என் மலர்
கன்னியாகுமரி
- அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- அர்ச்சுனனின் உடல் இன்று குழித்துறை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது
திருவட்டார் :
குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 54). ரப்பர்பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர் மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்.
நேற்று மாலை அர்ச்சுனன் திருநந்திகரையில் இருந்து குலசேகரம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வரும் போது பேச்சிப்பாறை சேனங்கோடு பகுதியை சேர்ந்த விஜோ ஜோசப்பு என்ற பள்ளி மாணவன் தனது இரு சக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி வந்தான். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன.
இதில் அர்ச்சுனன் தூக்கி வீசப்பட்டார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு அர்ச்சுனன் இறந்து விட்டார்.
இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விஜோ ஜோசப் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். அர்ச்சுனனின் உடல் இன்று குழித்துறை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
- திற்பரப்பு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை
- கோழிப்போர்விளையில் 92.8 மில்லி மீட்டர் பதிவு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. மலையோர பகுதிகளிலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை மையம் குமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரித்து உள்ளது. அதன்படி மாவட் டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப் பட்டது.
கோழிப்போர்விளையில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிக பட்சமாக 92.8 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. குருந்தன்கோடு, மயிலாடி, கொட்டாரம், கன்னிமார், தக்கலை, இரணியல், ஆரல்வாய் மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.
அணைகளின் நீர்மட் டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சிற்றாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து குறைய தொடங்கிய தையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது. சிற்றாறு அணைகளிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதை யடுத்து கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைய தொடங்கி யுள்ளது.
இருப்பினும் திற்பரப்பில் மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்று 7-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 39.23 அடியாக இருந்தது. அணைக்கு 1570 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 226 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.35 அடியாக இருந்தது. அணைக்கு 1116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர மட்டம் நேற்று ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 20.70 அடியாக இருந்தது. மாம்பழத்துறை யாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 49.70 அடியாக உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 53.6, பெருஞ்சாணி 57.4, சிற்றார்1- 18, சிற்றார்-2 25.6, பூதப்பாண்டி 22.4, களியல் 35.8, கன்னிமார் 41.8, கொட்டாரம் 17.4, குழித்துறை 11.6, மயிலாடி16.4, நாகர்கோவில் 19.4, புத்தன்அணை 54.6, சுருளோடு 46.4, தக்கலை 55, குளச்சல் 18.4, இரணியல் 26, பாலமோர் 52.2, மாம்பழத்துறையாறு 41.8, திற்பரப்பு 33.8, ஆரல்வாய்மொழி 7.2, கோழிப்போர்விளை 92.8, அடையாமடை 49.1, குருந்தன்கோடு 26, முள்ளங்கினாவிளை 57.4, ஆணைக்கடங்கு 38.4, முக்கடல் 22.2.
தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 75-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில் நேற்று மேலும் 5 வீடுகள் இடிந்துள்ளன. கல்குளம் தாலுகாவில் 4 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடும் இடிந்துள்ளது. மேற்கு மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை யின்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பக ராமன் புதூர் பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரண மாக செங்கல் விலை உயர்ந்துள்ளது.
- ஒரு நாள் சிறப்பு பொதுநல மருத்துவ முகாம் மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவ முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நாகர்கோவில் :
சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் சிறப்பு பொதுநல மருத்துவ முகாம் மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் டாக்டர் ஷீன் குமார் வரவேற்றார். கல்லூரி தாளாளர் டாக்டர் மரிய வில்லியம் தலைமை தாங்கினார். நாகர்கோவில் பென்சாம் மருத்துவமனை தலைமை மருத்துவர் எபனேசர் பென்சாம், முகாமினை தொடங்கி வைத்து பேசினார். நாகர்கோவில் டவுண் மற்றும் சுப்ரீம் ரோட்டரி மன்றங்களை சார்ந்த மீரான் கான் சலீம் மற்றும் ஸ்ரீதர் முகமத் இக்பால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஸ்வரன், துணை முதல்வர் டாக்டர் கிறிஸ்டஸ் ஜெயசிங் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மருத்துவ முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் டாக்டர் ஷின் குமார். தேசிய மாணவர் படை அலுவலர் டாக்டர் எட்வின் கிளாட்சன். நாட்டு நலத்திட்ட அலுவலர்கள் பேராசிரியர் ஆக்னல் லிவ்விங்ஸ்டன் மற்றும் ஜாண்பால் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் சிறப்பாக செய்தனர்.
- 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
- 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசா ரணை
நாகர்கோவில் :
நாகர்கோவில் சரக்கல் விளை பகுதியைச் சேர்ந்தவர் மதன் (வயது 42), பில்டிங் காண்ட்ராக்டர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சரக்கல் விலை முத்தாரம்மன் கோவில் பகுதியில் மதன்சென்று கொண்டி ருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டென் சிங், ராஜா, ராம கிருஷ்ணன், ராஜேஷ், ஞானசேகர் ஆகியோர் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் மதனை சரமாரியாக கம்பாலும் கையாலும் தாக்கினார்கள்.
இதில் மதன் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக் காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து மதன் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீ சார் டென்சிங், ராஜா, ராமகிருஷ்ணன், ராஜேஷ், ஞானசேகர் ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- வாக்குச்சாவடி எண். 5 ஆனது பெயர் மாற்றத்துடன் அரசு நடுநிலைப்பள்ளி, கீரிப்பாறையில் செயல்படும்.
- வாக்குச்சாவடி எண். 163 மற்றும் 164 ஆகியவை அம்மா மினி மருத்துவமனை
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்ட ரும், மாவட்ட தேர்தல் அலுவலமான ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-
இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 6 சட்டமன்ற தொகுதி களுக்கான வாக்குச்சாவடி களின் பகுப்பாய்வு பணியின் போது 229- கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சா வடி எண் 4 தற்போது அரசு மேல்நிலைப்பள்ளி (ஆதி திராவிடர் நலத்துறை), வாழையத்துவயல், வாக்குச்சாவடி எண், 184, தற்போது பள்ளம்துறை பஞ்சாயத்து சேவை மையம், அன்னை நகர், வாக்குச்சாவடி எண் 190, தற்போது தெங்கம்புதூர் அரசு தொடக்கப்பள்ளி, வடக்கு கட்டிடம், மேற்கு பகுதியிலும் செயல்படும். மேலும், வாக்குச்சாவடி எண். 5 ஆனது பெயர் மாற்றத்துடன் அரசு நடுநிலைப்பள்ளி, கீரிப்பாறையில் செயல்படும்.
230-நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 78 அரசு நடுநிலைப்பள்ளி களியங்காடு பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 88.89 ஆகியவை இரட்சண்ய சேனை மேல்நிலைப்பள்ளி வெட்டூர்ணிமடத்திலும், வாக்குச்சாவடி எண். 255 அங்கன்வாடி மையம், கீழமறவன் குடியிருப்பு பகுதியிலும் செயல்படும். மேலும், வாக்குச்சாவடி எண் 18, 19, 20 மற்றும் 21 ஆகியவை பெயர் மாற்றத்துடன் காமராஜர் மண்டபம், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் மற்றும் வாக்குச்சாவடி எண். 152 மற்றும் 153 ஆகியவை பெயர் மாற்றத்துடன் பழைய மாநகராட்சி அலுவலக கட்டிடம், பால மோர் சாலை பகுதியிலும் செயல்படும்.
231-குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண், 43, 44 இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. தாணிக்கோட்டவிளை பகுதியிலும், வாக்குச்சாவடி எண்.207 அங்கன்வாடி மையம், இலந்தன்விளை பகுதியிலும் செயல்படும்.
232-பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 62, 63 கல்வாரி மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி, கொல்வேல் பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 94, 95, 96 மற்றும் 98 மரியா பாலிடெக்னிக் கல்லூரி, குமரன்குடி பகுதியிலும், வாக்குச்சாவடி எண், 134 அரசு நடுநி லைப்பள்ளி, கண்ணனூர், வாக்குச்சாவடி எண். 185 மற்றும் 186 சி.எஸ்.ஐ நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, ஈத்தவிளை பகுதியிலும் வாக்குச்சாவடி எண். 194 சி.எஸ்.ஐ மெட்ரிக் பள்ளி. அழகியமண்டபம் பகுதியிலும் செயல்படும்.
233-விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 64 மற்றும் 66 அரசு தொடக் கப்பள்ளி, காங்கோடு பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 65 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி. மொட்டக்காலை பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 69 மற்றும் 77 அரசு தொடக்கப்பள்ளி, பளுகல் (இருப்பு) மத்தம்பாலையிலும் செயல்படும். மேலும், வாக்குச்சாவடி எண். 34. 35. 36 ஆகியவை அரசு பி.எப்.எம். தொடக்கப்பள்ளி தேவிகோடு (இருப்பு) புன்னாக்கரையிலும், வாக்குச்சாவடி எண்: 59 அரசு தொடக்கப்பள்ளி அண்டுகோடு (இருப்பு) உத்திரங்கோடு பகுதியிலும் செயல்படும்.
234-கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 163 மற்றும் 164 ஆகியவை அம்மா மினி மருத்துவமனை, முள்ளங்கினாவிளையில் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
- திருமலையாண்டி பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் :
அ.தி.மு.க.வின் 52 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண் தங்கம் தலைமையில் தக்கலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சிவ.குற்றாலம், இணை செயலாளர் மேரி கமலாபாய், துணைச் செயலாளர்கள் அல்போன்சாள், கே.ஏ.சலாம், பொருளாளர் சில்வெஸ்டர், ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், கடையால் மணி, மாவட்ட அணி செயலாளர்கள் வக்கீல் அருள் பிரகாஷ் சிங், மகாஜி செல்வகுமார், ஜாண், யூஜின், விஜயகுமார், காசிராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சக்கீர் உசேன், அம்பலகடை பாபு மற்றும் நிர்வாகிகள் முருகன், திருமலையாண்டி பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தக்கலை :
தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதநல்லூர் பேரூராட்சி யில் அமைந்துள்ளது கோதநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம். இந்த கட்டிடம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன்பிறகு போதிய பராமரிப்பு இல்லாமல் சிமெண்ட் பாளங்கள் கழன்று விழுந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால் அங்கு தரை முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் நோயாளிகள் சாக்கு பைகளை தரையில் விரித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்தில் மருத்துவ பணிகள் செய்ய முடியாமல் பக்கத்தில் உள்ள மகப்பேறு நடக்கும் கட்டிடத்தில் வைத்து வெளி நோயாளிகளுக்கு டாக்டர்கள் மருத்துவ உதவிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கும் போதிய கட்டிட இட வசதி இல்லை. இதனால் புறநோயாளிகள் அலைக்கழிக்கபடுகிறார்கள். இந்த கட்டிடம் பழமையாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்ற அச்சத்துடன் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பயந்து போய் உள்ளனர். தமிழக அரசு உடனடியாக இந்த மருத்துவமனை கட்டிடத்தை இடித்து மாற்றி புதிய கட்டிடம் கட்ட முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். மேலும் இது குறித்து கோதநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கிதியோன் ராஜ், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
- விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரமும் கிடைக்க பெறும்.
- புல அள வீட்டுப் புத்தகத்தின் அடிப்படையில் அளவீடு செய்து பழையாற்றின் எல்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோணம் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பழையாற்றின் தற்போதைய நிலை குறித்த ஆய்வறிக்கை யினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதா வது:-
கன்னியாகுமரி மாவட் டத்தின் பழம் பெருமை வாய்ந்த பழை யாற்றின் அமைப்பினை மீட்டு எடுக்க வேண்டும். பழையாறு மீட்ெடடுக்கும் முன்னெடுப்பில் மாவட்ட நிர்வாகத்தின் வழி காட்டுதலின்படி பலருடைய பங்களிப்புடன் புல அள வீட்டுப் புத்தகத்தின் அடிப்படையில் அளவீடு செய்து பழையாற்றின் எல்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் நதியைக் கள ஆய்வு செய்து நதியின் தற்போதைய நிலை மற்றும் நதி சந்திக்கும் சவால்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.டி.பி.ஜி.எஸ். தொழில் நுட்பம் மூலம் புவியியல் தகவல் அமைப்பை ஆய்வு செய்து துல்லியமாக நதியின் டிஜிட்டல் வரை படம் உருவாக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நதிகளை சீரமைப்பதன் வாயிலாக நமது மாவட்டத் தின் பழமையை மீட்டெ டுப்பது மட்டு மல்லாமல், விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரமும் கிடைக்க பெறும். மேலும் குடிநீர் ஆதாரத்திற்கும் வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில மெடுப்பு) ரேவதி, பொறி யியல் கல்லூரி முதல்வர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதியதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்.
- மாநில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
குமரி மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை குறித்தும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ய என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது.
மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷர்மிளா ஏஞ்சல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் ஏராளமானோர் மாதம் பணம் செலுத்தி வந்தனர். சிலர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினார்கள்.
- நகைக்கடை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மூடப்பட்டு இருப்பதாக அறிவிபபு
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் மாதம் மாதம் பணம் கட்டினால் ஆண்டு இறுதியில் செய்கூலி சேதாரம் இல்லாமல் நகைகள் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பி பொதுமக்கள் ஏராளமானோர் மாதம் பணம் செலுத்தி வந்தனர். சிலர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினார்கள்.
இந்த நிலையில் நகை கடை மூடப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து பணம் செலுத்திய ஏராளமான பொதுமக்கள் இன்று காலை கடையின் முன்பு திரண்டனர். அப்போது நகை கடை மூடப்பட்டு இருந்தது. பராமரிப்பு பணி காரணமாக கடை மூடப்பட்டு இருப்பதாக கடையின் முன்பு அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நகைக்கடை ஊழியர்களை தொடர்பு கொண்டு பேசினார்கள். சிலர் நீண்ட நேரம் தொடர்பு கொண்ட பிறகும் போனை எடுக்கவில்லை. ஒரு சில வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டபோது போனை எடுத்து நகைக்கடை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மூடப்பட்டு இருப்பதாகவும், அடுத்த வாரம் திறக்கப்பட்டதும் உங்களுக்குரிய நகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
நகைக்கடை மூடப்பட்ட தகவல் குமரி மாவட்டம் முழுவதும் பரவியது. இதனால் பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் தெரிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
- தீயணைக்கும் படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை
- அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாஸ். கூலி தொழிலாளி. இவரது வீட்டு நாய் தெற்கு குண்டல் மெயின் ரோட்டின் அருகில் உள்ள 40 அடி ஆழ பஞ்சாயத்து கிணற்றில் தவறி விழுந்தது. அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த நாயை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த நாயை தீயணைக்கும் படை வீரர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது
- ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்கமார் தலைமை தாங்கினார்.
ஆரல்வாய்மொழி,
அ.தி.மு.க. தொடக்க விழாவை முன்னிட்டு தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக ஆரல் வாய்மொழியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்கமார் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பாலகி ருஷ்ணன், ஒன்றிய ஜெய லலிதா பேரவை துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வக்கீல் பரமேஸ்வரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகி செல்வன், பொதுக்குழு உறுப்பினர் மகாராஜன், தாழக்குடி நகர செயலாளர் பிரம்ம நாயகம், தாழக்குடி பேரூராட்சி மன்ற கவுன்சிலர் ரோகிணி அய்யப்பன், கிளை செயலாளர் அய்யப்பன், கச்சேரி நாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






