search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
    X

    கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

    • புத்தன் அணையிலிருந்து பைப்லைன் மூலமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து பாய்வதை பார்வையிட்டார்
    • வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்பொழுது புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் ரூ.296 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திட்டத்திற்கான வரைபடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள். பின்னர் புத்தன் அணையிலிருந்து பைப்லைன் மூலமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து பாய்வதை பார்வையிட்டார். பின்னர் அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×