
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆவணம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27). இவர் கெடிலம் கூட்டு ரோடு பகுதியில் சலூன்கடை நடத்தி வந்தார். மேலும் திருமணம் நிச்சயதார்த்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மேளக்கச்சேரி நடத்தும் வேலையையும் செய்து வந்தார்.
கடன் சுமை காரணமாக நாகராஜின் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று இரவு இதேபோல குடும்பத்தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு 1 மணி அளவில் கோவித்துக்கொண்டு நாகராஜ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
சென்னை- கன்னியாகுமரி ரெயில் பாதையில் பரிக்கல் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற நாகராஜ் அந்த வழியாக வந்த ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை அந்த வழியாக வந்த ரெயில் பயணிகள் நாகராஜ் பிணமாக கிடப்பது குறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. விருத்தாசலம் ரெயில்வே போலீசார் நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.