என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலோசனைக் கூட்டத்தில் முருங்கத்தொழுவு முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி பேசிய காட்சி.
    X
    ஆலோசனைக் கூட்டத்தில் முருங்கத்தொழுவு முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி பேசிய காட்சி.

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை ரத்து செய்யக்கோரி மாநாடு

    சென்னிமலையில் நடந்த கீழ்பவானி பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை ரத்து செய்யக்கோரி மாநாடு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
    சென்னிமலை

    சென்னிமலையில் நடந்த கீழ்பவானி பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை ரத்து செய்யக்கோரி மாநாடு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

    சென்னிமலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் முருங்கத்தொழுவு முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி தலைமையில் நடந்தது. 

    இதில் பொடாரன், துளசிமணி உள்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
    இந்த கூட்டத்தில் வருகிற 24-ந் தேதி பெருந்துறையில் கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் திரட்டி கீழ்பவானி பிரதான கால்வாய், பகிர்மான கால்வாய், கிளைக் கால்வாய்களில் கான்கிரீட் சுவர் மற்றும் தளம் அமைப்பதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    மேலும் கூட்டத்தில் கீழ்பவானி கால்வாயில் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய பழைய கட்டுமானங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு ஆதரவு தெரிவிப்பது அதற்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என அதிகாரிகளுக்கு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. 
    கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள விவசாயிகளின் நலனும், குடிநீரை பயன்படுத்தும் பொது மக்களின் நலன் கருதியும், சுற்றுச்சூழலை கருதியும், மண் கால்வாய் மண் கால்வாயாக பராமரிக்க கோரியும் கான்கிரீட் போடும் திட்டத்தினை மட்டும் உடனடியாக ரத்து செய்யக் கோரி பெருந்துறையில் நடக்கும் கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்துவது என முடிவு செய்தனர்.
    Next Story
    ×