search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "against rabies"

    • தமிழகம் முழுவதும் இன்று உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி டாக்டர்.லூயிஸ்பாஸ்டர் மறைந்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • வெறிநாய்கடி நோய் என்பது வைரசினால் மனித நரம்பு மண்டலத்தை பாதி க்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயாகும்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் இன்று உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி டாக்டர்.லூயிஸ்பாஸ்டர் மறைந்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    வெறிநாய்கடி நோய் என்பது வைரசினால் மனித நரம்பு மண்டலத்தை பாதி க்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். இந்த வகை நோய் தாக்கப்பட்ட மிருகங்கள் கடிப்பதன் மூலமாக, அவற்றின் எச்சில் வழியே மனிதர்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பரவுகிறது.

    இந்தியாவில் பெரும்பாலும் நாய்களின் மூலமே மனிதர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது. ஆகவே செல்லப்பி ராணிகளுக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு, கட்டாயம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

    ஒருவரை நாய் கடித்து விட்டாலோ, நகத்தினால் கீறி விட்டாலோ, கையை கட்டு கட்டவோ, எருகம்பால் விடுவது அல்லது மந்திரி ப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. கடிபட்ட இடத்தை 15 நிமிடங்கள் குழாய் நீரிலோ அல்லது சோப்பு போட்டோ கழுவ வேண்டும்.

    உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரிடம் கலந்தா லோசித்து தேவைப்பட்டால் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினத்தன்று அனைத்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் ஒருங்கிணைந்த நலத்தோடு, வெறிநாய் கடிநோயினால் இறப்பு இல்லா சமுதாயம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×