என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #goldsmuggling

    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த இப்ராகிம் என்பவர் கொண்டு வந்த டேபிள் மின் விசிறியை சோதனை செய்தனர். அதில் 350 கிராம் எடையுள்ள தங்க கட்டி மற்றும் தங்க செயினை மறைத்து வைத்து வந்தது தெரிந்தது.

    அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியான சென்னையைச் சேர்ந்த முகமது 400 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகளை குடியுரிமை பகுதியில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்து விட்டு, சுங்க சோதனை முடிந்து வெளியே செல்லும் போது மீண்டும் தங்கக் கட்டிகளை எடுக்க முயன்றார்.

    அப்போது அவரை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்தனர். 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும். #goldsmuggling

    தாம்பரம் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி நிலம் அபகரிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அண்ணாநகர் எல்.ஐ.சி. பீமாஜீவன் காலனியைச் சேர்ந்தவர் அனித் மேத்யூ (வயது 61) இவருக்கு சொந்தமான 4,800 சதுரஅடி நிலம் தாம்பரம் அருகே சுண்ணாம்பு கொளத்தூர் என்ற இடத்தில் உள்ளது.

    இந்த நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்து சொந்தம் கொண்டாடினார்கள். இதுபற்றி அனித் மேத்யூ மத்திய குற்றப்பிரிவு போலீசில் நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் கொளத்தூரைச் சேர்ந்த காளிதாஸ், வேளச்சேரியை சேர்ந்த ராஜா என்ற ராஜசேகர் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான வேளச்சேரி ராஜா 177-வது வட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ஆவார். இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளச்சேரி:

    சித்தாலப்பாக்கம் ஜெயா நகரை சேர்ந்தவர் மோகன சுந்தரவல்லி (66). இவர் நேற்று மாலை சித்தாலப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு அருகே ரெயில் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Death

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே நத்தப்பேட்டை - வாலாஜாபாத் இடையே உள்ள தண்டவாளத்தில் 50வயது மதிக்கத்தக்க பெண் ரெயில் மோதி பலியாகி கிடந்தார். அவர் யார்? எந்த பகு தியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    இதுபற்றி செங்கல்பட்டு ரெயில் போலீசார் விசாரித்து வருகின் றனர்.

    வாயில் நெருப்பை ஊதி சாகசம் செய்த மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை ஊரப்பாக்கம் அய்யஞ்சேரியைச் சேர்ந்தவர் ஜான் வின்சென்ட். இவரது மகன் ஜெபின் (வயது16). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் வாயில் மண்எண்ணெய் ஊற்றி நெருப்பை ஊதி பெரிதாக்கும் சாகச நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்தார். அது போலவே தானும் சாகசம் நிகழ்த்த முடிவு செய்தார்.

    அதன்படி மாணவர் ஜெபின் தீப்பந்தம் ஒன்றை கையில் பிடித்துக் கொண்டார். தனது வாயில் மண்எண்ணெய் ஊற்றி தீப்பந்தம் மீது வேகமாக ஊதினார். அப்போது மண்எண்ணெய் அவர் உடல் முழுவதும் பட்டதால் தீப்பிடித்துக் கொண்டது.

    உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபின் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்போரூரில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து புகை வருவதை அறிந்த வாலிபர் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக இறங்கியதால் உயிர் தப்பினர்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த மடையத்தூரைச் சேர்ந்தவர் சிவா. இவர் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்போரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    இரவு 8 மணியளவில் திருப்போரூர் அடுத்த தண்டலம் அய்யப்பன் கோவில் அருகே வந்தபோது காரின் ஏ.சி.யிலிருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக சிவா, மனைவி மற்றும் குழந்தையுடன் இறங்கினார். சிறிது நேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிந்தது.

    இதுபற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறு சேரி தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பிடித்த தீயை அணைத்தனர். என்றாலும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

    கார் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிவா குடும்பத்துடன் கீழே இறங்கியதால் அவர்கள் தப்பினர்.

    இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். # tamilnews
    துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கோட் பட்டன் மற்றும் கேக்கில் மறைத்து வைத்து ரூ.25 லட்சம் தங்கம் கடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். #ChenniAirport
    ஆலந்தூர்:

    பக்ரைனில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஒரு பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அரியலூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சுற்றுலா விசாவில் சென்று வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர் அணிந்திருந்த ‘கோட்’டை சோதனை செய்யப்பட்டது.

    அதில் பொருத்தப்பட்டிருந்த பட்டன் மற்றும் எம்ப்ராய்டரி டிசைன்கள் அனைத்தும் தங்கம் என தெரிய வந்தது. தங்கத்தை பட்டன்களாகவும், எம்ப்ராய்டரி டிசைன்களாகவும் மாற்றி கடத்தி வந்துள்ளார். எனவே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் எடை 270 கிராம். அதன் மதிப்பு ரூ.9 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அதே போன்ற கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்திலும் பயணிகளிடம் போலீசார் சோதனையிட்டனர். சென்னையைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் கைப்பை மற்றும் லக்கேஜை சோதனையிட்ட போது தங்கத்தை ‘கீ செயின்’ ஆகவும், பெரிய கம்பி வடிவிலும் மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரிடம் இருந்து 200 கிராம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சமாகும்.

    மேலும் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்திலும் பயணிகளிடம் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சிவகங்கையைச் சேர்ந்த பிரவீன் என்பவர் ‘சுவீட்’ மற்றும் ‘கேக்‘குகள் அடங்கிய பெட்டிக்குள் தங்கம் கட்டிகளை வைத்து கடத்தி வந்து இருந்தார்.

    அவரிடம் இருந்து 350 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10.5 லட்சம் இன்று அதிகாலை நடந்த சோதனையில் மொத்தம் 850 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.25.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #ChenniAirport
    செங்கல்பட்டு அருகே ரெயில் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே நத்தப்பேட்டை - வாலாஜாபாத் இடையே உள்ள தண்டவாளத்தில் 50வயது மதிக்கத்தக்க பெண் ரெயில் மோதி பலியாகி கிடந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    இதுபற்றி செங்கல்பட்டு ரெயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தாழம்பூரில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    திருப்போரூர்:

    மறைமலைநகர் பகுதியைச்சேர்ந்தவர் சேது ராமன்(வயது 39). சிறு சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு அவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். தாழம்பூர் கூட்டு ரோடு சாலையில் வந்த போது அவ்வழியே சென்ற தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    கேளம்பாக்கம் அருகே சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரவு 11 மணி அளவில் விடுதி நுழைவு வாயில் முன்பு புதுப்பாக்கம் - சிறுசேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். #lawcollegestudent

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். சட்டக்கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சுமார் 200 பேர் தங்கியுள்ளனர்.

    நேற்று இரவு 2 மாணவர்கள் தாழம்பூர் சென்றுவிட்டு கல்லூரி விடுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    தாழம்பூர் கூட்டுரோடு பகுதியில் வந்த போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் மாணவர்களை நிற்குமாறு கூறியும் அவர்கள் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அவர்களை உரக்கச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய மாணவர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.

    இதற்கிடையே விடுதிக்கு திரும்பிய மாணவர்கள் போலீசார் தங்களை தாக்கியதாக சக மாணவர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரவு 11 மணி அளவில் விடுதி நுழைவு வாயில் முன்பு புதுப்பாக்கம் - சிறுசேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.“ மாணவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. சுப்புராஜூ, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #lawcollegestudent

    கூடுவாஞ்சேரி அருகே பஸ் மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #CarAccident
    செங்கல்பட்டு:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 62), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி செல்வி (52).

    இவர்கள் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தங்கி வேலை பார்த்து வரும் மகனை பார்க்க காரில் வந்தனர். உடன் செல்வியின் தங்கை சித்ரா (43), அவரது மகள் தாரணி (17) ஆகியோரும் வந்தனர். காரை டிரைவர் ஜெயகாந்தன் ஓட்டினார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது தாம்பரத்தில் இருந்து குமிழி நோக்கி சென்ற அரசு பஸ் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்துக்குள் செல்ல திரும்பியது.

    அந்த நேரத்தில் வேகமாக வந்த கார் திடீரென பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நசுங்கியது.

    காரில் இருந்த பாலகிருஷ்ணன், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். செல்வி, தாரணி, டிரைவர் ஜெயகாந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் செல்வியின் நிலைமை மோசமாக உள்ளது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #CarAccident

    விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றையொட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையில் ஏராளமான வீடுகள் உள்ளன.

    தற்போது மழை காலம் நெருங்குவதையடுத்து அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றையொட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த 47 வீடுகளை அகற்ற கடந்த மாதம் பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டது.

    ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது வீட்டை காலி செய்யாமல் அங்கேயே தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் வந்தனர். அவர்கள் பொருட்களை அப்புறப்படுத்தி வீடுகளை இடித்து அகற்றினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க போவதாக கூறி திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றினார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    வீட்டுக்குள் அவரது மனைவியும், 2 குழந்தையும் இருந்தனர். அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து கர்ணனையும், அவரது குடும்பத்தையும் மீட்டனர்.

    பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதில் பெரும் பரபரப்பு எற்பட்டது.

    தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. தீக்குளிக்க முயன்ற கர்ணனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ×