search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுள்ளிவிளை ஊராட்சியில் குவிந்து கிடக்கும் கழிவுகளால் டெங்கு பரவும் அபாயம்
    X

    நுள்ளிவிளை ஊராட்சியில் குவிந்து கிடக்கும் கழிவுகளால் டெங்கு பரவும் அபாயம்

    • உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
    • தெரு நாய்கள் மாமிச உணவுகள் ஏதும் இருந்தால் அதனை கிண்டி கிளறி சேறும் சக்தியாக மாற்றி விடுகிறது.

    இரணியல் :

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நுள்ளிவிளை ஊராட்சியில் வள்ளி ஆற்றின் கரை கண்டன் விளை ெரயில் பாதை அருகே பேயன் குழி மற்றும் மாடத்தட்டு விளை பகுதிகளில் வீடுகளில் இருந்து குப்பைகள் கோழி இறைச்சி கழிவுகள் மாமிச உணவுகளின் மீதம் ஆகியவை கொட்டப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனை நுள்ளிவிளை ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அப்புறப்படுத்தாத நிலை காணப்படுகிறது. மேலும் அப்பகுதி வீடுகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் மழைநீர் ஓடையில் பாய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது . மேலும் தெரு நாய்கள் மாமிச உணவுகள் ஏதும் இருந்தால் அதனை கிண்டி கிளறி சேறும் சக்தியாக மாற்றி விடுகிறது. மழைக்காலம் தொடங்கி விட்டதால் தேங்கி நிற்கும் கழிவுநீர் மூலம் டெங்கு மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் ரீங்காரம் இட்டு நுள்ளிவிளை ஊராட்சியில் சுற்றி வரும் நிலை காணப்படுகிறது. மர்ம காய்ச்சலால் மரணங்கள் பல நிகழும் முன்பு மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×