம் சுரேஷ்குமார், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், முன்னாள் பேரூரா ட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு வயல் வழியில் வெள்ளம் செல்கிறது.

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களான பேச்சி பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, சிற்றாறு, ஒருநூறாம்வயல், கற்றுவா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழையும், கனமழையும் பெய்து வருவதால், நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.இதனால் ஆறுகள், கால்வாய்கள், குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பிரதான, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குமரியில் உள்ள பிரதான அணை களான பேச்சி பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -1,சிற்றாறு -2 ஆகிய அணைகள் முழு கொள்ள ளவை எட்டி வருகிறது.மேலும் அதிக அளவில் வெள்ளம் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.இந் நிலையில் சிதறால் மலை கோயிலை அடுத்த திக்குறிச்சி ஏலா பகுதியில் 40 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாழை மரச்சீனி, தென்னை ஆகியவை மூழ்கியுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வயல் வழியில் வெள்ளம் செல்கிறது. இதனால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது.இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    • போலீசார் அதிரடி நடவடிக்கை
    • தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    தக்கலை :

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று மாலை பழைய பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமன்பறம்பு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 29) மற்றும் சடையமங்கலம் பகுதியை சேர்ந்த சிவகுமார் (45) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்தனர். இருவரும் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சிக்கவும் அவர்களை போலீசார் பிடித்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    பரிசோதனையில் இவர்கள் இருவரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றது உறுதியானது. பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி கோவிலில் நவராத்திரி 1-ம் திருவிழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நேற்று தொடங்கியது. 1-ம் திருவிழாவான நேற்று மாலை நாதஸ்வர கச்சேரியும், தொடர்ந்து ஆன்மீக அருள் உரையும் நடந்தது. இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசை கச்சேரி நடந்தது.

    பின்னர் 9 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக் கப்பட்ட யானை முன்சென்றது. நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் கெங்கா ஜூவல்லர்ஸ் அதிபர்கள் பகவதியப்பன், கெங்காதரன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் வசந்தகுமாரி, வணிகவரி மற்றும் விற்பனை ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    2-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்கா ரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

    மாலை 6 மணிக்கு ஆன்மீக அருளுரையும், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. 8 மணிக்கு வணிக வரித்துறை சார்பில் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    • ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை பரிசு பெற்று சாதனை

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான இறகு பந்தாட்ட போட்டியில் பங்கேற்றனர். இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டியில் ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை பரிசு பெற்று சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர்கள் சபரீஷ், காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரியின் தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×