என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல் பரிசு பெற்ற சிவகங்கை மாவட்ட அணிக்கு மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம பரிசு வழங்கிய காட்சி.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கிளித்தட்டு விளையாட்டு போட்டியில் சிவகங்கை மாவட்ட அணி வெற்றி
ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மொடக்குறிச்சி:
ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கையில் புகழ்பெற்ற விளையாட்டான பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கிளித்தட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டியில் ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, கோவை, மேட்டுப்பாளையம் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 14 முகாம்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்த விளையாட்டுப் போட்டியை மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒரு அணிக்கு 10 பேர் வீதம் கிளித்தட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சிவகங்கை மாவட்டம் பாறையூர் லைட்டிங் கேள்ஸ் அணி வெற்றி பெற்றது. அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5001, சுழல்கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி ஈரோ லங்கா 7 ஸ்டார் அணிக்கு ரூ.4001 மற்றும் சுழல்கோப்பையும் , மூன்றாமிடம் பிடித்த கரூர் மாவட்டம் குளித்தலை இருமூதிபட்டி ஐபி லங்கா அணிக்கு ரூ.3001 மற்றும் சுழல் கோப்பையும், நான்காம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி ஈரோ லங்கா ஏ அணிக்கு ரூ.2001 மற்றும் சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது
மேலும் மூன்று ஆட்ட நாயகன் விருது வழங்கப்-பட்டது. அதில் ஈரோடு லங்கா 7 ஸ்டார் அணியைச் சேர்ந்த சவுந்தர்யாவுக்கு சிறந்த கிளி விடுதல் விருதும், திண்டுக்கல் மாவட்டம் காரையூர் லைட்டிங் கேள்ஸ் அணியைச் சேர்ந்த லத்திஷ்க்கு சிறந்த கிளி விடுதல் விருதும், சிறப்பாக விளையாடிய குளித்தலை ஐபி அணியைச் சேர்ந்த சாரோவுக்கும் விருது வழங்கப்பட்டது.
பரிசுகளை மலையம்-பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழங்கினார்.
போட்டியை பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Next Story






