என் மலர்tooltip icon

    ஈரோடு

    தாளவாடி உள்ளிட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.
    ஈரோடு:

    தாளவாடி உள்ளிட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் தாளவாடி உள்ளிட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அந்த பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு செய்து அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

    குறிப்பாக அப்பகுதி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்தார்.

    தாளவாடி மலையில் அமைந்துள்ள தலமலை கிராமத்துக்கு உட்பட்ட ராமரணை கிராமத்தில் அதிகளவில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மக்கள் உரிய தொழில் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இவர்கள் வசிக்கும் பகுதியை ஒட்டி மலைப்பகுதியில் சீமாறு (துடைப்பம்) செய்யும் ஒரு வகை புல் விளைகிறது. இதனை அவர்கள் சேகரித்து சமவெளிப் பகுதியில் உள்ள இடைத்தரகர்களிடம் விற்று அதில் வரும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

    அவர்களிடம் குறைந்த விலைக்கு சீமாறு புல் வாங்கி வந்து அதனை இடைத்தரகர்கள் சீமாறாக செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

    இதனை அறிந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மலைவாழ் மக்களுக்கு உதவ முன்வந்தார்.

    அதன் அடிப்படையில் ராமரணை மகளிர் சுய உதவி குழுவின் 17 உறுப்பி னர்களுக்கு ஈரோட்டிலிருந்து துடைப்பம் தயாரிக்கும் நபர்களை கொண்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு துடைப்பம் தயாரிக்க உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகளின் மூலம் ராமரணை பழங்குடியின மக்கள் 3 வகையான துடைப்பங்களை நாளொன்றுக்கு 15 முதல் 20 வரை தயார் செய்து ரூ.750 முதல் ரூ.1000 வரையிலும் விற்பனை செய்து அவர் களது வாழ் வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். 

    இந்த தொழிலுக்காக மகளிர் திட்டத்தின் மூலம் ரூ. 75 ஆயிரம் நிதி உதவியும் இந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கும் வழங்கப் பட்டுள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தலா ரூ.40 மதிப்பில் 1344 துடைப்பங் களும், தலா ரூ.45 மதிப்பில் 378 துடைப்பங்களும், தலா ரூ.50 மதிப்பில் 935 துடைப்பங்களும் என மொத்தம் 2657 துடைப்பங்களும் ரூ.1, 17,520 மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தலைமலை ஊராட்சிக்குட்பட்ட ராமரணை மலை கிராமத்தில் வசிக்கும் கீதா என்பவர் கூறியதாவது:

    எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நான் ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒட்டாரம் தலமலை ஊரா ட்சிக்குட்பட்ட ராமரணை மலை கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் 15 பேர் சேர்ந்து ராமரணை மகளிர் சுய உதவிக்குழு 2016&ல் தொடங்கினோம். 

    எங்கள் ஊரில் கூலி வேலை கிடைப்பது மிக அரிது. எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது.

    வனத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தேன். வனத்திலுள்ள புல்லினை எடுத்து வந்து ரூ.150 முதல் ரூ. 200 வரை மட்டுமே வருவாய் ஈட்ட முடிந்தது. 

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கடந்த வருடம் ஜூலை மாதம் 24&ந் தேதி எங்கள் கிராமத்திற்கு வந்த போது எங்கள் வாழ்வாதாரம் பெருக உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

    இதன் பின்னர் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் ஈரோடு மகளிர் திட்டம் மூலமாக சீமார் புல்லினை கொண்டு துடைப்பம் தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டது.

    சீமார் செய்ய கற்றுக் கொண்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சீமார் செய்ய ஆரம்பித்தேன். தற்போது ஒரு கிலோ சீமார் புல்லில் 2 துடைப்பம் தயாரித்து ஒரு கிலோவிற்கு ரூ.80 வீதம் வருமானம் கிடைக்கிறது.

    நாளொன்றுக்கு 15 முதல் 20 துடைப்பங்கள் கட்டி அதன் மூலம் ரூ.600 முதல் ரூ.800 வரை சம்பாதிக்கிறேன். இதனால் என் குடும்ப வருமானம் பெருகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    முதல்போக சாகுபடிக்கு குண்டேரிபள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    டி.என்.பாளையம்:

    குன்றிமலை அடிவாரத்தில் கடந்த 1980-ஆம் ஆண்டு 42 அடி உயரத்திற்கு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

    குன்றி, விளாங்கோம்பை மல்லியம்மன்துர்கம். கடம்பூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக தண்ணீர் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடையும் வகையில் அணை கட்டப்பட்டு உள்ளது.

    குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் உதவி பொறியாளர் கல்பனா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குண்டேரிப்பள்ளம் அணையில் பூஜை செய்து தண்ணீர் திறந்து விட்டனர்.

    இன்று முதல் ஜூன் 9-ந் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படும் என்றும் முதலில் 12 நாட்களுக்கும், அதைத்தொடர்ந்து 5 நாட்கள் இடைவெளியில் 10 நாட்கள் வீதம் மொத்தம் 57 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


    குண்டேரிபள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களில் இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு தண்ணீரை பொதுபணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.
    டி.என்.பாளையம்:

    குண்டேரிபள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களில் இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு தண்ணீரை பொதுபணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். 

    குன்றிமலை அடிவாரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு 42 அடி உயரத்திற்கு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

    குன்றி, விளாங்கோம்பை மல்லியம்மன்துர்கம். கடம்பூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக தண்ணீர் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடையும் வகையில் அணைகட்டப்பட்டு உள்ளது.

    குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10&க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் உதவி பொறியாளர் கல்பனா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குண்டேரிப்பள்ளம் அணையில் பூஜை செய்து தண்ணீர் திறந்து விட்டனர்.

    இன்று முதல் ஜூன் 9-ந் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படும் என்றும் முதலில் 12 நாட்களுக்கும், அதைத்தொடர்ந்து 5 நாட்கள் இடைவெளியில் 10 நாட்கள் வீதம் மொத்தம் 57 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து குற்றம் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து குற்றம் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    சத்தியமங்கலம் உதயனூரை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 29). கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன் கோபிசெட்டிபாளைய த்தில் கஞ்சா விற்ற போது போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஆனந்தனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ஆனந்தன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். 

    இந்த உத்தரவுக்கான  நகல்  கோவை சிறையில் உள்ள ஆனந்தனுக்கு வழங்கப்பட்டது.

    இதேப்போல் பவானி லட்சுமி நகரை சேர்ந்த நிக்கோலஸ் ராஜா (35) என்பவர் கடந்த சில மாதங் களுக்கு முன்பு நகைக்காக மூதாட்டியை கொலை செய்தார்.

    இவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் நிக்கோலஸ் ராஜா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து  நிக்கோலஸ் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    இதற்கான உத்தரவு நகல் கோவையில் உள்ள சிறையில் வழங்கப்பட்டது.

    அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்.
    அம்மாபேட்டை:

    அம்மா பேட்டை அருகே விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்.

    அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் அடுத் துள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சுந்தரராசன். இவரது மகள் கோகிலா (38). 

    இவருக்கும் ஊமாரெட்டி யூரை சேர்ந்த அப்புசாமி மகன் வேல்முருகன் (40) என்பவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மதுவதனி (12) என்ற மகளும், தமிழ் நிதின் (3) என்ற மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று வேல்முருகன் வீட்டில் எதிரில் உள்ளவர் கோகிலா வின் தாய் ஜெயம்மாளுக்கு போன் செய்து தங்கள் மகள் வீட்டில் ஏதோ பிரச்சனை போல் இருக்கிறது இங்கே சத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஜெயம்மாள் விசாரித்த போது தனது மகள் கோகிலா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாகவும் அவரை அந்தியூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஜெயம்மாள் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதில் அவர் வேல்முருக னுக்கு, கோகிலாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கோபித்து கொண்டு தனது வீட்டுக்கு வந்து விடுவார் எனவும்,

    நாங்கள் சமாதானப்படுத்தி மீண்டும் தனது அவரது கணவர் வீட்டுக்கு சென்று விட்டு விடுவோம் எனவும் கூறியுள்ளார்.

    இதனால் மன உளைச் சலில் இருந்த கோகிலா வீட்டில் இருந்து பூச்சி மருந்தை எடுத்து குடித்து ள்ளார். மேலும் சாவில் சந்தேகம் இருப்பதாக உண்மை நிலையை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளார்.

    இறந்த கோகிலாவின் உடல் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் மற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார் கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் மற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார் கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவப்பெருமாள் சன்னதி என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமையப்பெற்றுள்ளது.

    இந்த கோவில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் நடக்கும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடக்கவில்லை. இந்த நிலையில் மாவட்டத்தில் தொற்று பரவல் குறைந்ததால் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு அபிஷேகம் செய்யபட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

    விழாவையொட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பஞ்சமூர்த்திகள் மற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார் கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 63 நாயன்மார் களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

    இதனைத் தொடர்ந்து வேதநாயகி உடனமர் சங்க மேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவப் பெருமாள் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது.

    பின்னர் இரவு சங்கமேஸ் வரர் கோவிலில் இருந்து பஞ்ச மூர்த்திகள் மூஷிக வாகனத்திலும், சுப்பிர மணியர் மயில் வாகனத்திலும், சங்கமேஸ்வரர் நந்தி வாகனத்திலும், அம்பாள் அன்னபட்சி வாகனத்திலும், புறப்பாடு நடந்தது.

    மேலும் 51 பல்லக்குகளில் 63 நாயன்மார்கள் உட்பட 91 திருமேனிகள் பக்தர்களால் திருவீதி உலா புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் அடைந்தது.

    இதில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவன டியார்கள் மேள தாளங்கள் முழங்க பாடல்கள் பாடி திருவீதி உலாவில் கலந்து கொண்டனர். இதில் பலர் கலந்து கொண்டு சாமி பூஜை செய்து வழிபட்டனர். வீதி உலாவை யொட்டி போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    விழாவையொட்டி வரும் 15-ந் தேதி ஆதிகேசவப் பெருமாள் திருத்தேரோட்டம், 16-ந் தேதி சங்கமேஸ்வரர் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 19-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
    சென்னிமலை அடுத்துள்ள பசுவ பட்டியிலும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது தேவராஜ் என்பவர் தோட்டத்தில் திடீரென விழுந்த இடியில் பச்சை தென்னை மரங்கள் தீ பற்றி எரிந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் ஆரம்பிக்கும் முன்பே மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. மாலை 5 மணிக்கு பிறகு பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

    மாநகர் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் சாரல் மழை பெய்தது. அதேபோல் இரவு 7 மணி அளவிலும் லேசான சாரல் மழை பெய்தது. ஆனால் பெரிதாக மழை ஏதும் பெய்யவில்லை.

    ஆனால் அதே சமயம் புறநகர் மாவட்ட பகுதிகளான தாளவாடியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஆகும் சூழ்நிலை நிலவியது. தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் குண்டேரிபள்ளம், பவானி, மொடக்குறிச்சி, எலந்தகுட்டை, பவானிசாகர் ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    சென்னிமலை பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை மிக கடுமையான கோடை வெயில் அடித்தது மக்கள் தாங்க முடியாத வெப்பத்தில் தவித்தனர். மாலை 6 மணிக்கு வானம் இருண்டு திடீரென கோடை மழை பெய்ய தொடங்கியது.

    இதில், சென்னிமலை அடுத்துள்ள பசுவ பட்டியிலும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது தேவராஜ் என்பவர் தோட்டத்தில் திடீரென விழுந்த இடியில் பச்சை தென்னை மரங்கள் தீ பற்றி எரிந்தது. நல்ல வேளையாக அருகில் வீடு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது. மேலும் மரங்கள் தள்ளித்தள்ளி இருந்ததால் தீ தோட்டம் முழுவதும் பரவாமல் 2 மரங்கள் மட்டும் முழுமையாக பற்றி எரிந்து அணைந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தாளவாடி-13.5, குண்டேரிபள்ளம் 2.6, பவானி - 2.4, மொடக்குறிச்சி -2.2, எலந்தகுட்டை-2.2, பவானிசாகர்-1.

    வீட்டில் மதுவை பதுக்கி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    வீட்டில் மதுவை பதுக்கி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
     
    அப்போது சூளை அருகே உள்ள ஒரு வீட்டில் சிலர்  மதுவை பதுங்கி விற்பதாக  ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஜெயமுருகன் தலைமையில் போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக சென்று சோதனை செய்தபோது அங்கு 710 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 

    இதன் மதிப்பு ரூ.26 ஆயிரம் ஆகும். இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பெரிய சேமூர் பகுதியை சேர்ந்த சரவணன் (36), புதுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த முருகேசன் (41), தஞ்சாவூரை சேர்ந்த ரங்கதுரை (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் இவர்கள் சூளை பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. 
    இவர்களிடம் இருந்து மது பாட்டில்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

    அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.22 அடியாக உள்ளது. 

    நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு விநாடிக்கு 714 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பாசனத்திற்கு 5 கனஅடி என மொத்தம் 705 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் பாதித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் பாதித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெற்று வருகின்றது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியா பாரிகள் வருவது வழக்கம்.

    சாதாரண நாட்களில் ஜவுளி சந்தை அன்று ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தாக்கத்திற்கு பிறகு  கடந்த சில மாதங்களாக ஜவுளி சந்தை வியாபாரம் சுமாராகவே நடந்து வந்தது. 
    இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு காட்டன் துணிகள் விற்பனை சற்று சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில் ஜவுளி வியாபாரி களுக்கு பேரடியாக நூல் விலை உயர்வு அமைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப் பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றொரு பேரடியாக அமைந்து விட்டது. இதனால் ஜவுளி வியாபாரிகள் என்ன செய்வது இந்த தெரியாமல் திகைத்து வருகின்றனர். 

    இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டது. 
    ஆனால் அதேநேரம் ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்றது. இன்று சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். நூல் விலைக்கு தீர்வு கிடைக்கும் வரை மொத்த வியாபாரம் தொடர்ந்து பாதிக்கப்படும் என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத 225 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத 225 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வு ஏற்பாடு களை மாவட்ட  பள்ளி கல்வித் துறையினர் செய்து வருகின்றனர்.
    இது தொடர்பாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் அடுத்த மாதம் -ந் தேதி முதல் 31-ந் தேதி தேதி வரை 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
    தேர்வு எழுதுவதற்காக 10-ம் வகுப்பு மாணவர் களுக்கு 113 மையங்கள் அமைக்கப் பட்டு 28 ஆயிரத்து 365 மாணவர்களும், மேல்நிலைத் தேர்வு எழுத 104 மையங்கள் அமைக்கப் பட்டு அதில் பிளஸ்-1 மாணவர்கள் 27 ஆயிரத்து 656 பேரும், பிளஸ்-2 வகுப்பில் 24 ஆயிரத்து 909 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். 
    தனித்தேர்வு மையமாக 10-ம் வகுப்பு மாணவர் களுக்கு 5 மையங்களம், மேல்நிலைவகுப்பு மாணவர்களுக்கு 3 தேர்வு மையங்கள் என மொத்தம் 225 தேர்வு மையங்கள் வருவாய் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 
    தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து சம்மந்தப் பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய வசதிகளை செய்து கொடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. 
    இவ்வாறு அவர் கூறினார்.
    பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரச்சலூர்

    பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரச்சலூர் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அர்ச்சுனன் நடத்த ஊசிப் பாளையம் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர்.

     அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நஞ்சை கொளாநல்லி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (54), ஈரோடு விளக்கேத்தி, ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்(31), காங்கேயம், நத்தக்கடையூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (35), அரச்சலூர், புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (50), பழைய கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (34) ஆகியோர் என்பதும் அவர்கள் பணம் வைத்து சூதாடியதும்  தெரிய வந்தது. 
    இது தொடர்பாக அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.1000 பறிமுதல் செய்தனர்.
    ×