என் மலர்
கன்னியாகுமரி
- பொது மேலாளரிடம் கோரிக்கை மனு
- கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து தற்போது வரை இயக்கபடவில்லை.
என்.ஜி.ஓ.காலனி :
நாகர்கோவில் மாநக ராட்சி 50-வது வார்டுக் குட்பட்ட பொட்டல் விளை, வண்டிகுடியிருப்பு கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு முகிலன் விளை, என்.ஜி.ஓ.காலனி வழியாக நாகர்கோவிலுக்கு செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவல கங்களில் பணிபுரிபவர்க ளுக்கும் செல்வதற்கு சிரம மாக இருந்து வருகின்றனர்.
இதற்கு முன் இந்த வழித்தடத்தில் 37 ஏ நாகர்கோவிலில் இருந்து பேருந்து இந்த வழித்தடத்தில் இயங்கி கொண்டு இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து தற்போது வரை இயக்கபடவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரும், பா.ஜ.க.பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவருமான ஜவான் டி.அய்யப்பனிடம் கோரிக்கை வைத்தார்கள். அவர் நிறுத்தப்பட்ட அந்த பேருந்தை மீண்டும் இயக்க நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியிடம் நேரில் சென்று வலியுறுத்தினார். உடனடியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ராணித்தோட்ட பொது மேலாளரை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வும், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான்.டி.அய்யப்பனும் சேர்ந்து நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தினார்கள்.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- கன்னியாகுமரி கோவிலில் நவராத்திரி 2-ம் திருவிழா
கன்னியாகுமரி :
உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாள் திருவிழா நேற்று வணிக வரித்துறை சார்பில் நடந்தது.
இதையொட்டி நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. இரவு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை முன்செல்ல வெள்ளிக்கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.
3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 3-ம்திருவிழாவான இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வருவாய்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11-30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக அருள் உரையும் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
- வெகுஜன ஊடக பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டப்பிரிவில் ஊரக பகுதிகளில் சுகாதா ரம், திட, திரவக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் தகவல், கல்வி, தொடர்பு பணிகளை மேற்கொள்ள புறச்சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து மாவட்ட திட்ட மேலாண்மை அலகிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரத்தில் 2 பணியிடங்களும், திரவக்கழிவு மேலாண்மை ஒரு பணியிடமும் உள்ளன. இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது இளங்கலை கட்டிட பொறி யாளர் விண்ணப்பிக்கலாம்.
தகவல், கல்வி தொடர்பு குழு 2 பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி வெகுஜன தொடர்பு, வெகுஜன ஊடக பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பிக்க நாளை (18-ந்தேதி) கடைசி நாள் ஆகும். நேர்முக தேர்வு அக்டோபர் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, தூய்மை பாரதம் இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாகர்கோவில்-1 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு drdakkmspare@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- சமபந்தி விருந்தை வழக்கறிஞர் தாமரைபாரதி தொடங்கி வைத்தார்
- மாலை அணிந்து விரதம் இருக்கும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்
தென்தாமரைகுளம் :
வடக்குதாமரைகுளம் ஸ்ரீ முத்துமாகாளி தசரா குழுவினரின் காளி பூஜை நிகழ்ச்சியில் தி.மு.க. வர்த்தகர் அணியின் மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரைபாரதி கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தினை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட பிரதிநிதி தனசம்பத், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.ராஜா, ஊராட்சி தலைவர் ஆறுமுகம் பிள்ளை, பண்ணையார் சமுதாய தலைவரும், கிளை செயலாளருமான சுடலைமணி, கிளை செயலாளர் மணி, கிளை பிரதிநிதி இளங்கோ, தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பா ளர் சுதன்மணி உட்பட பொது மக்கள் மற்றும் தசராவிற்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- வீடு புகுந்து கொள்ளை அடிக்க கும்பலாக திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
- போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கை விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
தக்கலை :
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு (வயது 58), கட்டிட தொழிலாளியான இவர் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு தக்கலையில் வீடு புகுந்து கொள்ளை அடிக்க கும்பலாக திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன் பின்பு வழக்குக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் சென்னையில் தலைமறைவாக குடும்பத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்துபாண்டியன் தலைமையில் தக்கலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தார். அவரை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தக்கலை போலீசாரால் தேடப்பட்டவர் என தெரியவந்தது. உடனே அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கை விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- தனது 2 மகன்களுடன் தாயார் வீட்டிற்கு செல்வ தாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.
- மாயமான சரண்யாவை செல்போன் டவர் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது
என்.ஜி.ஓ.காலனி :
சுசீந்திரம் அருகே பறக்கை சி.டி.எம்.புரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு லிங்கம் (வயது 31), கொத்த னார். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு ரோகித் (5), பாலரெஜின் (2) என்ற 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று சரண்யா தனது 2 மகன்களுடன் தாயார் வீட்டிற்கு செல்வ தாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.
பின்னர் சரண்யா வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சுயம்புலிங்கம் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாயமான சரண்யாவை செல்போன் டவர் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். சரண்யா வுக்கு தோழிகள் யாராவது உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- நாகர்கோவிலில் வருகிற 31-ந்தேதி நடக்கிறது
- மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நடக்கிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 31-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.
பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.
காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகளாக பள்ளிகளுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் ஆகியவையும், கல்லூரிகளுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
கல்லூரி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு 3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மனவேதனையடைந்த நினிஷ் நேற்று அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்
- களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை :
களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராகவன். கூலி தொழிலாளி. இவரது மகன் நினிஷ் (வயது 24). படிப்பு முடிந்து விட்டு இப்போது கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித்தி ரிந்ததால் பெற்றோர் இவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் நண்பர்களுடன் சுற்றி திரியாமல் வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த நினிஷ் நேற்று அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும் தனது அறையில் சென்று கதவை சாத்தி விட்டு தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது சகோதரர் அண்ணன் நிஷாந்த் அறையில் சென்று பார்த்த போது நினிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நினிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 1500 குளங்கள் நிரம்பியது
- ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி போட்டது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு கனமழை பெய்தது. ஏற்கனவே கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் தொடர் மழையின் காரண மாக அருவியில் தண்ணீர் அதிக அளவு கொட்டுகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் குளிப்பதற்கு இன்றும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
திற்பரப்பில் அதிகபட்ச மாக 82.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. களியல், பூதப்பாண்டி, மயிலாடி, அடையாமடை, தக்கலை, குளச்சல், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவும் மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது. அணையில் இருந்து இன்று காலை 537 கன அடி உபரி நீரும், 200 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும் வெளியேற் றப்பட்டு வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் தொடர்ந்து கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் மழையின் காரண மாக முன்சிறை, வைக்க லூர், தீக்குறிச்சி பகுதி களில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதனால் பொதுமக்கள் பரிதவிப் பிற்கு ஆளாகி உள்ளனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 38.35 அடியாக உள்ளது. அணைக்கு 1001 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 224 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.25 அடியாக உள்ளது. அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றார் 1- அணை நீர்மட்டம் 15.91 அடியாகவும், சிற்றார் 2-அணை நீர்மட்டம் 16 அடியாகவும் உள்ளது. பொய்கை அணை நீர்மட்டம் 8.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 19.50 அடியாகவும் உள்ளது. அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். தொடர் மழையின் காரணமாக வள்ளி ஆறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
சானல்களிலும் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடுவ தால் பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன. மாவட் டம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 200-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வருகின்றன. குளங் கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழைக்கு நேற்று மாவட்டம் முழுவதும் 9 வீடுகள் இடிந்து விழுந்துள் ளது. அகஸ்தீஸ்வரம் தாலு காவில் ஒரு வீடும், விளவங் கோட்டில் 5 வீடுகளும், கிள்ளியூரில் 3 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன.
குலசேகரம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் தொழி லாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். ரப்பர் மரங்களில் கட்டப் பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக் கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 1.8, பெருஞ்சாணி 12.4, சிற்றார் 1-17.2, சிற்றார் 2-57.4, பூதப்பாண்டி 3.2, களியல் 79.2, மயிலாடி 2.6, சுருளோடு 15, தக்கலை 1.1, குளச்சல் 4, பாலமோர் 20.4, மாம்பழத்து றையாறு 4, திற்பரப்பு 82.4, அடையாமடை 27.2, முக் கடல் 2.2.
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 2 மணி நேரம் தாமதம்
- காலை 10 மணிக்கு கடல்சகஜ நிலைக்கு திரும்பியது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலில் அமாவாசையை யொட்டி இன்று காலையில் 3-வதுநாளாக கன்னி யாகுமரியில்"திடீர்" என்று கடல்நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேபோல இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்த ளிப்பாகவும் காணப்படு கிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர்சிலை அமைந்து ள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்துகாணப்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்க ப்படவில்லை. இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல்சகஜ நிலைக்கு திரும்பியது.
இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை10 மணிக்கு விவேகானந்தர்மண்ட பத்து க்கு படகு போக்கு வரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிக ள்விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில ்சென் றுஆர்வ முடன்பார்த்து வந்தனர்.
திருவள்ளுவர்சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. மேலும் கன்னியாகுமரி,சின்னமுட்டம்,வாவத்துறை, கோவ ளம், கீழமணக்குடி, மணக் குடிபோன்ற கட ற்கரை கிராம ங்களில்க டல்சீற்ற மாக காணப்ப ட்டது.
இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
நாகர்கோவில் ::
அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செய லாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப ட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் சேவியர் மனோகரன், துணைச் செயலாளர் சுகுமாரன், மாணவரணி செயலாளர் மனோகரன், மாநில நிர்வாகிகள் சந்துரு, ராணி, இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன், இளை ஞர் அணி செயலாளர் ஜெயசீலன், வர்த்தக அணி செயலாளர் சந்திரன், வடிவை மகாதேவன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், ஜெஸீம், பொன் சுந்தரநாத், தினேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ், மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, முரு கேஸ்வரன், ஜெய கோபால், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆறு முகராஜா, மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்சன், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் ஐயப்பன், டாஸ்மார்க் தொழிற்சங்க செயலாளர் மணிகண்டன், குருந்தன் கோடு ஒன்றிய செயலாளர் ராதாகிரு ஷ்ணன், அண்ணா தொழி ற்சங்க செயலாளர் வைகுண்ட மணி, போக்கு வரத்து மண்டல செயலாளர் விஜயகுமார், முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தங்கப்பன், ரயிலடி மாத வன், தொழிலதிபர் தேவ ராஜ், முன்னாள் நகர பாசறை செயலாளர் பகவத்சிங், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரபீக், ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுகிர்தாவின் பெற்றோர் மற்றும் அவரது தம்பியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவம் வீட்டில் சோதனை செய்தனர்.
நாகர்கோவில்:
குலசேகரம் பகுதியில் உள்ள மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுகிர்தா (வயது 27) என்பவர் முதுகலை மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா கடந்த 10-ந்தேதி ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாகவும் பயிற்சி டாக்டர்கள் ப்ரீத்தி, ஹரிஷ் ஆகியோர் மனதளவிலும் டார்ச்சர் கொடுத்ததாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக பரமசிவம், ப்ரீத்தி, ஹரிஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும் பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் பின்னர் விசாரணையை தொடங்கினார்கள்.
மூகாம்பிகா கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவரது செல்போன் மற்றும் லேப்-டாப்பை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஹரிஷ், ப்ரீத்தியை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஹரிசுக்கு மதுரை ஐகோர்ட் முன்ஜாமின் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றொரு பயிற்சி டாக்டரான ப்ரீத்தியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். எனவே அவரை பிடிக்க போலீசார் கும்பகோணம் விரைந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுகிர்தாவின் பெற்றோர் மற்றும் அவரது தம்பியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 40 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவம் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு விலை உயர்ந்த 2 மதுபாட்டில்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது எங்கிருந்து வாங்கியுள்ளார் என்பதும் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜெயில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் பரமசிவத்தை காவல் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்கிறார்கள். மேலும் முன்ஜாமின் பெற்றுள்ள ஹரீஸிடம் விசாரணை நடத்தவும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். அவர் சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் ஹரிசின் முன் ஜாமினை ரத்து செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்கின்றனர்.






