என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது
    X

    தக்கலை அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது

    • தாக்குதலில் ஈடுபட்ட ராஜா என்ற சுரேஷ்குமார், ஜெகன், ஜெரிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    • எட்வின் ராபர்ட்டை அவதூறாக பேசி தகராறு செய்ததோடு அரிவாளாலும் வெட்டினர்.

    தக்கலை :

    தக்கலை திட்டிமேல்கோணம் அருகே உள்ள காட்டாத்துறையை சேர்ந்தவர் எட்வின் ராபர்ட் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் அருண் என்பவருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முளகுமூடு பகுதிக்குச் சென்றார். அங்கு ஒரு டீ கடையில் இருவரும் டீ குடித்தனர்.

    அப்போது அங்கு கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் ராஜா என்ற சுரேஷ்குமார் வந்தார். அவருக்கும் அருணுக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை எட்வின் ராபர்ட் தலையிட்டு சமரசம் செய்து வைத்தாராம். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை எட்வின் ராபர்ட், தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் ராஜா தனது நண்பர்கள் ஜெகன், ஜெரிக் ஆகியோருடன் வந்துள்ளார். அவர்கள், எட்வின் ராபர்ட்டை அவதூறாக பேசி தகராறு செய்ததோடு அரிவாளாலும் வெட்டினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாமியார் மடம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீசில், எட்வின் ராபர்ட் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ராஜா என்ற சுரேஷ்குமார், ஜெகன், ஜெரிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×