என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ரம்ஜான் பண்டிகையையொட்டி சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடந்தது
ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் பாதித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் பாதித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெற்று வருகின்றது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியா பாரிகள் வருவது வழக்கம்.
சாதாரண நாட்களில் ஜவுளி சந்தை அன்று ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தாக்கத்திற்கு பிறகு கடந்த சில மாதங்களாக ஜவுளி சந்தை வியாபாரம் சுமாராகவே நடந்து வந்தது.
இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு காட்டன் துணிகள் விற்பனை சற்று சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில் ஜவுளி வியாபாரி களுக்கு பேரடியாக நூல் விலை உயர்வு அமைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப் பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றொரு பேரடியாக அமைந்து விட்டது. இதனால் ஜவுளி வியாபாரிகள் என்ன செய்வது இந்த தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டது.
ஆனால் அதேநேரம் ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்றது. இன்று சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். நூல் விலைக்கு தீர்வு கிடைக்கும் வரை மொத்த வியாபாரம் தொடர்ந்து பாதிக்கப்படும் என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
Next Story






