என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    மொடக்குறிச்சி:

    ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கையில் புகழ்பெற்ற விளையாட்டான பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கிளித்தட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த விளையாட்டுப் போட்டியில் ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, கோவை, மேட்டுப்பாளையம் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 14 முகாம்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.  இந்த விளையாட்டுப் போட்டியை மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்தார். ஒரு அணிக்கு 10 பேர் வீதம் கிளித்தட்டு போட்டி நடைபெற்றது.
    இந்த போட்டியில் சிவகங்கை மாவட்டம் பாறையூர் லைட்டிங் கேள்ஸ் அணி வெற்றி பெற்றது. அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5001, சுழல்கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி ஈரோ லங்கா 7 ஸ்டார் அணிக்கு ரூ.4001 மற்றும் சுழல்கோப்பையும் , மூன்றாமிடம் பிடித்த கரூர் மாவட்டம் குளித்தலை இருமூதிபட்டி ஐபி லங்கா அணிக்கு ரூ.3001 மற்றும் சுழல் கோப்பையும், நான்காம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி ஈரோ லங்கா ஏ அணிக்கு ரூ.2001 மற்றும் சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது

    மேலும் மூன்று ஆட்ட நாயகன் விருது வழங்கப்-பட்டது. அதில் ஈரோடு லங்கா 7 ஸ்டார் அணியைச் சேர்ந்த சவுந்தர்யாவுக்கு சிறந்த கிளி விடுதல் விருதும், திண்டுக்கல் மாவட்டம் காரையூர் லைட்டிங் கேள்ஸ் அணியைச் சேர்ந்த லத்திஷ்க்கு சிறந்த கிளி விடுதல் விருதும், சிறப்பாக விளையாடிய குளித்தலை ஐபி அணியைச் சேர்ந்த சாரோவுக்கும் விருது வழங்கப்பட்டது.
    பரிசுகளை மலையம்-பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழங்கினார்.
    போட்டியை பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மொடக்குறிச்சி

    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி குழாய் பதித்தனர்.

    அப்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் சென்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு மக்கள் புகார் தெரிவித்தும் சரிசெய்ய-வில்லை. இதனால் கடந்த 3 நாட்களாக சாலையில் குடிநீர் செல்கிறது. 

    மேலும் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வாகனங்களில் செல்வோர் மீது படுகிறது. பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது சேற்று நீர் வாகனங்கள் மூலம் வாரி அடிக்கப் படுவதால் மிகவும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். 

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருந்துறை அருகே வட மாநில வாலிபரிடம் செல்போன் பறித்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே வட மாநில வாலிபரிடம் செல்போன் பறித்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம், ரைப்பூர் பகுதியை சேர்ந்தவர் சோட்கோ (26). இவர் பெருந் துறை புதிய பஸ் நிலையம் அருகே தங்கி வசித்து வருகிறார். இவர் பெருந்து¬  செட்டி தோப்பு அருகே தள்ளு வண்டியில் ஜூஸ் போடும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று கடையில் ஜூஸ் போட்டுக் கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜூஸ் குடித்தனர். தொடர்ந்து அவர்கள் சோட் கோ மணியிடம் இருந்து திடீரென செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில்  தப்பி ஓடினர். 
    இதனால் அதிர்ச்சி அடைந்த சோட்கோமணி திருடன்.. திருடன் என்று சத்தம் போட்டு கொண்டு அவர் களை துரத்தினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர் களும் அவர்களை துரத்தினர். இதனால் வெங்கமேடு வளைவு பகுதியில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் அவர்களை பிடித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 15 வயது மாணவன் மற்றும் 18 வயது வாலிபர் என தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
    வாகனங்கள் பல மணி நேரம் காத்திருப்பதால் உணவு கூட கிடைக்க முடியாமல் தவித்து வருவதாக கூறி பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள், வியாபாரிகள், லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது.

    இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வருகிறது.

    இந்நிலையில் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    அதன்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் காய்கறிகள், உணவு பொருட்கள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக கூறியும்,

    வாகனங்கள் பல மணி நேரம் காத்திருப்பதால் உணவு கூட கிடைக்க முடியாமல் தவித்து வருவதாக கூறி பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள், வியாபாரிகள், லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் இரவு நேர போக்குவரத்து தடை தொடர்ந்தது.

    இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் தடை செய்யப்பட்ட போக்கு வரத்தின் காரணமாக தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் திம்பம் மலைப்பாதை வழியாக விவசாய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், மருத்துவம் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அடையாள அட்டையை காண்பித்து 24 மணி நேரமும் திம்பம் மலைப்பாதையில் பயணிக்கலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    மேலும் 12 சக்கர லாரிகள் மற்றும் 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதி இல்லை எனவும், வாகனங்கள் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.

    ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 சக்கர லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வழங்கிய தீர்ப்பில் 12 சக்கர லாரிகளுக்கு எப்போதும் அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக கூறி நேற்று முன்தினம் அனைத்து வணிகர்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அதில் இன்று சத்தியமங்கலம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும், ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகள் ஓடாது எனவும், பண்ணாரி சோதனை சாவடியில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

    அதன்படி சத்தியமங்கலம் முழுவதும் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. சத்தியமங்கலம் முழுவதும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டுவாம்பாளையம், வடக்கு பேட்டை, திப்புசுல்தான் ரோடு, சத்தியமங்கலம் பஸ் நிறுத்தம், காந்திநகர், எஸ்.ஆர்.டி. கார்னர், அரியப்பம்பாளையம் போன்ற பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு காணப்பட்டன.

    எனினும் பால், மருந்தகம், ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் செயல்பட்டன. சத்தியமங்கலம் முழுவதும் ஆட்டோக்கள், லாரிகளும் ஓடவில்லை. இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் காரணமாக பல கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது. சத்தியமங்கலம் முழுவதும் முக்கியமான வீதிகளில் கடையடைப்பு போராட்டம் தொடர்பாக சுவரொட்டிகள் இடம்பெற்று இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதேப்போல் திம்பம் மலைப்பாதை மற்றும் தாளவாடி பகுதிகளிலும் இரவு நேர போக்குவரத்து தடையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம்- தாளவாடியில் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேருந்து சேவைகள் வழக்கம்போல் நடந்தது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    சென்னிமலையில் நடந்த கீழ்பவானி பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை ரத்து செய்யக்கோரி மாநாடு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
    சென்னிமலை

    சென்னிமலையில் நடந்த கீழ்பவானி பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை ரத்து செய்யக்கோரி மாநாடு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

    சென்னிமலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் முருங்கத்தொழுவு முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி தலைமையில் நடந்தது. 

    இதில் பொடாரன், துளசிமணி உள்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
    இந்த கூட்டத்தில் வருகிற 24-ந் தேதி பெருந்துறையில் கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் திரட்டி கீழ்பவானி பிரதான கால்வாய், பகிர்மான கால்வாய், கிளைக் கால்வாய்களில் கான்கிரீட் சுவர் மற்றும் தளம் அமைப்பதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    மேலும் கூட்டத்தில் கீழ்பவானி கால்வாயில் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய பழைய கட்டுமானங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு ஆதரவு தெரிவிப்பது அதற்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என அதிகாரிகளுக்கு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. 
    கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள விவசாயிகளின் நலனும், குடிநீரை பயன்படுத்தும் பொது மக்களின் நலன் கருதியும், சுற்றுச்சூழலை கருதியும், மண் கால்வாய் மண் கால்வாயாக பராமரிக்க கோரியும் கான்கிரீட் போடும் திட்டத்தினை மட்டும் உடனடியாக ரத்து செய்யக் கோரி பெருந்துறையில் நடக்கும் கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்துவது என முடிவு செய்தனர்.
    கொளாநல்லி கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 112-வது ஆண்டாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கொடுமுடி

    கொளாநல்லி கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 112-வது ஆண்டாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கொடுமுடி அருகே கொளாநல்லியில் ஸ்ரீ பூமி நீளா சமேத கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 112&ம் ஆண்டாக சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையொட்டி காலை 7.30 மணிக்கு சுவாமிக்கு அபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    தொடர்ந்து யாக பூஜை, ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், மாங்கல்ய பூஜையும் தொடர்ந்து மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தேங்காய் உருட்டி விளையாடுதலும், மகா தீபாராதணையும், திருமண விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

    சுவாமிக்கு திருமண வைபவத்தை ஸ்ரீவில்லிப்-புத்தூர் ஆண்டாள் கோவில் ஸ்ரீ சடகோப இராமனுஜர் ஜீயர் சுவாமிகள் நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருமண நிகழ்ச்சியை கண்டு வணங்கி சென்றனர்.
    லாரி உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள் தங்களது லாரிகளை பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வரிசையாக நிறுத்தி விட்டு காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடையை கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று சத்தியமங்கலம், திம்பம் மலைப்பகுதி, தாளவாடி பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    2000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கியமான வீதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் டிரைவர்கள் வியாபாரிகள் விவசாயிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் சார்பில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை பரிசோதனைச் சாவடி அருகே காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதற்காக அங்கு பிரம்மாண்ட சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள் என்பதால் அதற்குத் தகுந்தவாறு இருக்கைகளும் போடப்பட்டு இருந்தன. காலை 9.30 மணி முதல் காத்திருப்பு போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் வரத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல ஏராளமானோர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்க வந்தனர்.

    லாரி உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள் தங்களது லாரிகளை பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வரிசையாக நிறுத்தி விட்டு காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்யமங்கலம் டி.எஸ்.பி. ஜெயபாலன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சித்தோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சித்தோடு:

    சித்தோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 25). கடந்த சில தினங்களுக்கு முன்பு மோகன்ராஜ் கோவை யில் உள்ள ஒரு  தனியார் கல்லூரியில் சான்றிதழ்கள் வாங்கி வருவதாக வீட்டில் கூறி விட்டு திருவண்ணா மலையில் இருந்து பஸ்சில் கோவைக்கு வந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பைபாஸ் பகுதியில் எலி மருந்து  (விஷம்) குடித்து மயங்கி கிடந் தார். இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து மயங்கி கிடந்த மோகன்ராஜை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மோகன் ராஜ் ஈரோடு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு அங்கு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந் தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் ஏன்? தற் கொலை செய்து கொண் டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மழையின் அளவு குறைந்துள்ளதால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.
    சத்தியமங்கலம், 

    மழையின் அளவு குறைந்துள்ளதால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 83.39 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 115 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

    அணையில் காலிங்க-ராயன் வாய்க்கால் பாசனத்துக்கு 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடியும், குடிநீர் தேவைக் காக 200 கனஅடியும் என மொத்தம் 705 கன அடி தண்ணீர் வெளியேற் றப்பட்டு வருகிறது. 

    கோடை காலம் தொடங்கிய நிலையில் நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி யுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன்,  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பவானி பழைய பஸ் நிலையம் அருகே ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர்  நின்று கொண்டிருந்தார்.

     அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் பவானி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த வடிவேல் (32) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து  வடிவேலை  கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு மாவட்டத்தில் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

    ஈரோடு ஸ்டோனி பாலம்  அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.  இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது.  
    கடல் மீன்கள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்களில்  கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின் வரத்து குறைய தொடங்கி யுள்ளது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மீன்கள் ரூ.25 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது. 
    ஈரோட்டை பொருத்த வரை 80 டன் மீன்கள் வரத்து ஆகி வந்தது. தற்போது மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளதால் மீன்கள் வரத்து குறைந்து விட்டது. இதனால் இன்று 40 டன் மீன்கள் மட்டுமே வந்தது. இன்று காலை முதலே ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் விலையும் எகிறியுள்ளது.
    இன்று விற்கப்பட்ட மீன்கள் விலை கிலோவில் வருமாறு:-
    உளி-ரூ.350, வஞ்சரம்- ரூ.700 முதல் ரூ.800, வாவல் -ரூ.500, அயிலை-ரூ.180, சங்கரா-ரூ.350, ராட்டு- ரூ.500, மத்தி-ரூ.150, தேங்காய்பாறை-ரூ.450, டுயானா-ரூ.300, நண்டு-350, நெத்திலி-ரூ.250.
    இதேபோல் ஈரோடு காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று குறைந்த அளவில் மீன்கள் வந்திருந்தன. ஆனால் காலை முதலே மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மீன்கள் விலை உயர்ந்தாலும் இன்று  விற்பனை விறு விறுப்பாக இருந்தது.
    லேப்டாப், விலை உயர்ந்த கடிகாரத்தை எடுத்து கொண்டு பார்சலில் மரக்கட்டை வைத்து ஆன்லைன் நிறுவனத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து மனைவியை கைது செய்த போலீசார் கணவரை தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா.

    கார்த்திக் ஆன்லைன் மூலம் ரூ.44 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், ரூ.44,900 மதிப்புள்ள லேப்டாப் உள்பட 3 பொருட்களை ஈரோடு சங்கு நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்து இருந்தார்.

    சம்பவத்தன்று அந்த நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்க்கும் நவீன் என்பவர் கார்த்திக் ஆர்டர் செய்த லேப்டாப், ஆப்பிள் வாட்ச் உள்பட 3 பொருட்களை பார்சலில் வேலம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

    அப்போது கார்த்திக் மனைவி ராதிகா வீட்டிற்கு வெளியே வந்து நவீன் கொண்டு வந்த 3 பொருட்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அந்த பார்சலை தனது கணவர் கார்த்திக்கிடம் கொடுத்து விட்டு டெலிவரி ஊழியர் நவீனிடம் சுமார் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது கார்த்திக் 3 பார்சல்களில் ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 2 பார்சலை நவீனிடம் கொடுத்து விட்டு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முடியவில்லை என்று கூறி ஒரு பார்சலுக்கான தொகை ரூ.546 மட்டும் கொடுத்து விட்டு நாளை பணம் கொடுத்து விட்டு மற்ற 2 பொருட்களை பெற்றுக் கொள்வதாக கூறினார்.

    அப்போது பார்சலை திரும்ப பெற்ற டெலிவரி ஊழியர் நவீன் பார்சல் எடை அதிகமாக இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டு தனது மனைவியுடன் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

    பின்னர் நவீன் மற்ற டெலிவரிகளை முடித்துக் கொண்டு இரவு அலுவலகத்திற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் உயரதிகாரியிடம் கூறி பார்சலை கொடுத்தார்.

    இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் பார்சலை திறந்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்சலில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக சாதாரண வாட்ச் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் மடிக்கணினிக்கு பதில் மரக்கட்டை வைக்கப் பட்டிருந்தது.

    இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் கார்த்திக் வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டபோது கார்த்திக் மனைவி ராதிகா முன்னுக்குப்பின் முரணாக பேசி உள்ளார். நூதன முறையில் கணவன்- மனைவி ஏமாற்றியதை உணர்ந்த அவர்கள் இது குறித்து மலையம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னை போலீசார் வேறு ஒரு மோசடி வழக்கில் ராதிகாவை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இந்த மோசடி வழக்கிலும் ராதிகாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவரது கணவர் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

    கார்த்திக் சேலத்தில் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தபோது தனது மனைவி ராதிகா உடன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நூதன முறையில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டத்தின் கீழும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான கார்த்திக்கை தொடர்ந்து தேடி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×