பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்-அன்னதானம்

நேயர் திருக்கோவிலில் ஆடிமாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொட–ர்ந்து பிரசாதம், அன்ன–தானம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்-அன்னதானம்
Published on

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளை யம்நால்ரோடு அருகே மாருதிநகர் பகுதியில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆடிமாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம் நால்ரோடு மாருதிநகரில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் சுயம்புலிங்க ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி சனிக்கிழமை ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை மாலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சுயம்புலிங்க ஆஞ்சநேயர் வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், நெய், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெற்று, பக்தர்களுக்கு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். தொட–ர்ந்து பிரசாதம், அன்ன–தானம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு பூஜையில் கணக்கம்பட்டி அழுக்கு சித்தர் கோயில் பூசாரி சீனிவாசன், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பட்டாச்சாரியார் ராஜகோபால், பொன்னம் பாளையம் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து–கொண்டனர்.v

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com