என் மலர்
கள்ளக்குறிச்சி
மூக்கனூர் கிராமத்தில் சென்றபோது டிராக்டரில் மின் கம்பி உரசிதயதால் திடீரென்று தீ பற்றி எரிந்தது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.
இவருக்கு சொந்தமான வயலில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் சுருள் செய்து டிராக்டரில் ஏற்றிக் கொண்டு வட பொன்பரப்பி சென்றார். மூக்கனூர் கிராமத்தில் சென்றபோது டிராக்டரில் மின் கம்பி உரசிதயதால் திடீரென்று தீ பற்றி எரிந்தது. இதனால் டிராக்டரில் பயனம் செய்த டிரைவர் உள்பட அனைவரும் அலறி யடித்து ஓடினர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்தி வேல், மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாமிபிள்ளை, சிவக்குமார், சங்கர் ஆகியோர் விரைந்து சென்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வைக்கோல் டிராக்டரை போராடி தீயை அனைத்தனர். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
மாணவர்கள் எந்த பாடப்பிரிவில் விருப்பம் உள்ளதோ அந்த பாட பிரிவினை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக பயின்றால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும் என மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேல்நிலை கல்வி பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கற்றலின் ஊக்கமும், வெற்றியின் ஆக்கமும் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெரும்பாலான மாணவ-மாணவிகள் மருத்துவராக விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவராவதர்க்கு நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும், அதற்கு நுழைவுத்தேர்வில் தொடர்புடைய பிரிவுகளில் அதிகமான கேள்விகள் வருவது கண்டறிந்து நுணுக்கமாக பயில வேண்டும்.
மேலும் மருத்துவ மற்றும் பொறியியல் மேற்படிப்பில் அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப்பெற குறைந்தது 8 மணி நேரம் கல்வி கற்பதற்கு நேரம் ஒதுக்கிட வேண்டும். மாணவ-மாணவிகள் நினைவு திறனை வளர்ப்பதற்கு அன்றாடம் படிப்பதை 2 முறை எழுதிப்பார்த்து படிக்க வேண்டும். மாணவர்கள் எந்த பாடப்பிரிவில் விருப்பம் உள்ளதோ அந்த பாட பிரிவினை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக பயின்றால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும்.
மேல்நிலைப்பள்ளியில் பயிலும்போதே அகில இந்திய அளவில் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களை முன்னரே கண்டறிந்து அந்நிறுவனங்களில் உள்ள பாடப்பிரிவுகளை தேர்ந் தேடுத்து படித்திட வேண்டும். மேலும் அரசு பொது தேர்வை எதிர் கொள்வது மிக எளிதான ஒன்றுதான் மிக கவனமுடன், மாணவ-மாணவிகள் கற்பதில் ஓர் இலக்கை நிர்ணயித்து அதில் முழுஈடுபாடுடன், தன்னம்பிக்கையுடன் படித்தால் எளிதில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபி, தலைமைஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சின்ன சேலம் வட்டாரத்திற்குட்பட்ட 11 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ரிஷிவந்தியம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
ரிஷிவந்தியம் அருகே காட்டுஎடையார் பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த திருக்கோவிலூர் அடுத்த மொகலார் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(24) என்பவரை பிடித்து அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில், அவர், பாவந்தூர், காட்டுகொட்டகையைச் சேர்ந்த சுரேஷ்(36) என்பவரிடம் வாங்கியதாக கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார், சுரேஷைப் பிடித்து விசாரித்தனர். மேலும், அவர் விளைநிலத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவர் மீது வழக்கு பதிவு செய்து சுபாஷ், சுரேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து இடையில் நின்ற மாணவர்களின் வீட்டுக்கு சென்ற கல்வி அதிகாரி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை சந்தித்து பேசினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12 - ம் வகுப்பு வரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 100 பேர் சூழ்நிலையின் காரணமாக பள்ளிக்கு வராமல் இடையில் நின்று விட்டனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதனைக்கருத்தில் கொண்ட மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்திற்கு சென்றார். அங்கு தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து இடையில் நின்ற மாணவர்களின் வீட்டுக்கு சென்று மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை சந்தித்து பேசினார்.
அப்போது என்ன காரணத்தால் மாணவர் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தினர். குடும்ப சூழ்நிலை காரணமா? மாணவர்கள் வேலைக்கு செல்கிறார்களா? என்பது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு படிப்பு மிகவும் அவசியம். எனவே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என அறிவுரை வழங்கினார். இதில் 6 மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர்.
அப்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், யூனியன் துணைத்தலைவருமான நெடுஞ்செழியன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர், வார்டு கவுன்சிலர்கள் ராஜசேகர், சிலம்பரசன், ஜெயசித்ரா அருட்செல்வன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
சென்னையிலிருந்து இன்று காலை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை வழியாக திருச்சி நோக்கி சென்றனர்.
அப்போது உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிள் வந்த போது முன்னால் சென்ற லாரி டிரைவர் லாரியை திடீரென பிரேக் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
மற்றொரு நபர் படுகாயத்துடன் வலியால் துடித்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எங்கு சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே வானவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 150 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரிய-ஆசிாியைகள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் உதவி தலைமை ஆசிரியராகவும், கணக்கு ஆசிாியராகவும் கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த துளசிராமன்(வயது 58) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 3 மாதங்களாக பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி பெற்றோரிடம் கூறினால் தேர்வில் தோல்வியடைய செய்வதாகவும் அவர் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதற்கு பயந்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் சொல்லாமல் மிகுந்த மன வேதனையில் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன், ஒரு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுபற்றி சொல்லப்போகிறேன் என்றார். அவருடன் சேர்ந்து சக மாணவிகளும் அதுபோல் தெரிவித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைகேட்டு மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி வெளியே தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்று உணர்ந்த உதவி தலைமை ஆசிரியர், கடந்த 12-ந்தேதி முதல் மருத்துவ விடுப்பு எடுத்து சென்று விட்டார். இந்த நிலையில் மருத்துவ விடுப்பு முடிந்து உதவி தலைமை ஆசிாியர் நேற்று பள்ளிக்கு வந்துள்ளார்.
இதுபற்றி அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து துளசிராமனிடம் பாலியல் தொல்லை கொடுத்தது சம்பந்தமாக கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் பெற்றோரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இதுபற்றி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் வானவரெட்டி அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்கில் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மூங்கில்துறைப்பட்டு அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரங்கப்பனூர் ஏரிக்கரை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் குப்புசாமி (வயது 22) என்பதும், கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குப்புசாமியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் விமலா முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மற்றும் அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றித் தர கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ம ருத்துவமனை எதிரே சமத்துவபுரம் கட்டியது போக மீதமுள்ள இடத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டப்படும்.
கிராம ஊராட்சிகளுக்கு திறன் உருவாக்கம் மற்றும் பயிற்சி அளித்திட ரூ. 50 லட்சம் மதிப்பில் மாவட்ட அளவிலான வள மையம் ஒன்றினை அலுவலக வளாகத்தில் கட்டுவது.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நியமன குழு, வேளாண் உற்பத்தி, கல்வி, பொது நோக்கங்கள் ஆகிய குழுவுக்கு தலைவராக ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், செயல் உறுப்பினராக வட்டார வளர்ச்சி அலு வலர் நடராஜன், மற்றும் உறுப்பி னர்களாக ஒன்றியக்குழு துணைத்தலைவர் விமலா முருகன் உட்பட கவுன்சிலர்களை நியமனம் செய்வது.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேதமடைந்த 48 தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றுவது என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் நீலமேகம், கரிகாலன், ஆனந்திநகுலன், அன்பழகன், ரவிக்குமார் பிரியாராஜராம், பூங்கலியன், சுமதிகாமராஜ், சுமதி கோவிந்தன், கல்யாணி அண்ணாமலை, லலிதா அரவிந்தன், செல்வராசு, ராஜிவ்காந்தி, ராதிகா சக்கரபாணி, தனம்மணி, மணிராமசாமி, சுகன்யா சுரேந்திரன், தேவராஜன், கண்ணம்மாள் சதாசிவம், ரூபா முரளி, மணிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ராமச்சந்திரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுக்கா, கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ராமச்சந்திரன் (வயது 36) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி கல்லாநத்தம் கிராமம் நாச்சியம்மன் கோவில் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தார். அப்போது அவர் சின்ன சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.
இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ராமச்சந்திரன் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராமச்சந்திரனை சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ராமச்சந்திரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் போலீசார் பறிமுதல் செய்த மது பாட்டில்களை நீதிமன்ற உத்தரவுபடி அழித்தது இதுவே முதல் முறையாகும்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் கடந்த 2 வருடங்களாக போலீசார் சோதனையின்போது பிடிபட்ட 1500 மது பாட்டில்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் 1500 மதுபாட்டில்களை உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் கொட்டி ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் அதனை அழித்தனர்.

தியாகதுருகம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே புது மாம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சின்னமாம்பட்டு பிரிவு சாலை அருகே சந்தேகப்படும் படியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் புது மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (21), மற்றும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (21) என்பதும் மோட்டார் சைக்கிளில் சுமார் 100 கிராம் அளவிலான கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2பேரையும் கைது செய்தனர். இதில் சதீஷ் குமார் என்பவர் டிப்ளமோ மெக்கானிக் படித்தவர் என்பதும், கோவிந்தன் பி.காம் முடித்தவர் என்பதும். மேலும் இவர்கள் இருவரும் தற்பொழுது அதே பகுதியில் செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கச்சிராயப்பாளையம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நீர்வீழ்ச்சிகளில் பெரியார் நீர்வீழ்ச்சி தவிர மற்ற எந்த நீர் வீழ்ச்சிக்கும் சாலை வசதிகள் இல்லை.
பெரியார் நீர்வீழ்ச்சிக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் சென்று குளித்து வருவார்கள். தற்போது கடலூர், புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஆனால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.