என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    சங்கராபுரத்தில் தண்ணீர் தொட்டியில் இருந்த சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குப்புமுதலி தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டு கட்டிடத்தின் உட்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று இருந்ததை அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் தொட்டியில் இருந்த சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    சங்கராபுரம் திருக்கோவிலூர் சாலையில் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள வன புற்று மாரியம்மன் கோவில் அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டில் இன்று காலை ரிஷிவந்தியம் அடுத்த சாத்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மற்றும் அவருடன் இரண்டு நபர்களும் மழையின் காரணமாக சங்கராபுரம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள மின் கோபுரத்தை ஆய்வு செய்து திரும்பினர்.

    சங்கராபுரம் திருக்கோவிலூர் சாலையில் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள வன புற்று மாரியம்மன் கோவில் அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அப்போது வேகமாக வந்த கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் 2 மின் கம்பங்கள் சரிந்தன. அப்போது அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நேற்று இடியுடன் கனத்த மழை பெய்து மின்சாரம் துண்டிக்கப்ட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் மற்றும் அண்ணாநகர் பகுதியில் இந்த குடிநீர் செல்லும் ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலைகளில் வெளியேறும் நிலை உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மணலூர்பேட்டை- ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் மணலூர்பேட்டையில் இருந்து ராட்சத குழாய் மூலம் சின்னசேலம் வரை செல்கிறது. இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் மற்றும் அண்ணாநகர் பகுதியில் இந்த குடிநீர் செல்லும் ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலைகளில் வெளியேறும் நிலை உள்ளது.

    இவ்வாறு வெளியேறும் குடிநீர் அந்தப்பகுதியில் குளம் போல் தேங்கி உள்ளது. மேலும் அந்த உடைந்த குழாய்களின் வழியாக மீண்டும் அங்கு தேங்கி கிடக்கும் நீர் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை உள்ளது. இவ்வாறு பல மாதங்களாக குடிநீர் வீணாகும் நிலை உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகளி டம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து குடிநீர் வீணாகாமல் தடுக்கவும் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருநாவலூர் அருகே ரெயில் முன் பாய்ந்து சலூன் கடைக்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆவணம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27). இவர் கெடிலம் கூட்டு ரோடு பகுதியில் சலூன்கடை நடத்தி வந்தார். மேலும் திருமணம் நிச்சயதார்த்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மேளக்கச்சேரி நடத்தும் வேலையையும் செய்து வந்தார்.

    கடன் சுமை காரணமாக நாகராஜின் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று இரவு இதேபோல குடும்பத்தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு 1 மணி அளவில் கோவித்துக்கொண்டு நாகராஜ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    சென்னை- கன்னியாகுமரி ரெயில் பாதையில் பரிக்கல் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற நாகராஜ் அந்த வழியாக வந்த ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை அந்த வழியாக வந்த ரெயில் பயணிகள் நாகராஜ் பிணமாக கிடப்பது குறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. விருத்தாசலம் ரெயில்வே போலீசார் நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடும் கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் திருவண்ணாமலை சாலையில், இளையாங்கன்னி கூட்டுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சங்கராபுரம் அருகே அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரதாப்(வயது 20), ராபின்(23) என்றும், பல்வேறு பகுதிகளில் 7 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.

    இதனையடுத்து, அவர்களிடமிருந்து போலீசார் 7 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.
    சங்கராபுரம் அருகே சாராயம்-மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், கொசப்பாடி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில், சாராயம் விற்ற காலனி பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். 

    இதே போன்று பூட்டை ரோடில் மது பாட்டில் விற்ற சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஹரி(28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கண்டாச்சிபுரத்தில் காரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது காரில், தடைசெய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் பாக்குகள் 18 சாக்கு மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், அவர் அனந்தபுரம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் சங்கர் (வயது 35) என்பதும்,  திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பெரிய ஓலைப்பாடி பகுதியில் இருந்து அனந்தபுரத்திற்கு காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனந்தபுரத்தை சேர்ந்த ஏழுமலை, அஜித் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட 218 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ஸ்ரீநாதா நேரில் வந்து புகையிலை பொருட்களை பார்வையிட்டு, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாரை பாராட்டினார்.

    கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். அவரது மனைவி பத்மாவதி என்கிற பிரியா (வயது 19) . பத்மாவதிக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்தது.

    சம்பவத்தன்று சுரேந்திரன் வங்கிப் பணிக்கு சென்று விட்ட நிலையில் பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தபோது வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் வாந்தி எடுத்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி உயிரிழந்தார்.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி ஓராண்டு ஆவதால் ஆர். டி. ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையற்ற 55 மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகள் மற்றும் 85 மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறையின் rte.tnschoolsgov.in என்ற இணையதளத்தின் மூலமாக 20.04.2022 முதல் 18.05.2022 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி பிரிவு சேர்க்கைக்கு மாணவர்களுக்கு 31.07.2022 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் குழந்தையின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    குழந்தையின் வயதை நிரூபிப்பதற்கு (பிறப்புச் சான்று மருத்துவமனை சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல்) என ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மனுதாரரின் இருப்பிடத்திலிருந்து பள்ளி அமைவிடம் 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கு இருப்பிடச் சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு கீழ் உள்ள அனைத்து பிரிவினரும் நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    மேலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பிரிவினர்களான ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தை, துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தை போன்றோர்களுக்கு உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை பெற்று இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர்களின் பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு நலிவடைந்த பிரிவினரின் விண்ணப்பங்களுக்கான குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும். பெற்றோர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களிலுள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள், வட்டார வள மைய அலுவலகங்கள், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலகங்கள், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் தாங்கள் சேர்க்க விரும்பும் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி சேர்க்கைக்காக விண்ணப்பங்களை 20.04.2022 முதல் 18.05.2022 வரை இணையதளம் வழியாக இலவசமாக பதிவேற்றம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பிரசித்திபெற்ற நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோ‌ஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று சனி பிரதோ‌ஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசுவாமி கோவில், வடதொரசலூர் பெரியநாயகி உடனுறை பழமலை நாதர் கோவில், எறஞ்சி காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல் லூர் கைலாசநாதர் கோவில், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத இராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் சனி பிரதோ‌ஷ வழிபாடு நடைபெற்றது.

    விபத்தில் பலியான சப்-கலெக்டர் ராஜாமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சங்கராபுரம்:

    திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கீழ்பாவதுகுடியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 50). இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை கோவிலுக்கு செல்வதற்காக தனது கணவர் சுந்தரம் (55), மகள் சிந்து (24), மகன் விக்ரம் (21), உறவினர் பழனியம்மாள் (55) ஆகியோருடன் ஒரு காரில் சங்கராபுரம் நோக்கி சென்றார். காரை கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாருக் (35) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த கார் சங்கராபுரம் அருகே மயிலாம்பாறை பகுதியில் சென்றபோது, திடீரென டயர் வெடித்து சிதறியது. இதில் நிலை தடுமாறிய கார் சாலையோரம் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியது. பின்னர் வீட்டு வாசலில் நின்றிருந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் கோபிகா (11) என்ற சிறுமி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சப்-கலெக்டர் ராஜாமணி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

    அவருடன் வந்த கணவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கார் மோதியதில் காயமடைந்த சிறுமி கோபிகாவும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். பின்னர் காயமடைந்த அனைவரும் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி கோபிகாவும் உயிரிழந்தார்.

    விபத்தில் பலியான சப்- கலெக்டர் ராஜாமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்ல முடி யாமல், மழைநீருடன் கழிவுநீர் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியம் வெப்பச்சலனம் காரணமாக சுமார் அரைமணி நேரம் பலத்த இடியுடன் கூடிய கனமழை மழை பெய்தது.

    இந்த மழைக்கு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்ல முடி யாமல், மழைநீருடன் கழிவுநீர் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையில் சென்ற இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர கடைக்காரர்கள் முகம் சுளித்தனர்.

    மேலும் தியாகதுருகம் சாலையில் ஒரு சில இடங்களில் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க்கு செல்ல வழி இல்லாமல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிக் கிடந்தது. இதில் வாகனங்கள் மிதந்து சென்றன.

    எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வரும் காலங்களில் மழை பெய்தால் கழிவுநீர் பிரதான சாலைகளில் ஓடாமல் கழிவுநீர் கால்வாயில் செல்லவும், மழைநீர் சாலையில் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    ×