என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி-துருகம் சாலையில் மழைநீருடன் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
கள்ளக்குறிச்சி-துருகம் சாலையில் மழைநீருடன் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்ல முடி யாமல், மழைநீருடன் கழிவுநீர் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியம் வெப்பச்சலனம் காரணமாக சுமார் அரைமணி நேரம் பலத்த இடியுடன் கூடிய கனமழை மழை பெய்தது.
இந்த மழைக்கு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்ல முடி யாமல், மழைநீருடன் கழிவுநீர் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையில் சென்ற இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர கடைக்காரர்கள் முகம் சுளித்தனர்.
மேலும் தியாகதுருகம் சாலையில் ஒரு சில இடங்களில் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க்கு செல்ல வழி இல்லாமல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிக் கிடந்தது. இதில் வாகனங்கள் மிதந்து சென்றன.
எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வரும் காலங்களில் மழை பெய்தால் கழிவுநீர் பிரதான சாலைகளில் ஓடாமல் கழிவுநீர் கால்வாயில் செல்லவும், மழைநீர் சாலையில் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story






