என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பலி

    உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    சென்னையிலிருந்து இன்று காலை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை வழியாக திருச்சி நோக்கி சென்றனர்.

    அப்போது உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிள் வந்த போது முன்னால் சென்ற லாரி டிரைவர் லாரியை திடீரென பிரேக் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    மற்றொரு நபர் படுகாயத்துடன் வலியால் துடித்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எங்கு சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×