search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி கொலையில் கைதான தொழிலாளி சிறையில் அடைப்பு
    X

    மூதாட்டி கொலையில் கைதான தொழிலாளி சிறையில் அடைப்பு

    • அதிகாலை எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஒருவர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்.
    • போலீசார் பாலுசாமியை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடை த்தனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கே.மேட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 88). இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும், ராதா என்ற மக ளும் உள்ளனர். மகன் சென்னையிலும், மகள் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் தனி தனியாக வசித்து வருகிறார்கள்.

    சரஸ்வதியின் கணவர் ராமசாமி இறந்து விட்டார். இதனால் சரஸ்வதி கே.மேட்டுபாளையம் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மூதாட்டி சரஸ்வதி வழக்கம் போல் நேற்று அதிகாலை எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஒருவர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்.

    இதையடுத்து சரஸ்வதி யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அவரது மகள் ராதாவுக்கு தகவல் கொடுத்த னர்.

    அவர் சம்பவ இடத்து க்கு வந்து அவரை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பெருந் துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

    விசாரணையில் சரஸ்வதி யின் பக்கத்து வீட்டில் உள்ள தொழிலாளி பாலுசாமி (48) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர் சரஸ்வதியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    என் வீட்டின் அருகே சரஸ்வதியின் தோட்டம் உள்ளது. அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூஜை செய்து பஜனை பாடல்கள் பாடுவார். இது எனக்கு தொந்தரவாக இருந்தது. மேலும் நான் வேலைக்கு செல்லாமல் இருப்பதற்கும், எனக்கு திருமணமாகாமல் இருப்பதற்கும் அவர் செய்வினை செய்து விட்டார்.

    இதனால் நான் தூங்காமல் நிம்மதியை இழந்தேன். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய திட்மிட்டேன். அதன்படி நேற்று காலை தண்ணீர் தெளிப்பதற்கு வெளியே வந்த சரஸ்வதியை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதையடுத்து போலீசார் பாலுசாமிைய கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோபிசெட்டி பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜய் அழகிரி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார். அதன் பேரில் போலீசார் பாலுசாமியை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடை த்தனர்.

    Next Story
    ×