என் மலர்
ஈரோடு
- போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போக்குவரத்து போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
- இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து ஈரோடு மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணி, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணிகளை ஈரோடு வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தெற்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சிக்னலில் நிற்காமல் சென்றதாக 219 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 49 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 642 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாக 301 வழக்குகள் என மொத்தம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
- வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
ஈரோடு:
வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன் பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சி காட்டு வலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புது வலசு, பரிசல் துறை, கருக்கம்பாைளயம், நாடார் மேடு, 46 புதூர், சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெற்கு மின் வாரிய செயற் பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
- பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
- இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யாவிட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதி களில் பரவலாக மழை பெய்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பவானி, வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், பவானிசாகர், கொடிவேரி, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் இன்னும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வில்லை. இனி வரும் நாட்களில் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
பவானி-23, வரட்டுபள்ளம்-7.40, அம்மாபேட்டை-6.60, குண்டேரிபள்ளம்-5.20, பவானிசாகர்-4, கொடி வேரி, சென்னிமலை-2, பெருந்துறை-1.
- அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மொடக் குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா, அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தி னர். அப்போது ராசாம் பாளையம் பகுதியில் 2 பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் போலீசை கண்ட தும் தப்பி ஓடினர்.
தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரி த்தனர். இதில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த அஜீத் (22), ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலா (29) என்பதும் அவர்கள் வீட்டில் கஞ்சா வை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதனையடுத்து ராசாம்பாளையத்தில் உள்ள பாலாவின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ேமலும் பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம்கோயல் நேரில் சென்று விசாரனை நடத்தி னார்.
இதில் லாரி டிரைவரான பாலா முகாசி அனுமன் பள்ளியை சேர்ந்த கணேசன் என்பவர் மூலம் கஞ்சா வாங்கி ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை, லக்காபுரம், 4 6புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அஜீத், பாலா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கணேசன் என்ப வரை போலீசார் தேடி வரு கின்றனர்.
- 4 நாட்களாக மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாததால் சுமார் 280 டன் குப்பைகள் தேங்கி கிடந்தன.
- 60 வார்டுகளிலும் இன்று தூய்மை பணியாளர்கள் பணிக்கு சென்று தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் 1800-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தனியார் இடம் ஒப்படைக்கும் அரசாணையை கண்டித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டத்தில் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் பங்கேற்று வந்ததால் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் மலைபோல் தேங்கியது. நாள் ஒன்றுக்கு 70 டன் வரை குப்பைகள் சேர்ந்தன.
இந்நிலையில் 4-வது நாளாக நேற்று ஒப்பந்த பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். 4 நாட்களாக மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாததால் சுமார் 280 டன் குப்பைகள் தேங்கி கிடந்தன.
இந்நிலையில் நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்களை அமைச்சர் முத்துசாமி நேரடியாக சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழக அரசின் நகராட்சிகள் நிர்வாகம் வெளியிட்டுள்ள அரசாணை அமல்படுத்த கால அவகாசம் உள்ளதால் அதற்குள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி இவ்விவகாரத்தில் உரிய தீர்வு காணப்படும்.
பொது மக்களின் நலன் கருதி போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி பேசினார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து இன்று காலை முதல் ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் வேலைக்கு சென்றனர். ஈரோடு மாநகர பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் இன்று தூய்மை பணியாளர்கள் பணிக்கு சென்று தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
- கல்லூரி முடிந்து திரும்பிய மதியரசு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தங்கை லாவண்யா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த லாவண்யாவை கீழே இறக்கினார். பின்னர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவர்களுக்கு மதியரசு (20) என்ற மகனும், லாவண்யா (17) என்ற மகளும் உள்ளனர். செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதியரசு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்லூரியிலும், லாவண்யா பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.
லாவண்யா கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தாமதமாக கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு முதலாவது ஆண்டு தேர்வு தொடங்கியதால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மதியரசு கல்லூரிக்கு சென்று விட்டார். தாய் செல்வி அருகில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லாவண்யா வீட்டில் உள் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி முடிந்து திரும்பிய மதியரசு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தங்கை லாவண்யா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த லாவண்யாவை கீழே இறக்கினார். பின்னர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாவண்யாவின் உடலை கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பண்ணாரி சோதனை சாவடி வழியாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கர்நாடகாவில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வழியாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் மற்றும் போலீசார் நேற்று இரவு பண்ணாரி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆசனூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேகமாக ஒரு பிக்அப் வேன் வந்தது.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அவரது பெயர் சிராஜ் (31) என்பதும், கர்நாடக மாநிலம் குண்டல் பேட்டையில் இருந்து கோவை மாவட்டம் அன்னூருக்கு மாட்டு சாணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். மேலும் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் பிக்அப் வாகனத்தில் இருந்து சாணியை அகற்றி விட்டு பார்த்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் 68 மூட்டைகளில் சுமார் 2 டன் அளவுக்கு இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இதையடுத்து போலீசார் வேனுடன் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து டிரைவர் சிராஜை கைது செய்து விசாரித்தனர். அப்போது கர்நாடக மாநிலம் குண்டல் பேட்டையில் இருந்து கோவை மாவட்டம் அன்னூருக்கு இந்த போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து யாருக்கு கொண்டு செல்ல போதை பொருட்கள் கடத்தப்பட்டது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது.
- இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வர்.
இதேபோல் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது. 350 பசு மாடுகள், 150 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்கு வந்து இருந்தன. இது கடந்த வாரத்தை விட குறைவு.
தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளன.
எனினும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பசு மாடுகள் ரூ.45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையும், எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.
இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
- சந்தை பகுதியில் உள்ள ஏராளமானவரிடம் நேற்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பெருந்துறை:
பெருந்துறை சந்தை பகுதியில் சாந்தா (57) என்ற பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கொலையாளி யார்? எதற்காக கொலை நடந்தது? என்ற விவரம் தெரியாததால் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மேலும் பெருந்துறை சப்-டிவிஷன் குற்றப்பிரிவு போலீசார் தலைமையிலும், பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை யிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சந்தை பகுதியில் உள்ள ஏராளமானவரிடம் நேற்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
- ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.
- மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையின் நேற்று காலை வழக்கம் போல் ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.
பின்னர் மாலை திடீரென வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. இரவிலும் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், வரட்டுப்பள்ளம், குண்டேரிபள்ளம், கொடிவேரி, கொடுமுடி, நம்பியூர், கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி, தாளவாடி, பவானி போன்ற பகுதி களிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
பவானிசாகர்-17.40, எலந்த குட்டைமேடு-16.80, சத்தியமங்கலம்-15, கோபி-14.20, குண்டேரி பள்ளம்-8.20, வரட்டுபள்ளம்-8, கொடிவேரி-7, கொடு முடி-6.20, நம்பியூர்-6, கவுந்தபாடி-5.20, மொடக்குறிச்சி-3.40, தளவாடி-1.50, பவானி-1.20.
- சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படுகிறது.
- இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் வருகிற 8-ந்தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படுகிறது.
அதனால் காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சுவாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.
இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை. இரவு 7.35 மணிக்கு நடை திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்படும்.
அதன் பின்பு பக்தர்கள் அனுமதிக்க–ப்படுவர். அன்று மட்டும் இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புல னாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அவ்வழி யாக சந்தேகப்படும்படியாக ஆம்னி கார் ஒன்று வந்தது.
காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (35) என்பதும், ரேஷன் அரிசியை வடமாநிலத்த வர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியும், கடத்த லுக்கு பயன்படு த்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






