search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்கள் வேலையிழப்பை கண்டித்து 7-ந்தேதி போராட்டம்
    X

    தொழிலாளர்கள் வேலையிழப்பை கண்டித்து 7-ந்தேதி போராட்டம்

    • மேலசங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் அறிவிப்பு
    • கட்டுமான பொருட்கள் விலை உயர்வு

    ராஜாக்கமங்கலம் :

    குமரி மாவட்டம் மேல சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்துசரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சிமெண்ட் ஒரு மூடைக்கு சுமார் 100 ரூபாய் வரை அதிக ரித்துள்ளது. கம்பி விலை யும் கணிசமாக மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

    இயற்கையிலிருந்து எடுக் கப்படும் கல்லை உடைத்து கொண்டு வரும் எம்.சாண்டுக்கு அரசாங்கம் ஒரு யூனிட்டுக்கு ரூ.1000 என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சந்தையில் அது ரூ.8 ஆயி ரத்துக்கு விற்கப்படு கிறது. இவ்வாறு கட்டுமான பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளதால் கட்டிடம் கட்டுபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு ஏழை தொழிலாளர்கள் வேலையின்றி பரிதவித்து வருகின்றனர்.

    இதனால் வீடு கட்டுவது மட்டுமல்லாமல் பல ஏழை மக்கள் தங்கள் குழந்தை களின் திருமணம், படிப்பு, மருத்துவ சேவை போன்ற அத்தியாவசிய பணியை கூட செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 2 வருடங்களாக குமரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் தென்னை மரங்கள் ஏராள மாக பட்டுப்போய் உள்ளது. இதனால் தென்னை விவசா யிகள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசினை கோரியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இதனால் அரசை கண்டித்து நவம்பர் 7-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் முன்பு பொதுமக்களை திரட்டி போராட்டம் நட த் தப்படும்.

    போராட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் ( நான்) தலைமை தாங்குகிறேன். துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகிக்கிறார். எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., போராட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×