
சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் திருவண்ணாமலை சாலையில், இளையாங்கன்னி கூட்டுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சங்கராபுரம் அருகே அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரதாப்(வயது 20), ராபின்(23) என்றும், பல்வேறு பகுதிகளில் 7 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களிடமிருந்து போலீசார் 7 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.