என் மலர்
கன்னியாகுமரி
- பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
- பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணை தலைவி ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர்கள் சுபாஷ், மகேஷ், சுஜா அன் பழகன், நித்யா, ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகாய சர்ஜினாள் பிரைட்டன், பூலோகராஜா, ஆட்லின் சேகர், டெல்பின் ஜேக்கப், சுகாதார அதிகாரி முருகன், இளநிலை உதவியா ளர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கன்னியா குமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை அய்யப்பன் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை 3 மாத காலம் அமலில் இருக்கும்.
இந்த சீசன் காலத்தை யொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணி களுக்கு குடிநீர், சாலை, மின்விளக்கு சுகாதாரம், கழிப்பிடம் மற்றும் வாகன பார்க்கிங் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதி களையும் செய்து கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த சீசன் காலங்களில் கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை சிலுவைநகர் வழியாக கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதியில் உள்ள பயோ மைனிங் பகுதியில் நிறுத்து வதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளி லும் ரூ.5 கோடி செலவில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்ப ணிகளை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- 4 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் தொடங்கியது
- வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-நாகர்கோ வில், காவல்கிணறு- நாகர்கோவில், நாகர்கோவில்-வில்லுக்குறி, வில்லுக்குறி-உச்சக்கடை என 4 பிரிவுகளாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முற்றிலும் புதிய வழித்தடமாக அமையும் இந்த சாலை நீர் நிலைகளை பாதிக்கும் என்றும் எனவே ஏற்கனவே இருக்கும் என்.எச்.47 சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. பின்னர் இந்த வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் கமிட்டி ஆய்வு செய்து அளித்த அறிக்கை யின்படி நீர்நிலைகள் பாதிக் காமல் பாலங்கள் அமைத்து கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதில் குமரி மாவட்டத்தில் 29 பெரிய பாலங்களும், 12 சிறிய பாலங்களும், 2 இடங்க ளில் தண்ணீர் செல்லும் குழாய்களும், 75 பெரிய கல்வெர்ட்களும் 8 இடங்களில் சிறியகல்வெர்ட்களும் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அந்த அடிப்படையில் இந்த 4 வழிசாலை பணிக்காக குமரி மாவட்டத்தில் உள்ள தாம ரைக்குளம், பொட்டக் குளம், புதுக்குளம், நட்டாலம் மவுதக்குளம், மாம்பள்ளி குளம், செட்டிகுளம், பகவதிக்குளம், ரெட்டை குளம், அரசமுத்துகுளம், பிலாஞ்சேரிகுளம், வெள்ளி யாகுளம், பாம்பாட்டிகுளம், செல்லாக்குளம்-1, செல்லா க்குளம்-2, நாச்சியார்குளம், கரிச்சான்குளம், அம்பலத்தடி குளம், குதிரை பாஞ்சான் குளம், அனந்தன்குளம்-1, அனந்தன்குளம்- 2, தேவன் குளம், பாணாகுளம், சுந்தர நைனார்குளம், நிலப் பாறைக்குளம், கிருஷ்ண சமுத்திரகுளம், புத்தேரிகுளம், பிராந்த நேரிகுளம், புரு ஷோத்தமநேரிகுளம், தாணு மாலையன்குளம், புளி யன்குளம், கண்டுகிருஷிகுளம், பள்ளக்குளம், ராஜேந்திரிகுளம், மந்தாரம்புதூர் குளம், தேவகுளம், கவற்குளம், அகஸ்தியர்குளம், பன்னிக்குண்டுகுளம், நுள்ளி குளம் ஆகிய குளங்களில் பாலம் அமைக்க பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.
இந்த பாலங்களை அமைக்க கூடுதலாக ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தியர்குளம், பொற்றையடி பள்ளக்குளம் உள்பட பல குளங்களில் 4 வழிசாலைக்காக பாலங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக இந்த குளங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் சிமெண்ட் பிளாக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையி லான நான்கு வழிசாலையில் கொட்டாரம்-அகஸ்தீஸ்வரம் சாலையின் குறுக்கே வடுகன் பற்று பகுதியில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருபுறமும் மண் நிரப்பி இணைப்பு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கொட்டாரம் பகுதியில் நான்கு வழி சாலை முழுமை அடையாமல் இருந்தது.
இந்த நிலையில் 4 வருடங்க ளுக்கு பிறகு கொட்டாரம் நான்கு வழிச்சாலை மேம் பாலத்தை இணைக்கு வகையில் தற்போது இருபுற மும் ஏராளமான டாரஸ் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து நிரப்பப்பட்டு "ரோடுரோலர்" மூலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. கொட்டாரம் பகுதியில் நடந்து வரும் இந்த நான்கு வழிசாலை மேம்பால இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் என்ஜீ னியர்கள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
- 04652-229077 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவில் (அம லாக்கம்) தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் துறை ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவின்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், சைல்டு லைன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியோருடன் செண்பகராமன்புதூர், தடிக்காரன்கோணம், பொன்மனை, சுருளோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது தொடர்பாக ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்த பட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரையும் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்து வது தெரியவந்தால் 1098 என்ற எண்ணிலும், 04652-229077 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநில அயலக அணி துணை செயலாளர் பாபு வினிபிரட் அறிக்கை
- மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கவும், இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கின்றார்.
நாகர்கோவில்:
தி.மு.க. மாநில அயலக அணி துணை செயலாளர் பாபு வினிபிரட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை(28-ந்தேதி) குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
குறிப்பாக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கவும், இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கின்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தி.மு.க. பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு வரவேற்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடசேரி காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
- மாம்பழத்துறையாறு பகுதியிலும் மழை பெய்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் மாலை 5.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை வெளுத்து வாங்கியது. புத்தேரி, வடசேரி, பார்வதிபுரம் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வடசேரி காசிவிஸ்வநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும் வடசேரி பகுதி களில் உள்ள தெருக்களில் தண்ணீர் சாலைகளில் கரை புரண்டு ஆறாக ஓடியது. மின்னல்கள் கண்ணை பறிக்கும் வகையிலும், இடிச் சத்தம் காதை பிளக்கும் வகையிலும் இருந்தது. மாம்பழத்துறையாறு பகுதியிலும் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 72 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குளச்சல், இரணியல், சுருளோடு, குருந்தன் கோடு, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப் பகுதியிலும் மழை நீடித்ததை யடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. தொடர் மழையின் காரணமாக கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு களின் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.56 அடியாக இருந்தது. அணைக்கு 422 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.35 அடியாக உள்ளது. அணைக்கு 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.18 அடியாக உள்ளது. அணைக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருஞ்சாணி 22.4, பூதப்பாண்டி 65.4, களியல் 16, கன்னிமார் 11.4, நாகர்கோ வில் 10.2, சுருளோடு 58.4, தக்கலை 24, குளச்சல் 28.6, இரணியல் 59.4, பாலமோர் 27.2, மாம்பழத்துறையாறு 72, திற்பரப்பு 17.2, ஆரல்வாய்மொழி 2, கோழிப் போர்விளை 8.2, அடையாமடை 26, குருந்தன்கோடு 70, முள்ளங்கினாவிளை 4.8, ஆணைக்கிடங்கு 70.4, முக்கடல் 15.2.
- லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு விதிகளை மீறி பத்திரப்பதிவு நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, ஜான் பெஞ்சமின் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகத்துக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சார்பதிவாளர் பொறுப்பு ஆண்ட்ரோ மெஸ் மாலின் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. சார்பதிவாளர் அலுவலரின் மோட்டார் சைக்கிளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு லட்சத்து 21 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாலை 4.40 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11.50 மணி வரை நடந்தது.
சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பணம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளது. அவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக சார்பதிவாளர் பொறுப்பு ஆன்றோ மெஸ் மாலின் கேமரா ஆபரேட்டர் ரெஜினா, இளநிலை உதவியாளர் ரேஷ்மா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சோதனையில் பெண் துணை தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை இந்த தாக்குதல் சம்பவம் காட்டுகிறது.
- தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி:
மத்திய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மந்திரி எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி வந்தார். அவர் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆளுநர் மாளிகை தாக்குதல் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட சவால் ஆகும். தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை இந்த தாக்குதல் சம்பவம் காட்டுகிறது. தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆளுநர் மாளிகையில் தாக்குதல் நடத்திய நபரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் தி.மு.க. பிரமுகர் என்பதை மறைத்து சட்டத் துறை அமைச்சர் பொறுப்பில்லாமல் விஷயத்தை திசை திருப்புகிறார். இது ஒரு தனிநபர் செய்யக் கூடிய காரியம் அல்ல. இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை விசாரணை செய்ய வேண்டும்.
இதனை என்.ஐ.ஏ. அல்லது சி.பி.ஐ. போன்ற அமைப்புகளால் தான் விசாரணை செய்ய முடியும். நேற்றும் கோவையில் பாலஸ்தீனிய கொடியை பறக்க விட்டுள்ளனர். இவையெல்லாம் எவ்வளவு பெரிய தேசத்துரோக செயல்கள், இவற்றையெல்லாம் தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
- முன்விரோதத்தில் மோதல்
- ஆத்திரமடைந்த அஜய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அருண் வீட்டு ஜன்னலை அடித்து உடைத்துள்ளனர்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள முகமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (வயது 46). அதே பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (25). அருண்குமார் கட்டிட தொழிலாளியாகவும், அஜய் டிரைவராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அருண் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜய், அவரிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அருண் வீட்டு ஜன்னலை அடித்து உடைத்துள்ளனர். அப்போது ஏற்பட்டமோதலில் அருண் மற்றும் அஜய் ஆகிய இருவரும் ஒருவரை யொருவர் கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்ட னர். இந்தமோதல் சம்பவம் தொடர்பாக தக்கலை போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் தனித் தனியாக புகார் கொடுக் கப்பட்டது. அருண் கொடுத்த புகாரின் பேரில் அஜய், ராஜ கோபாலன், சேகர் ஆகியோர் மீதும் அஜய்கொடுத்த புகாரின்பேரில் அருண் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்நிலையில் அஜய்யை கத்தியால் குத்திய அருணை போலீசார் கைது செய்தனர். அஜய் படுகா யங்களுடன் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை ெபற்று வருகிறார்.
- ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
- ரா ஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இந்த கோவிலில் ராஜ கோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது. அஸ்திவாரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டதில் கும்பாபிஷேகம் நடத்தி விட்டு பணியை தொடங்க வேண்டும் என்று அருள்வாக்கு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. சமீபத்தில் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டிய ஸ்தபதியின் மகன் ஆனந்த் ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையினர், இந்து சமய அறநிலையத்துறை வடி வமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும் மிரு திஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. ராஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக இந்து சமய அற நிலையத் துறையின் தலைமை ஸ்தபதியும் மகா பலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமை யிலான வல்லுனர் குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபாராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண பிள்ளை (வயது 55). இவர் குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரைகளை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அவரது மனைவி செல்லம்மாள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
பின்பு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் ராமகிருஷ்ண பிள்ளை அனு மதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். உடல்நலம் பாதித்து அவதிப்பட்டதால் வாழ்வில் வெறுப்படைந்து அவர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி மேலிட பொறுப்பாளர் சின்னத்துரை பேச்சு
- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
மார்த்தாண்டம்:
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமை தாங்கினார். அவை தலைவர் சிவ.குற்றாலம் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் கே.ஏ.சலாம் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி மேலிட பொறுப்பாளரும், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான தூத்துக்குடி சின்னத்துரை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்பொழுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்று வெளியில் சொல்லிக் கொள்கின்றனர்.
மகளிர் உரிமை தொகை ரூ.1000 அனைவருக்கும் கொடுப்பதாக தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது அனைவருக்கும் கொடுக்கவில்லை. மேலும் தற்பொழுது 1 அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஆய்வு செய்யப்பட்டு அதில் வருமானம் அதிகமாக இருந்தால் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆகையால் இது ஒரு மோசடி திட்டம் ஆகும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் தெளிவான பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.
இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, இளைஞரணி மற்றும் கட்சியில் இருந்து 19 பேரை ஒரு பூத்துக்கு நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். மேலும் 50 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் 810 கமிட்டிகள் உள்ளன. இதை சரியான முறையில் ஒருங்கிணைத்து நாம் திட்டமிட்டு பணியாற்றினால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். இதற்காக அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண் டும். அதன் பிறகு எடப்பாடி யார் சுட்டிக்காட்டுபவரே பிரதமராக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மேரி கமலபாய், அல்போன்சாள், ஒன்றிய செயலாளர்கள் நிமால், மணி, மெர்லியன்ட் தாஸ், ஜார்ஜ், சுதர்சன், அணிச் செயலாளர்கள் வக்கீல் அருள் பிரகாஷ் சிங், ரெஞ்சித், வினோஜ், மனோ, மகாஜி செல்வகுமார், ஜாண் மற்றும் நிர்வாகிகள் முத்தழகன், திருமலை யாண்டி பிள்ளை, முருகன், அண்ணா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சில்வெஸ்டர் நன்றி கூறினார்.
- பீட்டர் அல்போன்ஸ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
- கே.எஸ்.அழகிரி, குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுஸ் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.






