search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை
    X
    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை

    தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம் - மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை

    மாணவர்கள் எந்த பாடப்பிரிவில் விருப்பம் உள்ளதோ அந்த பாட பிரிவினை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக பயின்றால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும் என மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேல்நிலை கல்வி பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கற்றலின் ஊக்கமும், வெற்றியின் ஆக்கமும் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெரும்பாலான மாணவ-மாணவிகள் மருத்துவராக விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    மருத்துவராவதர்க்கு நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும், அதற்கு நுழைவுத்தேர்வில் தொடர்புடைய பிரிவுகளில் அதிகமான கேள்விகள் வருவது கண்டறிந்து நுணுக்கமாக பயில வேண்டும்.

    மேலும் மருத்துவ மற்றும் பொறியியல் மேற்படிப்பில் அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப்பெற குறைந்தது 8 மணி நேரம் கல்வி கற்பதற்கு நேரம் ஒதுக்கிட வேண்டும். மாணவ-மாணவிகள் நினைவு திறனை வளர்ப்பதற்கு அன்றாடம் படிப்பதை 2 முறை எழுதிப்பார்த்து படிக்க வேண்டும். மாணவர்கள் எந்த பாடப்பிரிவில் விருப்பம் உள்ளதோ அந்த பாட பிரிவினை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக பயின்றால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும்.

    மேல்நிலைப்பள்ளியில் பயிலும்போதே அகில இந்திய அளவில் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களை முன்னரே கண்டறிந்து அந்நிறுவனங்களில் உள்ள பாடப்பிரிவுகளை தேர்ந் தேடுத்து படித்திட வேண்டும். மேலும் அரசு பொது தேர்வை எதிர் கொள்வது மிக எளிதான ஒன்றுதான் மிக கவனமுடன், மாணவ-மாணவிகள் கற்பதில் ஓர் இலக்கை நிர்ணயித்து அதில் முழுஈடுபாடுடன், தன்னம்பிக்கையுடன் படித்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபி, தலைமைஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சின்ன சேலம் வட்டாரத்திற்குட்பட்ட 11 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×