என் மலர்
ஈரோடு
- ஈரோடு அரசு மருத்துவ மனை வளாக பகுதியில் ரூ.64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை இன்று காலை அமைச்சர்கள் வேலு, முத்துசாமி ஆடியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு மருத்துவ மனை வளாக பகுதியில் ரூ.64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை இன்று காலை அமைச்சர்கள் வேலு, முத்துசாமி ஆடியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 2 ஆயிரம் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ரூ.64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும்.
இதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை மற்றும் எலும்பு தொடர்பான சிகிச்சைகள், நரம்பியல் சிகிச்சைகள் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். முறையான பதிவேடுகள் பராமரி க்கப்பட்டு வருகிறது.
கட்டிடம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிக்கு முன்பு மேம்பாலம் செல்கிறது. அங்கு சர்வீஸ் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு அங்கு சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்றால் அரசு ஆஸ்பத்தி ரியில் 3.30மீட்டர் அகலம் இடம் தேவைப்படுகிறது.
இது ( சுகாதாரம், நெடுஞ்சாலை துறை) ஆகிய 2 துறை சம்பந்தப்ப ட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். மேலும் நான் சென்னை சென்றதும் இது குறித்து முதல்- அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி, தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மேயர் நாகரத்தினம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள ரெயில்வே மேம்பா லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து மேல் திண்டலில் சாலையோர மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
- ரோட்டின் ஓரத்தில் உபரி நீர் செல்லும் 4 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.
- இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்து விட்டார்.
சென்னிமலை:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நத்தகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). கட்டிட தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று காலையில் அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது காங்கேயம் ரோட்டில் அத்திக்காடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் ஓரத்தில் உபரி நீர் செல்லும் 4 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்து விட்டார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பெரிய சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது வில்லர சம்பட்டி அடுத்த கரந்தான் காடு பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டி ருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் நடராஜன் (40), தனபால் (32) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
- அதிகாலை எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஒருவர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்.
- போலீசார் பாலுசாமியை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடை த்தனர்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கே.மேட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 88). இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும், ராதா என்ற மக ளும் உள்ளனர். மகன் சென்னையிலும், மகள் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் தனி தனியாக வசித்து வருகிறார்கள்.
சரஸ்வதியின் கணவர் ராமசாமி இறந்து விட்டார். இதனால் சரஸ்வதி கே.மேட்டுபாளையம் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மூதாட்டி சரஸ்வதி வழக்கம் போல் நேற்று அதிகாலை எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஒருவர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்.
இதையடுத்து சரஸ்வதி யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அவரது மகள் ராதாவுக்கு தகவல் கொடுத்த னர்.
அவர் சம்பவ இடத்து க்கு வந்து அவரை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பெருந் துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.
விசாரணையில் சரஸ்வதி யின் பக்கத்து வீட்டில் உள்ள தொழிலாளி பாலுசாமி (48) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர் சரஸ்வதியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
என் வீட்டின் அருகே சரஸ்வதியின் தோட்டம் உள்ளது. அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூஜை செய்து பஜனை பாடல்கள் பாடுவார். இது எனக்கு தொந்தரவாக இருந்தது. மேலும் நான் வேலைக்கு செல்லாமல் இருப்பதற்கும், எனக்கு திருமணமாகாமல் இருப்பதற்கும் அவர் செய்வினை செய்து விட்டார்.
இதனால் நான் தூங்காமல் நிம்மதியை இழந்தேன். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய திட்மிட்டேன். அதன்படி நேற்று காலை தண்ணீர் தெளிப்பதற்கு வெளியே வந்த சரஸ்வதியை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதையடுத்து போலீசார் பாலுசாமிைய கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோபிசெட்டி பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜய் அழகிரி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார். அதன் பேரில் போலீசார் பாலுசாமியை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடை த்தனர்.
- தமிழகம் முழுவதும் இன்று உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி டாக்டர்.லூயிஸ்பாஸ்டர் மறைந்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- வெறிநாய்கடி நோய் என்பது வைரசினால் மனித நரம்பு மண்டலத்தை பாதி க்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயாகும்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் இன்று உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி டாக்டர்.லூயிஸ்பாஸ்டர் மறைந்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
வெறிநாய்கடி நோய் என்பது வைரசினால் மனித நரம்பு மண்டலத்தை பாதி க்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். இந்த வகை நோய் தாக்கப்பட்ட மிருகங்கள் கடிப்பதன் மூலமாக, அவற்றின் எச்சில் வழியே மனிதர்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பரவுகிறது.
இந்தியாவில் பெரும்பாலும் நாய்களின் மூலமே மனிதர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது. ஆகவே செல்லப்பி ராணிகளுக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு, கட்டாயம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
ஒருவரை நாய் கடித்து விட்டாலோ, நகத்தினால் கீறி விட்டாலோ, கையை கட்டு கட்டவோ, எருகம்பால் விடுவது அல்லது மந்திரி ப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. கடிபட்ட இடத்தை 15 நிமிடங்கள் குழாய் நீரிலோ அல்லது சோப்பு போட்டோ கழுவ வேண்டும்.
உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரிடம் கலந்தா லோசித்து தேவைப்பட்டால் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினத்தன்று அனைத்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் ஒருங்கிணைந்த நலத்தோடு, வெறிநாய் கடிநோயினால் இறப்பு இல்லா சமுதாயம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.
- கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை.
- கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை பகுதியில் 6500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கஸ்பா பேட்டை பகுதியில் அரசு பள்ளிகள், வாரச் சந்தைகள், வங்கிகள், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் உள்ளன.
ஆனால் கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை. இந்த பகுதி மக்கள் மருத்துவ தேவைகளுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவல்பூந்துறை அடுத்த கவுண்டிச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் கவுண்டிச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் மட்டுமே ஆரம்ப சுமாதார நிலையத்துக்கு உடனடியாக செல்ல முடியும். பஸ்சை நம்பி உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வரு கிறார்கள்.
ஒரு சிலர் பஸ் வசதி இல்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் முதி யோர், குழந்தைகள் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
மேலும் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதால் நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என மக்கள் புகார் கூறினர்.
எனவே கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
- அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுக்க ப்பட்டது.
- அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு உடனடி யாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என திருப்பூர் எம்.பி. சுப்பராய னிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்க ப்பட்டது.
இதையடுத்து எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் நடந்தது. அந்த பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த கட்டிட திறப்பு விழா நடந்தது.
ஆனால் அந்த கட்டிடம் இன்னும் பயன் பாட்டுக்கு விடப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் அவசர சிகிச்சை மற்றும் பல்வேறு மருத்துவ தேவைகளுக்கு பெருந்துறை மற்றும் ஈரோடு உள்பட அருகே உள்ள அரசு மருத்துவ மனைக்கு பொது மக்கள் அனுப்பி வைக்க ப்பட்டு வருகிறார்கள்.
இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக புகார் கூறினர். எனவே அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு உடனடி யாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. ஆனால் பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் பலர் வரவில்லை.
- இதனால் தற்போது 1 கிலோ மல்லிகை ப்பூ ரூ.300-க்கு விற்பனை யானது.
சத்தயமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமஙகலம், சிக்கரசம் பட்டி உள்பட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பரப்பளவில் மல்லிகைப்பூ, முல்லைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளில் இருந்து பூக்களை பறித்து சத்திய மங்கலத்தில் செயல்படும் பூ மார்க் கெட்டுக்கு விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது. வியாபாரிகள் கொள்முதல் செய்து ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களுக்கு அனுப்பி வைக்கின்ற னர்.
மேலும் கேரளா, ஆந்திரா என வெளி மாநில வியாபாரிகள் வந்து பூக்க ளை மொத்தமாக கொள் முதல் செய்து வருகிறார்கள். இதனால் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் தேவை அதிகரித்து பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும்.
அதே போல் கடந்த மாதம் ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வந்ததது.இதை யொட்டி கேரளா மாநிலத்து க்கு அதிகளவு பூக்கள் ஏற்று மதி செய்யப்பட்டது. தேவை அதிகரிப்பால் கடந்த மாதம் மல்லிகை ப்பூ கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு மேல் விற்ப னை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாத தால் பூக்களின் தேவை தொடர்ந்து குறைந்து வரு கிறது.
தற்போது வெப்ப கால நிலை நிலவுவதால் பூக்கள் உற்பத்தி 3 டன்னில் இருந்து 5 டன்னாக அதி கரித்தது. இதனால் தேவை யை விட உற்பத்தி அதிகமாக உள்ளதால் விலையும் படிப்படியாக குறைந்து வரு கிறது.
கடந்த மாதம் ரூ.4 ஆயிரத்துக்கு மேல் மல்லி கைப்பூ விற்பனை செய்ய ப்பட்டது. அது படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனையா னது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. ஆனால் பூக்களை கொள் முதல் செய்ய வியாபாரிகள் பலர் வரவில்லை. இதனால் தற்போது 1 கிலோ மல்லிகை ப்பூ ரூ.300-க்கு விற்பனை யானது. இதே போல் ரூ.300-க்கு விற்பனை செய்யபப்ட்ட முல்லைப்பூ ரூ.100 ஆக குறைந்தது. ேமலும் மற்ற பூக்களின் விலையும் குறைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
- இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.
- இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.
பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.
இதேபோல் 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.76 அடியாக உள்ளது. 30.84 அடி உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.26 அடியாக உள்ளது.
இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.
- மின்விநியோகம் சீரான வேளையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீ பரவியது.
- இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் கருகி சேதமாகி உள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் நெகமம் பிரிவில் கல்யாண சுந்தரம் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இரவு திடீரென மின்விநியோகம் துண்டிப்பானது. பிறகு சிறிது நேரம் கழித்து மின்விநியோகம் சீரான வேளையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீ பரவியது.
தீ மளமளவென பரவியதால் உடனே வேலை பார்த்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் எல்லாம் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர். பிறகு சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இதனால் சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் சாலையில் சிறிது நேரம் புகை மூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பஞ்சு மூட்டைகள் மீது தண்ணீர் ஊற்றி ஈரப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் கருகி சேதமாகி உள்ளது.
- சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் 2 ஆயிரத்து 745 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.64 ஆயிரத்து 101-க்கு விற்பனை நடைபெற்றது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6 ஆயிரத்து 627 தேங்காய்களை விற்ப–னைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 27 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 2 ஆயிரத்து 745 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.64 ஆயிரத்து 101-க்கு விற்பனை நடைபெற்றது.
- டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- போலீசாரிடம் நிர்வாகிகள் எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகியை எந்தவித ஆதாரமும் இன்றி போலீசார் பிடித்து விசாரணைக்காக வைத்துள்ளனர்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி எஸ்.ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். பா.ஜ.க பிரமுகர். இவர் புஞ்சை புளியம்பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 24-ந்தேதி இவருக்கு சொந்தமான கார் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மர்மநபர்கள் இவரது காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்திலிருந்து அழைக்கப்பட்ட செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தும் காருக்கு தீ வைத்த மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் புளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் கமருதீன் (31) என்பவரை புளியம்பட்டி போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் பரவியதால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு நேற்று மாலை திரண்டனர். தங்கள் அமைப்பு உறுப்பினரை எவ்வித ஆதாரமும் இன்றி பிடித்து போலீசார் விசாரிப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் நேற்று இரவு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட திரண்டு வந்தனர்.
அப்போது டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் நிர்வாகிகள் எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகியை எந்தவித ஆதாரமும் இன்றி போலீசார் பிடித்து விசாரணைக்காக வைத்துள்ளனர்.
அவரை உடனடியாக வெளியே விட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அதற்கு போலீசார் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும் என்றனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே கமருதீனிடம் பு.புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.






