search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக அதிகாரி தகவல்

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண் இணை இயக்குநர் தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண் இணை இயக்குநர்  தெரிவித்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது நெல், எள், கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் பயிறு வகைகள் ஆகியவை சாகுபடி மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
    பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், வேளாண்துறை சார்பில் மாவட்டத்திற்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப் பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துளளனர்.
    இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது:&

    ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்கள் உட்பட 605 உர விற்பனை நிலையங்கள் மூலமாக உரங்கள் விற்பனை செய்யப் படுகின்றன. 
    மாவட்டத்தில் நெல், பயறு வகைகள், எள், கரும்பு, வாழை உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்திற்குத் தேவையான உரங்கள் பல்வேறு உர உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு, கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு 1250 மெ.டன் யூரியா மற்றும் 1120 மெ.டன் டி.ஏ.பி உரங்கள் ரெயில் மூலம் வந்தடைந் துள்ளது. இதையடுத்து தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 2333 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1793 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1383 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 4855 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1066 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர  விற்பனை நிலையங் களில் இருப்பு வைக்கப்ப ட்டுள்ளது. 
    விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரப்பரிந்துரைக்கு ஏற்ப உரங்களை இட வேண்டும். மேலும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும். 
    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×