என் மலர்
நீங்கள் தேடியது "Speed Brake"
- உல்பேவை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்தார் என தெரிவித்தனர்.
- இதனால் உல்பே குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (65). கடந்த டிசம்பர் 16-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்ததல் உல்பே குடும்பத்தினர் சோகமடைந்தனர்.
அதன்பின், அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். வீட்டில் இறுதிச்சடங்குகள் தயாராகி கொண்டிருந்தன.
வீட்டுக்குச் செல்லும் வழியில் வேகத்தடை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது உல்பேவின் விரல்கள் அசைந்தன. இதைக் கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவருக்கு உயிர் இருக்கிறது என நம்பினர்.
இதையடுத்து, உல்பேவை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 வாரம் வரை மருத்துவமனையில் அவர் தங்க வைக்கப்பட்டார். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் அவர் குணமடைந்து உடல்நலம் தேறியுள்ளார்.
இந்நிலையில், உல்பே சிகிச்சை முடிந்து கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டுக்கு நடந்தே சென்றார்.
வேகத்தடை வழியே ஆம்புலன்ஸ் சென்றதில் உல்பே உயிர் பிழைத்து இன்று குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வாய்க்கால் மேடு ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
- பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் முத்தணம்பாளையம் பைவ் ஸ்டார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திருப்பூரு தெற்கு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 59 முத்தணம்பாளையம் வாய்க்கால் மேடு ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைகின்றனர்.
எனவே பள்ளிக்கு அருகே வேகத்தடை அமைத்து விபத்து ஏற்படாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






