என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை வட்டார பகுதிக்கு புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை வட்டார பகுதிக்கு புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க  அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் பெருந்துறை பகுதி வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு சிப்காட் மற்றும் ஏராளமான டெக்ஸ்டைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெருந்துறை பகுதியில் ஏராளமான வெளி மாநிலத்தவர்கள் குடியேறியதால் இந்த பகுதியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

    இதனால் போக்குவரத்து நெரிசலும் டவுன் பகுதிகள் அடிக்கடி ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பெருந்துறைக்கு தனியாக போக்குவரத்து காவல் அலுவலகம் திறக்கப்பட்டு தற்பொழுது போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பெருந்துறை பகுதிகள் பெண்களுக்கான குற்றங்கள் அதிகம் நடைபெற்று வருவதால் இது சம்பந்தமான புகார்கள் பவானி மற்றும் ஈரோட்டிற்கு மாற்றி அனுப்பப்பட்டது.

    இதனால் பெருந்துறை பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான குற்ற புகார்கள் இங்கேயே விசாரணை மேற் கொள்ளலாம் என பல தரப்பினரும் கேட்டுக் கொண்டதற் கிணங்க அரசு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் திறக்கப்படும் என இப்பகுதி மக்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
    அந்தியூர் பகுதியில் சாக்கடையில் விழுந்த குதிரையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    அந்தியூர்

    அந்தியூர் பகுதியில் சாக்கடையில் விழுந்த குதிரையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

     அந்தியூர் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் சாக்கடை கட்டும் பணி நடைபெற்று கொண்டு இருப்பதால் கழிவுநீர் சரிவர செல்லாமல் தேங்கி இருந்து வருகிறது.
    இந்த நிலையில் நேற்று மாலை சாலையோரம் சுற்றித் திரியும் குதிரை ஒன்று அந்த கால்வாயில் விழுந்து மேலே ஏற முடியாமல் தவித்து கொண்டு இருந்தது. இதை கண்ட பொதுமக்கள் அந்தியூர் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் கொடுத்தனர் 
    இதையடுத்து அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த குதிரையை கயிறு கட்டி பொதுமக்கள் உதவி யுடன் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோட்டில் டாக்டர் வீட்டில் பணம்-நகை கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் டாக்டர் வீட்டில் பணம்-நகை கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு திண்டல் சத்யசாய் நகரை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 65). ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்ட ராக பணியாற்றி வருகிறார்.  ஞானசேகரன் தனது குடும்ப த்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
     
    இந்நிலையில் டாக்டர் ஞானசேகரன் தனது குடும்பத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
    அப்போது வீட்டில் பீரோ வில் வைக்கப் பட்டிருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் திருட்டு போய் இருந்தது. மர்ம நபர்கள் யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
    இதுகுறித்து ஞானசேகரன் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த குமார் தலைமையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைகள் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவின்  காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்கையும், ரிசீவர் பாக்சையும்  மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர் களும் சம்பவ இடத்திற்கு வந்து பதிவாகியிருந்த கை ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகளை அடிப் படையாக கொண்டு விசா ரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். நன்கு பழக்கமான நபர்கள்  தான் இந்த துணிகர கொள் ளையில்  ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக் கின்றனர்.
    சென்னிமலை போலீசார் சார்பில் மாணவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
    சென்னிமலை:

    சென்னிமலை போலீசார் சார்பில் மாணவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    சென்னிமலை போலீசார் சார்பில் குமரன் சதுக்கம் பகுதியில் சாலை விதிகளை கடைப்பிடித்தல் மற்றும் ஆம்புலன்ஸ் முதல் உதவி சிகிச்சை குறித்த பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    சென்னிமலை டவுன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்&இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் சாலை விதிகள் குறித்த விளம்பரப் பலகை வைத்து அதில் உள்ள குறியீடுகளை மாணவ, மாணவிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள், பொது மக்களுக்கும் விளக்கி காட்டினர்.

     மேலும் சென்னி-மலை பாஸ் ஆம்புலன்ஸ் வர-வழைக்-கப்-பட்டு அதிலுள்ள உபகர-ணங்கள் குறித்தும்  விபத்துக்-குள்ளானவர்-களுக்கு எப்படி முதலுதவி செய்வது பற்றியும் வகுப்புகள் நடத்தப் பட்டது.

    இதில் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, ஆசிரியர்கள் முருகன், ஜெயலட்சுமி, மாணவர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்  கலந்து கொண்டார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண் இணை இயக்குநர் தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண் இணை இயக்குநர்  தெரிவித்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது நெல், எள், கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் பயிறு வகைகள் ஆகியவை சாகுபடி மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
    பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், வேளாண்துறை சார்பில் மாவட்டத்திற்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப் பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துளளனர்.
    இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது:&

    ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்கள் உட்பட 605 உர விற்பனை நிலையங்கள் மூலமாக உரங்கள் விற்பனை செய்யப் படுகின்றன. 
    மாவட்டத்தில் நெல், பயறு வகைகள், எள், கரும்பு, வாழை உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்திற்குத் தேவையான உரங்கள் பல்வேறு உர உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு, கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு 1250 மெ.டன் யூரியா மற்றும் 1120 மெ.டன் டி.ஏ.பி உரங்கள் ரெயில் மூலம் வந்தடைந் துள்ளது. இதையடுத்து தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 2333 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1793 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1383 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 4855 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1066 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர  விற்பனை நிலையங் களில் இருப்பு வைக்கப்ப ட்டுள்ளது. 
    விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரப்பரிந்துரைக்கு ஏற்ப உரங்களை இட வேண்டும். மேலும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும். 
    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு அனுமதி சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு அனுமதி சீட்டு முறையை அமல்படுத்த  வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில்  மனு கொடுத்தனர்.

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. 
    அப்போது தமிழக வாழ்வு ரிமை கட்சி ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் கோபு தலைமையில் நிர்வாகிகள் வெளியேற்று, வெளியேற்று வடமாநிலத்தவர்கள் வெளியேற்று, தாக்காதே, தாக்காதே காவல்துறையினரை தாக்காதே என்று கோஷம் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் வந்தனர். 
    இதனால்  கலெக்டர் அலு வலகத்தில் பரபரப்பு நிலவி யது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத் தனர்.
    அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
    தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு பொருளா தாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் வட மாநிலத்தவர்களால் குற்றங்கள் அதிகரித்து வருவதை தமிழக வாழ்வு ரிமை கட்சியினர் பலமுறை சுட்டிக்காட்டி உள்ளோம்.
    இதன் தொடர்ச்சியாக மொடக்குறிச்சியில் வட மாநில இளைஞர்கள் காவல் துறையினரை கடுமையாக தாக்கி உள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையை கட்டுப் படுத்தவும், கண்காணிக்கவும் உள்நுழைவு அனுமதி சீட்டு முறையை நடைமுறை ப்படுத்த வேண்டும்.
    இதற்காக நடப்பு சட்ட மன்றக் கூட்டத் தொடரி லேயே தனி சட்டம் இயற்ற வேண்டும். இதேபோல் வட மாநிலத்தவர்கள் கண் காணிக்க போலீசார்  தனிப் பிரிவை ஏற்படுத்த வேண் டும். குற்ற சம்பவங்களில் ஈடுபடும் வட மாநிலத்தவர் களை உடனடியாக தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
    ஈரோட்டில் உள்ள தொழிற் சாலைகளில் அதிக அளவில் வேலை பார்க்கும் வட மாநிலத்தவர்களை அந்தந்த தொழிற்சாலைகள் உடனடியாக திரும்பி அனுப்ப வேண்டும். இல்லை யென்றால் வடமாநிலத் தவர்கள் அதிகமாக பணி புரியும் தனியார் தொழிற் சாலை முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
    இதில் வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கவேல், ஜார்ஜ் பெர் னாண்டஸ், மாவட்ட துணைத் தலைவர் வினோத் குமார், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் தர்ம ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    ஈரோடு மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் சொத்து வரி உயர்வு குறித்து தி.மு.க&அ.தி.மு-.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது-.
    ஈரோடு:


    ஈரோடு மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் சொத்து வரி உயர்வு குறித்து  தி.மு.க-அ.தி.மு-.க.வினர் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது-. 

    ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று தமிழக அரசின் சொத்து வரி சீராய்வு குறித்த அவசர  கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அ.தி.மு.க. கவுன்-சிலர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ்¢, தங்கவேல், தங்கமுத்து, நிர்மலா தேவி, ஹேமலதா, பாரதி ஆகிய 6 கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  ஆண் கவுன்சிலர்கள் கறுப்பு சட்டையும், பெண் கவுன்சிலர்கள் கறுப்பு சேலையும் அணிந்து இருந்தனர். 
    கூட்டம் தொடங்கியதும் சொத்து வரி உயர்வு குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்து பேசிக்-கொண்டிருந்தனர். அப்போது தி.மு.க கவுன்-சிலர்கள் முதன் முதலில் சொத்து வரியை உயர்த்தியது அ.தி.மு.க. அரசு தான் என்று பேசி னா ர்கள். 
    இதற்கு அ.தி.மு.க. உறுப்பி-னர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சொத்து வரி உயர்வுக்கு தி.மு.க. அரசுதான் காரணம் என்று கூறினார். இதனால் அ.தி.மு.க. - தி.மு.க. கவுன்-சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.  பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பி-யவாறு மேயர் நாகரத்-தினத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
    அதனை தொடர்ந்து நிருபர்-களிடம் பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 24 வருடத்திற்கு ஒரு முறை சொத்து வரி உயர்த்த வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது 12 வருடத்திலேயே சொத்து வரி உயர்வு என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றனர்.
    இதைத்தொடர்ந்து  கூட்டம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது வார்டில் உள்ள குறைகள் குறித்து பேசினர். அப்போது பெரும்பாலானோர் தங்கள் வார்டில் ஏதாவது பிரச்சனை என்றால் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலை  பேசியில் தொடர்பு கொண்டால் அவர்கள் போனை எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினர். 
    தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதேபோல் பல்வேறு இடங்களில் ரோடு மோசமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
    இதற்கு பதிலளித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறும்போது,
    உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்து குறித்து ஆலோசிக்கப்பட்டு அவர்கள் குறைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அறிவித்துள்ளபடி சொத்து வரி வசூலிக்கப்படும். 
    ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி ஏ, பி, சி, டி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.   இதில் ஏ பகுதியில் சதுரடி ஒன்றுக்கு 2.60 ரூபாயும், பி பகுதியில் சதுரடி ஒன்றுக்கு 2.10 ரூபாயும், சி பகுதியில் சதுரடி ஒன்றுக்கு 1.60 ரூபாயும், டி பகுதியில் சதுரடி ஒன்றுக்கு 1.10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள ஊராட்சி-கோட்டை குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு நிதி உதவி கோரப்பட்டுள்ளது. நிதி வந்ததும் அந்தப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
    முன்னதாக கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி மேயர் நாகரத்தினம் தலைமையில் கவுன்சிலர்கள் ஏற்றுக் கொண்டனர்.
    திருமணம் ஆகாத ஏக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    திருமணம் ஆகாத ஏக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு சென்னிமலை ரோடு பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலன் (58). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. 

    மேலும் சரியான வேலை அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த அவர் தினமும் மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலன் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) குடித்து விட்டார். 

    இது குறித்து அவர் வீட்டில் இருந்தவர் களிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
    புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    புகையிலை பொருட்களை விற்பனைக்கு  வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் .  அப்போது பெரிய சேமூர், தண்ணீர் பந்தல் பாளையம்,  மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப் படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். 

    அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் பெரியசேமூர் பகுதியை சேர்ந்த சேகர் (50) என்பதும், தடைசெய்யப்பட்ட ஆன்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவரிடமிருந்து 2 கிலோ மதிப்புள்ள குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.
    பெருந்துறை அருகே தாய் வீட்டுக்கு சென்ற பெண் மகளுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.
    பெருந்துறை

    பெருந்துறை அருகே தாய் வீட்டுக்கு சென்ற பெண் மகளுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.

    பெருந்துறை அடுத்த  காஞ்சி கோவில், தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (38). இவரது மனைவி கருணாம் பாள் (33). இவர்களுக்கு துவிஷா (8). என்ற மகள் உள்ளார். 

    இந்த நிலையில் சம்பவத் தன்று  கருணாம்பாள் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு தனது மகள் துவிஷாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இது குறித்து தனசேகரன் மாமியாரிடம் கூறினார்.
    ஆனால் அவர்கள் அங்கு செல்லவில்லை என தெரிய வந்தது. 

    இதையடுத்து அவர்கள் 2 பேரை அக்கம் பக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும், விசாரித்தும் அவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    இது குறித்து தனசேகரன் காஞ்சிகோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்-பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. 
    மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவ-ரப்-படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 106 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்-திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி பாசனத்திற்கு 5 கனஅடியும் என மொத்தம் 705 கனஅடி தண்ணீர் வெளி-யேற்றப்பட்டு வருகிறது.

    மொடக்குறிச்சி அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    மொடக்குறிச்சி அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மொடக்குறிச்சி அடுத்த முத்துகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமதி (வயது 23). இவர் சோலாரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். 
    தினமும் இவர் வேலைக்கு வீட்டிலிருந்து நடந்து சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலை முடித்துக்கொண்டு ஸ்ரீமதி செல்போனில் பேசியபடி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீமதியிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். 

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்.. திருடன். என கூச்சலிட்டார் ஆனால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ஸ்ரீமதி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
    ×