என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் பா.ம.க.வினர் புகார் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு:
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால் தலைமையில் மாநில நிர்வாகிகள் எஸ்.எல்.பரமசிவம், எம்.பி.வெங்கடாசலம், ஷேக்முகைதீன் மற்றும் கட்சியினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
சத்தியமங்கலம் தாலுகா ஆலாத்துகோம்பை எம்.ஜி.ஆர்.நகரில் பா.ம.க.வை சேர்ந்தவர்கள் கரும்பு வெட்டி கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வீட்டுமனை பட்டாக்களை வைத்து கடனை பெற்றுக்கொண்டார்கள். அந்த நபர் 30 சதவீதம் வரை கந்து வட்டி வசூல் செய்து உள்ளார். பல லட்சம் ரூபாய் பணத்தை மக்களும் கட்டி உள்ளனர். ஆனால் வீட்டுமனை பட்டாவை திருப்பி கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து மக்களுடைய வீட்டுமனை பட்டாக்களை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர். இதேபோல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிலர் தனித்தனியாக கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனுக்களை கொடுத்தனர்.
பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் 2020-2021 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அமைப்பினருக்கு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.3 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் கடன் உதவி பெற விரும்புபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
பொதுகால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்ய அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில் ஆண்டுக்கு 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். பெண்களுக்கான புதிய பொற்கால திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதம் ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மேலும், மகளிர் திட்ட அதிகாரியால் தரம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
சுய உதவிக்குழுவில் உள்ள ஆண்களுக்கும் அதிகபட்ச கடன் தொகையாக தலா ரூ.60 ஆயிரம் வீதம் ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஆண்டுக்கு 5 சதவீத வட்டியில் வழங்கப்படும். ஒரு கறவை மாடு வாங்க ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகளுக்கு ரூ.60 ஆயிரம் வரை ஆண்டுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
இதேபோல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பிலும் ரூ.1½ கோடி கடன் உதவி வழங்கப்பட உள்ளது. இந்த கடன் உதவியை பெற விரும்புபவர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சாதி, வருமான சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோட்டில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 451 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்தது.
இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட குமரன்நகரில் 2 பேரும், பாவந்தி வீதியில் 55 வயது பெண்ணும், நேதாஜி 2-வது வீதியில் 48 வயது பெண்ணும், சூரம்பட்டியில் 51 வயது ஆணும், பழனியம்மாள் வீதியில் 43 வயது ஆணும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பவானி வீரணாபுரத்தில் 2 பேருக்கும், காவிரி வீதியில் 64 வயது முதியவருக்கும் கொரோனா உறுதியானது.
கொரோனாவுக்கு ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். ஈரோடு கொத்துக்காரர்தோட்டம் பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் காய்ச்சல், மூச்சு திணறல் தொந்தரவு காரணமாக கடந்த 10-ந் தேதி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர். தினமும் வேலைக்கு வந்து சென்றுள்ளார். அவர் தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியாற்றி வந்த பிரிவு அலுவலகம் மட்டும் மூடப்பட்டு உள்ளது. மேலும், ஈரோடு மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் சுமார் 120 ஊழியர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஈரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடையிலும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் பணியாற்றி வந்த துணிகள் பிரிவு மட்டும் மூடப்பட்டது. மேலும், அந்த ஜவுளிக்கடையில் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

வங்கி அதிகாரிபோல் பேசி ரூ.68 ஆயிரம் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி புகார் அளித்துள்ளார்.
ஈரோடு:
சிவகிரி தாண்டாம்பாளையம் மடத்துநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
எனக்கு சிவகிரியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 13-ந் தேதி எனது செல்போனுக்கு ஒருவர் தொடர்புகொண்டு, வங்கியின் மேலாளர் பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு, வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக்கொண்டார். அதன்பிறகு எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.18 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதேபோல் எனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டது. எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானது.
அந்தியூர்:
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில் 350 மூட்டை பருத்தி விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.3,819-க்கும், அதிக பட்ச விலையாக ரூ.4,669-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. 674 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் சிறிய தேங்காய் ஒன்று 6 ரூபாய் 20 காசுக்கும், பெரிய தேங்காய் 15 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது.
இதேபோல் கொப்பரை தேங்காய் 86 மூட்டைகள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.8,669-க்கும், அதிகபட்ச விலையாக 9,606-க்கும் ஏலம் போனது.
எள் 54 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.8,599-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.9,119-க்கு ஏலம் போனது. மொத்தமாக விவசாய விளைபொருட்கள் 1 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1467 கனஅடியாக அதிகரித்தது.
பவானிசாகர்:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 105 அடிக்கு தண்ணீர் நிறுத்த முடியும். நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். அங்கு மழை பொழியும் போதெல்லாம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
அணையில் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் வழியாக பெறும் நீரை கொண்டு சுமார் 2½ லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 456 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.42 அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1467 கனஅடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டமும் 82.57 அடியாக சற்று உயர்ந்தது.

வியாபாரம் செய்து வரும் கடை உரிமையாளர்கள் வேகத்தடையின் மீது வெள்ளை பெயிண்டால் கோடுகள் போட்டனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சவீதா சந்திப்பு செல்லும் வாகனங்கள் அகில்மேடு வீதி வழியாக சென்று வருகின்றன. நாச்சியப்பா வீதி முதல் சவீதா சந்திப்பு வரை இந்த ரோடு நெரிசல் மிகுந்ததாக இருக்கிறது. ரோட்டின் 2 பக்கமும் சாலையை ஒட்டி ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பான சாலையாக இது உள்ளது. இங்கு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், வேகத்தடையை அடையாளப்படுத்தும் பெயிண்ட் அடிக்கப்படவில்லை. ஜீப்ரா கோடு எனப்படும் இந்த கோடுகள் வரையப்படாததால் அங்கு வேகத்தடை இருப்பது பலருக்கும் தெரியாமல் வந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அந்த பகுதியில் வியாபாரம் செய்து வரும் கடை உரிமையாளர்கள் வேகத்தடையின் மீது வெள்ளை பெயிண்டால் கோடுகள் போட்டனர்.
இதுபற்றி கடை உரிமையாளர் மீன்ராஜா என்கிற ராஜசேகர் கூறும்போது, “மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து நெரிசல், இருட்டு காரணமாக வேகத்தடையை கவனிக்காமல் வருபவர்கள் விபத்தில் சிக்கி விடுகிறார்கள். இது குறித்து காவல்துறை, மாநகராட்சி என்று பலமுறை புகார்கள் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் மழை நேரத்தில் கைக்குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தம்பதியினர் வேகத்தடை தெரியாமல் வந்து, தடுமாறி விழுந்தனர். இதில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. எனவேதான் நாங்கள் பெயிண்ட் அடித்தோம்”, என்றார்.

ஈரோடு மாவட்டத்தில் 2 செவிலியர்கள் உள்பட 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 451 ஆக உயர்ந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி 422 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதில் 8 பேர் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 414 ஆக குறைந்தது.
அதேசமயம் ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு மாவட்ட முகவரியை குறிப்பிடுதல், வேறு மாவட்டத்தில் சென்று சிகிச்சை பெறுதல் உள்ளிட்ட காரணங்களால் 9 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். மேலும் நேற்று 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 451 ஆக உயர்ந்தது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அசோகபுரி பகுதியில் 4 பேர், சூரம்பட்டியில் 2 பேர், வைராபாளையத்தில் 2 பேரும், காமராஜர் வீதி, சம்பத்நகர், வரதராஜன்வீதி, பெரியண்ணா வீதி, செங்கோடன் வீதி, மணிக்கூண்டு, ரெயில்வே காலனி, கருங்கல்பாளையம், மாணிக்கம்பாளையம், ஸ்டோனி பாலம், வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர், பாவந்தி வீதி, பெரியார்நகர், சிதம்பரம் காலனி, ஈரோட்டில் உள்ள தனியார் மகளிர் விடுதி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் உள்ளனர்.
இதேபோல் பவானி செம்புளிச்சாம்பாளையம், விஜயமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பெருந்துறை ஜீவாநகர், டி.என்.பாளையம் அருகே டி.ஜி.புதூர் நேதாஜிவீதி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள்.
கொரோனா தடுப்பு பணியில் முதன்மை பணியாளர்களாக கருதப்படும் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் நேற்று ஒரே நாளில் 2 செவிலியர்கள் உள்பட 6 முதன்மை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் 20 பேர் நேற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினார்கள். இதுவரை 196 பேர் குணமடைந்து உள்ளனர். 248 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.
தாளவாடி, பெருந்துறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு:
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தாளவாடி மற்றும் அண்ணா நகர் பகுதியில் நேற்று தாசில்தார் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேம்குமார், சுந்தரவடிவேல் ஆகியோர் நின்றுகொண்டு அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தார்கள். மொத்தம் 71 பேருக்கு தலா 100 ரூபாய் என ரூ.7,100 அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பவானி ரோடு, ஈரோடு ரோடு, குன்னத்தூர் ரோடு, காஞ்சிக்கோவில் ரோடு முதலான இடங்களில் நின்றுகொண்டு முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்தார்கள்.
முகக்கவசம் அணியாமல் வணிக நிறுவனங்கள், டீ கடைகளில் நிற்பவர்கள், வாகனங்களில் வருபவர்கள் என அனைவருக்கும் தலா ரூ.50 அபராதம் விதித்தார்கள். நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

கொடுமுடி அருகே சமூக இடைவெளி கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொடுமுடி:
கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் உள்ள கடைகளில் ஆய்வில் ஈடுபட்டார்கள். அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்காத டீக்கடைகள், பேக்கரிகள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் முகக்கவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. மண்டல துணைதாசில்தார் மரியஜோசப், கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வருவாய் ஆய்வாளர் நிர்மலாதேவி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் பலர் இந்த ஆய்வு பணியில் கலந்துகொண்டார்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வீட்டிற்குள் இருந்த ஏர்கூலர் வெடித்ததில் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் ஏர்கூலர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
வீட்டிற்குள் இருந்த 13 வயது சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீட்டனர்
வியாபாரம் செய்ய முகமதுஇலியாஸ் தனது மனைவியுடன் மளிகை கடைக்கு சென்றபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

கண்பார்வையற்ற முதியவர் வீட்டில் ரூ.24 ஆயிரத்துக்கு பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தன. அரசு அந்த பணத்தை புதிதாக மாற்றித்தர உதவுமா? என்று அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பொதியாமூப்பனூரை சேர்ந்தவர் சோமு (வயது 58). கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (49). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கொரோனா காலத்திற்கு முன் இவர் பல ஊர்களுக்கு சென்று ஊதுபத்தி கற்பூரம் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். மேலும் அரசின் முதியோர் உதவித்தொகையும் பெற்று வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.
100 நாள் வேலை மற்றும் தங்களால் முடிந்த கூலிவேலைக்கு கணவன்-மனைவி இருவரும் சென்று வந்தார்கள். தங்களுடைய உணவு தேவைக்கு போக சேமித்த 500 மற்றும் 1000 ரூபாய்களை பல ஆண்டுகளாக தன் தாயாரிடம் சோமு கொடுத்து வந்தார்.
சோமுவின் வயதான தாயாரும் அந்த பணத்தை வீட்டிலேயே பத்திரமாக சமையல் பொருட்கள் வைக்கும் டப்பாக்களில் சேர்த்து வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் தன் தாயிடம் கொடுத்த பணத்தை சோமு மறந்துவிட்டார். வயது முதிர்வின் காரணமாக அவருடைய தாயாரும் அதை மறந்துவிட்டார். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கால் வருமானமின்றி தவித்த சோமு, தன் தாயாரிடம் பணம் ஏதாவது இருக்குமா? என்று கேட்டார். அவர் பணம் வைத்த இடத்தை மறந்துவிட்டதாக கூறினார். அதன்பின்னர் கணவன், மனைவி, தாய் என 3 பேரும் வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார்கள். அப்போது ஒரு டப்பாவில் மகன் கொடுத்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார். மொத்தம் 24 ஆயிரம் இருந்தது. அதைப்பார்த்ததும் கொரோனா காலத்தில் வாழ வழி பிறந்ததே என 3 பேரும் மகிழ்ந்தார்கள்.
பின்னர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்க சோமு பையுடன் கடைக்கு சென்றார். கடையில் அவர் கொடுத்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்த உரிமையாளர்கள் வியப்படைந்தார்கள். ‘இது பழைய செல்லாத நோட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்துவிட்டது‘ என்று அவர்கள் சோமுவிடம் கூறியதால் அவர் ஏமாற்றுத்துடன் வீடுவந்து சேர்ந்தார்.
கண்பார்வையில்லாத போதும் ஊர் ஊராக சென்று ஊதுபத்தி விற்ற பணம் கைக்கு கிடைத்தும், பலன் இல்லாமல் போய்விட்டதே என்று கண்ணீர் விட்டார். இதை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித்திர அரசு உதவுமா? என்று அவர் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.