என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருத்தி
    X
    பருத்தி

    அந்தியூரில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானது.
    அந்தியூர்:

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில் 350 மூட்டை பருத்தி விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.3,819-க்கும், அதிக பட்ச விலையாக ரூ.4,669-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. 674 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் சிறிய தேங்காய் ஒன்று 6 ரூபாய் 20 காசுக்கும், பெரிய தேங்காய் 15 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது.

    இதேபோல் கொப்பரை தேங்காய் 86 மூட்டைகள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.8,669-க்கும், அதிகபட்ச விலையாக 9,606-க்கும் ஏலம் போனது.

    எள் 54 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.8,599-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.9,119-க்கு ஏலம் போனது. மொத்தமாக விவசாய விளைபொருட்கள் 1 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
    Next Story
    ×