என் மலர்
ஈரோடு
- பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் 32 வீடுகள் கொண்ட போலீஸ் குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
- சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார்.
பெருந்துறை:
பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் 48 சென்ட் பரப்பளவில் ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 32 வீடுகள் கொண்ட போலீஸ் குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக பெருந்துறை குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், இன்ஸ்பெக்டர்கள் மசூதா பேகம், நிர்மலா, பெரியசாமி, சப்-,ன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜீவானந்தம், கல்பனா, வேலுச்சாமி, தங்கமுத்து, கருப்புசாமி, நாகராஜ் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரியகொடிவேரி அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் 40 ஏக்கர் உள்ளது.
- பட்டா வழங்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம் என கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கூடியிருந்த மக்களை கேட்டு கொண்டதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
டி.என்.பாளையம்:
பெரியகொடிவேரி கிராமம் சென்றாயன்பாளையம் மலை மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் 40 ஏக்கர் உள்ளது.
இந்த நிலத்தில் பெரிய கொடிவேரி கிராமங்களை சேர்ந்த நிலம் இல்லாத 508 நபர்களுக்கு வருவாய்த்துறையினர் சார்பில் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கே.என்.பாளையம், நரசாபுரம், நாலிட்டேரி பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பட்டா வழங்கிய இடத்தில், குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய வந்ததாக தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் வருவாய் துறையில் முறையாக விண்ணப்பம் அளித்தால் மட்டுமே, தகுதி உள்ள நபர்களுக்கு பட்டா வழங்கப்படும்.
ஏற்கனவே பட்டா வழங்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம் என கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கூடியிருந்த மக்களை கேட்டு கொண்டதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- தி.மு.க. அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
- கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம், மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் மத்தியில் அவர் பேசியதாவது:
கடந்த சட்டமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து, தி.மு.க. ஆட்சியை பிடித்தது. ஆனால் பதவி ஏற்ற 14 மாதங்கள் ஆகியும், கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. குடும்ப தலைவிகளுக்கு, மாதம் தோறும் ரூ.1,000 வழங்குவோம் என்றதை இன்றளவும் செயல்படுத்த வில்லை. சமையல் எரிவாயு விலையை குறைப்போம் என்பதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
அத்திக்கடவு -அவினாசி திட்டம் நியாயப்படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நிறைவேறி இருக்க வேண்டும். ஆனால் வேண்டும் என்றே, அந்த திட்டத்தை இன்றளவும் நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு காலம் கடத்தி வருகிறது. பெருந்துறை தொகுதியின் தாகம் தீர்க்கும் திட்டமான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டமும், இன்றுவரை மக்களின் பயன்பாட்டுக்கு வந்து சேரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- செயலாளர் கோகுலகிருஷ்ணன், கவுரவ தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு உள்பட 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணி புரிந்து வருகின்றனர். தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவர்களின் பணி நேரமாகும்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் டாக்டர்கள் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மணி நேரம் வேலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மதியம் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் கோகுலகிருஷ்ணன், கவுரவ தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு உள்பட 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஈரோடு சிலம்ப கமிட்டி சார்பில் மாவட்ட அளவிலான திறந்த வெளி சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது,
- போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது,
கோபி:
கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர்மகளிர் கல்லூரி வளாகத்தில் ஈரோடு சிலம்ப கமிட்டி சார்பில் மாவட்ட அளவிலான திறந்த வெளி சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது,
இந்த போட்டிகளில் பங்கேற்க திருவண்ணா–மலை, திருப்பூர்,கோவை, உடுமலை,நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டகளிலிருந்தும் 200 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ மாணவி–கள்வந்திருந்தனர்,
இங்கு நெடுங்கம்பு, நடுங்கம்பு, இரட்டைகம்பு, ஒற்றைவாள்வீச்சு, இரட்டை வாள்வீச்சு, வேல்கம்பு, மான்கொம்பு, குத்து–வரிசைஉள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது,
இதில் 10 வயதிற்கு உட்பட்டோர், 11 முதல் 14, 15 வயது முதல் 17, 18 வயது முதல் 25 என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகளில் ஒரு மாணவர் நான்கு போட்டி–களில் கலந்து கொள்ளலாம் என்ற விதிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் போட்டிகளில் உற்சாகமாக பங்குபெற்றனர், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களை அவரது பெற்றோர்கள் உற்சாகப்படுத்தினர்.
மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது,
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள சின்ன மடத்து பாளையம் கோவை மெயின் ரோடு பகுதியில் முருகன் என்பவரது வீட்டுக்கு அருகே 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. அந்த பகுதியில் ஒரு நாய் குட்டி வந்தது.
அப்போது அந்த கிணற்றுக்குள் நாய்க்குட்டி எதிர்பாராதவிதமாக விழுந்து விட்டது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி, கிணற்றுக்குள் இறங்கி நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர்.
- நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது.
- அணைக்கு நீர் வரத்து காலை 9 மணி முதல் அதிகரிக்க தொடங்கியது. மதியம் 12 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்தது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி முதலில் கீழ் மதகுகள் வழியாகவும், அதன் பிறகு மேல் மதகுகள் வழியாகவும் 25,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சத்திய–மங்கலத்தில் கரையோரம் இருந்த சுமார் 15 குடும்பத்தினர் பாது–காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கரையோரம் பகுதியில் இருந்த வர சித்தி விநாயகர் கோவில் படிக்கட்டை வெள்ளம் சூழ்ந்தது.
கோபி அருகே உள்ள அரசூர் மற்றும் மாக்கி–ணாங்கோம்பை கிராமங்கள், அத்தாணி அப்பக்கூடல் பகுதிகளில் உள்ள கரையோர பகுதி–களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் பவானி ஆற்றில் திறந்து விடப்படும் நீரும் குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,300 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இந்த 12,300 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து காலை 9 மணி முதல் அதிகரிக்க தொடங்கியது. மதியம் 12 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக கொடிவேரி அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக இன்று 4 -வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொது மக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம் அணை 27.41 அடியாகவும், பெரும்பள்ளம் அணை 17.49 அடியாகவும், வரட்டு பள்ளம் அணை 33.50 அடியாகவும் உள்ளது.
- தாளவாடி, புளியம் பட்டி,–சத்திய–மங்கலம், நம்பியூர்,–கோபி,அத்தாணி, அந்தியூர், அம்மாபேட்டை,பவானி மற்றும் கவுந்தப்பாடி உட்பட 14 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விஷர்சன ஊர்வலம் நடைபெறும்.
- பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பாளர் எச். ராஜாவும் கலந்து கலந்து–கொண்டு சிறப்புரையாற்று–கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதர் முன்னி லையில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியானது பிரிவினை வாதத்தை முறி–யடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம். என்ற நோக்கத்தில் விழா கொண்டாடப்படும். இதில் கடந்த ஆண்டுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை வழிபாடுகள் தொடரும். மேலும் பல்வேறு புதிய இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விழா நடைபெறும்.
இந்த ஆண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் காகித கூழ், கிழங்கு மாவால் செய்ய ப்பட்டு வாட்டர் கலர் மூலம் வர்ணம் பூசப்பட்ட 3 அடி முதல் 11 அடி உயரம் வரை விநாயகர் திருமேனி தயாரிப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஈரோடு மேற்கு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் விநாயகர் திருமேனி பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி விழா–வானது வருகிற 31-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 6 -ந் தேதி வரை நடைபெறும்.
குறிப்பாக தாளவாடி, புளியம் பட்டி,–சத்திய–மங்கலம், நம்பியூர்,–கோபி,அத்தாணி, அந்தியூர், அம்மாபேட்டை,பவானி மற்றும் கவுந்தப்பாடி உட்பட 14 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விஷர்சன ஊர்வலம் நடைபெறும். குறிப்பாக தாளவாடியில் நடைபெறும் விழாவிற்கு தென் பாரத அமைப்பாளர் ஜெகதீஷ் கரனும், புளியம் பட்டியில் நடைபெறும் விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பாளர் எச். ராஜாவும் கலந்து கலந்து–கொண்டு சிறப்புரையாற்று–கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
- பெங்களூர் திலக் நகரில் உள்ள ஒரு அடுக்குமடி குடியிருப்பில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் 24 -ந் தேதி திடீர் சோதனை.
- செல்போன், லேப்டாப், டைரி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.
ஈரோடு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு திலக் நகரில் உள்ள ஒரு அடுக்குமடி குடியிருப்பில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் 24 -ந் தேதி திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக அக்பர் உசேன் லஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜுபா என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆசிப் முசாப்தீன் மற்றும் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் யாசின் ஆகியோரது வீட்டில் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர் செல்போன், லேப்டாப், டைரி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள காவலர் குடியிருப்புக்கு அழைத்து சென்று புலனாய்வு பிரிவினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆசிப் முசாப்தீனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும், அந்த இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து சதி வேலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து ஆசிப் மீது இந்திய தண்டனை சட்டம் 121, 122, 125 மற்றும் உபா எனப்படும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் ஆசிப்பை கைது செய்தனர்.
பின்னர் ஆசிப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று கோவை மத்திய சிறையில் இருக்கும் ஆசிப் முசாப்தீனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்தனர். இதனை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதியம் 12 மணியளவில் ஆசிப் முசாபுதின் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
- பெருந்துறை பகுதியில் சுற்றி திரிந்த ஆதரவற்ற முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு.
- பெருந்துறை போலீசார் அவரை ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க அனுமதி கடிதத்தை அளித்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். இதை அறிந்த சமூக ஆர்வலர் சொக்கலிங்கம் அவரிடம் விசாரித்தார்.
அப்போது அவர் நசியனூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் (80) எனவும் டெய்லராக வேலை பார்த்து வந்ததும், இவரது மனைவி இறந்து விட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சமூக ஆர்வலர் சொக்கலிங்கம் அந்த முதியவரை மீட்டு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பெருந்துறை போலீசார் அவரை ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க அனுமதி கடிதத்தை அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதியோர் ஜெயபால் ஈரோட்டில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
- நேயர் திருக்கோவிலில் ஆடிமாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
- தொட–ர்ந்து பிரசாதம், அன்ன–தானம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளை யம்நால்ரோடு அருகே மாருதிநகர் பகுதியில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆடிமாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம் நால்ரோடு மாருதிநகரில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் சுயம்புலிங்க ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி சனிக்கிழமை ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை மாலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சுயம்புலிங்க ஆஞ்சநேயர் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், நெய், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெற்று, பக்தர்களுக்கு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். தொட–ர்ந்து பிரசாதம், அன்ன–தானம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு பூஜையில் கணக்கம்பட்டி அழுக்கு சித்தர் கோயில் பூசாரி சீனிவாசன், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பட்டாச்சாரியார் ராஜகோபால், பொன்னம் பாளையம் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து–கொண்டனர்.v
- ஈரோட்டில் வாகன சோதனையின் போது பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்த குமார் தலைமையில் கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்ப–ட்டது.
இந்நிலையில் வீரப்பன் சத்திரம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி–ருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த வாலிபர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன்பட்டி, குட்டை தெருவை சேர்ந்த மணிகண்டன் என்கிற மணி (27), நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 4 -வது வீதியை சேர்ந்த தவச்செல்வன் (21) என்பது ெதரிய வந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோடு சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம் பகுதியில் 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து இருந்து 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.






