என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மது ஸ்ரீ திடீரென வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் அடுத்த தாரைக்கொங்புதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்க டாசலம். இவரது மனைவி மகேஸ்வரி.

    இவர்களது மகள் மது ஸ்ரீ (வயது 19). இவர்கள் தற்போது சென்னி மலை அடுத்த ஈங்கூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரு கின்றனர். மதுஸ்ரீ பிறந்ததில் இருந்தே உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்நிலையில் மது ஸ்ரீ திடீரென வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடி யாக அவரை மீட்டு பெரு ந்துறை ஐ.ஆர்.டி.டி. அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ெதாடர்ந்து மேல் சிகி ச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மது ஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மனமுடைந்த சாமிநாதன் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே பி.கே.புதூர் பெரிய முளியனூரை சேர்ந்தவர் சாமிநாதன் (31). கட்டிட தொழிலாளி. இவருக்கும் கிருஷ்ணவேணி என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக மனைவியை பிரிந்து சாமிநாதன் வாழ்ந்து வந்தார். மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மனமுடைந்த சாமிநாதன் சம்பவத்தன்று மதியம் பெரிய முளியனூர் அருகே உள்ள மலைப்பாங்கான இடத்திற்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார்.

    பின்னர் அவரது தந்தை நல்லாகவுண்டருக்கு நான் விஷம் குடித்து விட்டேன் என செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அங்கு சென்று சாமிநாதனை மீட்டு அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆத்திரத்தின உச்சிக்கு சென்ற நந்தகோபால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளங்கோ வயிற்றில் குத்தினார்.
    • இந்நிலையில் தப்பி ஓடிய இளங்கோவை நேற்று இரவு ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சாமிநாத புரத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (29). இவரது மனைவி ராஜேஸ்வரி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமண மாகாத இளங்கோ (23) என்ற வாலிபருடன் ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அடிக்கடி இளங்கோ, ராஜேஸ்வரி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இது பற்றி நந்தகோபாலுக்கு தெரிய வந்தது. மனைவியை நந்த கோபால் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் இளங்கோவுடன் பழகுவதை கைவிடவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சாவடிப் பாளையம் பகுதியில் உள்ள மறைவான இடத்தில் ராஜேஸ்வரியும், இளங்கோவும் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது பின் தொடர்ந்து வந்த நந்தகோபால் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் அவர் களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த நந்தகோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளங்கோ வையும், ராஜேஸ்வரியையும் குத்தினார்.

    இதில் ராஜேஸ்வரி முகத்திலும், இளங்கோவின் கையிலும் காயம் ஏற்பட்டது. பின்னர் நந்தகோபால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதனையடுத்து காயமடைந்த 2 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டனர். ராஜேஸ்வரி பெண்கள் உள்நோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் நந்தகோபால் மனைவி ராஜேஸ்வரி தேடி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். ராஜேஸ்வரியை சிகிச்சை பெற்று வரும் பெண்கள் சிகிச்சை உள்நோயாளிகள் வார்டுக்கு நந்தகோபால் சென்றார்.

    அங்கு ராஜேஸ்வரியை சந்திக்க இளங்கோவும் வந்திருந்ததால் ஆத்திரத்தின உச்சிக்கு சென்ற நந்தகோபால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளங்கோ வயிற்றில் குத்தினார்.

    இதைப்பார்த்த மற்ற நோயாளிகள் பதறி அடித்து கொண்டு ஓடினர். நந்த கோபாலும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளங்கோவை டாக்டர்கள் மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தப்பி ஓடிய இளங்கோவை நேற்று இரவு ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். பின்னர் இளங்கோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது.
    • பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை 104 அடியில் நீடித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1,900 கனஅடியாக குறைத்து விடப்படுகிறது.

    இதேபோல் கீழ் பவானி வாய்க்காலுக்கு ஆயிரம் கன அடி நீர் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத்திருவிழா நாளை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் கே.ஜி.மஹாலில் நடைபெறுகிறது.
    • தினமும் மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத்திருவிழா நாளை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் கே.ஜி.மஹாலில் நடைபெறுகிறது.

    இது குறித்து விடியல் சமூக நல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெய காந்தன் கூறியதாவது:

    இளைய தலைமுறை மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா நாளை தொடங்கி 5 நாட்கள் கே.ஜி. மஹாலில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்கிறார்கள். கண்காட்சியில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்படுகிறது. அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    தினமும் மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். நாளை மாலை திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், 17-ந் தேதி திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், 18-ந் தேதி கவாலியர் மதிவாணன், 19-ந் தேதி திரைப்பட நடிகர் கவிஞர் ஜோ.மல்லூரி, 20-ந் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் திரைப்பட நடிகர் தாமு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மாண்ட பொது அறிவு திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விடியல் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயகாந்தன், வாணி தருமராசு, லோகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று செல்வி ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் புது காலனியை சேர்ந்தவர் துரைராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (47).

    சம்பவத்தன்று செல்வி ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த செல்வியை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளாக விலையை உயர்த்தி உள்ளார்கள்.
    • கோவையில் நடந்த குண்டுவெடிப்பு அல்ல கொலைவெறி தாக்குதல். 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தொடர்ந்த என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இன்று காலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பால் விலை உயர்வை கண்டித்து அண்ணாமலை கோஷம் எழுப்பினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் கோஷம் எழுப்பினர். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளாக விலையை உயர்த்தி உள்ளார்கள். வீட்டு வரி வீட்டை விற்றால் கூட கட்டமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மண் திருட்டு, கனிம வளங்கள் திருட்டு அதிகரித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பர மேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு விளம்பரத்திற்காக மட்டுமே நாள்தோறும் புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னையில் வெள்ளத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் முதல்-அமைச்சர் மனைவியுடன் சென்று லவ்டுடே படம் பார்க்க 3 மணி நேரம் ஒதுக்குகிறார். மனைவியிடம் தனது செல்போனை கொடுக்க அச்சப்படும் நிலையில் தமிழகத்தையே கொடுத்து விட்டு நாள்தோறும் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

    ஆவின் நிர்வாகம் திவாலான நிறுவனம். ஒரு புறம் பால் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு. மறுபுறம் பால் கொள்முதல் விலையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கொசு வலை விற்பதற்கு சென்னையில் ஒரு மேயர். கொசு வலையை கூட நம்பி வாங்கி விடக்கூடாது. டெங்கு, மலேரியா வந்தால்கூட தி.மு.க. நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு மட்டும் லாபம். சென்னையில் கொஞ்சமாக பெய்த மழைக்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இனி வரும் டிசம்பர் மாத மழைக்கு என்னவாகும் என்று தெரியவில்லை.

    விற்பனையாகாத பாலை காய்ச்சி வெண்ணையாக மாற்றி பொங்கலுக்கு பயன்படுத்திக் கொள்வோம் என அமைச்சர் நாசர் கூறி உள்ளார். தமிழக முதல்-அமைச்சர் நரேந்திர மோடியாக வேண்டுமானால் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக்கூடாது. குடும்பத்தாரையும் உடன் வைத்து கொள்ளக்கூடாது.

    16 மாதங்கள் மட்டும் காத்திருங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழ்நாட்டில் இருந்து 26 எம்.பி.க்கள் பார்லிமென்ட்டுக்கு செல்வார்கள். கோவையில் நடந்த குண்டுவெடிப்பு அல்ல கொலைவெறி தாக்குதல். 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தொடர்ந்த என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உணவு சாப்பிடும் போதும் ஒரு கையில் உணவு சாப்பிட்டு மற்றொரு கையில் குட்டியின் உடலை வைத்து கெட்டியாக பிடித்துக் கொள்கிறது.
    • தொடர்ந்து 5 நாட்களாக குட்டி உடலுடன் தாய் குரங்கு சுற்றி வருகிறது.

    ஈரோடு:

    தாய்ப்பாசம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொதுவானது தான் என உணர்த்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. அதேபோன்றுதான் ஈரோடு மாவட்டம் தாளவாடி பஸ் நிலையம் அருகே இறந்த குட்டியின் உடலுடன் தாய் குரங்கு ஒன்று 5 நாட்களாக சுற்றி வருவது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் தாளவாடி பஸ் நிலையம் அருகே கடந்த 11-ந் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி குட்டி குரங்கு ஒன்று இறந்து விட்டது. இதுபற்றி அறியாத தாய் குரங்கு குட்டி குரங்கு உடல் அருகே அமர்ந்தது. மேலும் எங்கு சென்றாலும் இறந்த குட்டி குரங்கின் உடலுடன் செல்கிறது.

    அருகில் யாராவது வந்தாலும் உடனடியாக குட்டியின் உடலுடன் மரத்தில் ஏறி அமர்ந்து விடுகிறது. மேலும் தாய் குரங்கு அவ்வப்போது குட்டியின் தலையை தட்டி விடுகிறது. உணவு சாப்பிடும் போதும் ஒரு கையில் உணவு சாப்பிட்டு மற்றொரு கையில் குட்டியின் உடலை வைத்து கெட்டியாக பிடித்துக் கொள்கிறது.

    இப்படியாக நாள் முழுவதும் குட்டியின் உடலுடன் சுற்றி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து 5 நாட்களாக குட்டி உடலுடன் தாய் குரங்கு சுற்றி வருகிறது. பொதுமக்களை அருகில் நெருங்க விடுவதில்லை. இதனை பார்க்கும் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    தற்போது இறந்த குட்டியின் உடல் அழுக தொடங்கிவிட்டது. வனத்துறையினர் எப்படியாவது இறந்த குட்டியின் உடலை தாய் குரங்கிடமிருந்து மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது.

    • மொடக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
    • தவறான முறையில் பிறந்த குழந்தையை அவர்கள் வீசி சென்றார்களா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் பட்டாசுபாளி அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அதே பகுதியில் உள்ளது.

    இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த ரஞ்சித் (24) என்ற வாலிபர் மோகனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு வழியாக வேலைக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு மின்மோட்டார் அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

    இதுகுறித்து அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ஒரு தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை துணியில் சுற்றி வைக்கப்பட்டு வீசப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து குழந்தையை பார்த்தபோது குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆவது தெரியவந்தது. குழந்தையின் தலையில் ஈரம் காய்வதற்குள் வீசி சென்றிருப்பதும் தெரிய வந்தது. மேலும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    மொடக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். எனவே தவறான முறையில் பிறந்த குழந்தையை அவர்கள் வீசி சென்றார்களா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இன்று அதிகாலை யாருக்காவது குழந்தை பிறந்ததா? என்றும் அந்த பகுதியில் கர்ப்பமாக இருந்த பெண்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சம்பவத்தன்று சித்தோடு அருகே ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் வேலைக்கு நல்லசாமி சென்று இருந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையம் பட்டுசாமி கோவில் தெரு வை சேர்ந்தவர் நல்லசாமி (57). கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி கண்ணம்மாள்.

    கடந்த சம்பவத்தன்று சித்தோடு அருகே ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் வேலைக்கு நல்லசாமி சென்று இருந்தார். அங்கு கட்டிட வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது கால் தவறி சாரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரு க்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நல்ல சாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேனை போலீசார் நிறுத்த முயன்ற போது டிரைவர் வேனை நிறுத்தா மல் வேகமாக சென்று மற்றொரு வாகனத்தில் மோதினார்
    • தப்பி ஓடியவர்கள் போலீசிடம் சிக்கினால் தான் இந்தக் கடத்தல் பின்னணியில் யார்? யார்? உள்ளார்கள் என தெரியவரும்.

    ஈரோடு:

    சித்தோடு சப் -இன்ஸ்பெ க்டர் குக்கேஸ்வரன் தலை மையிலான போலீசார் நசியனூர் அடுத்த கந்தம்பாளையம் பிரிவு கோவை- சேலம் பைபாஸ் ரோட்டில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை போலீசார் நிறுத்த முயன்ற போது டிரைவர் வேனை நிறுத்தா மல் வேகமாக சென்று மற்றொரு வாகனத்தில் மோதினார். இதையடுத்து அந்த சரக்கு வேனில் இருந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து சித்தோடு போலீசார் சந்தேகம் அடைந்து வேனின் பின் பகுதியை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தன.

    மொத்தம் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த புகையிலை பொரு ட்களை எங்கிருந்து எங்கு கடத்தி சென்றார்கள் என தெரியவில்லை. புகையிலை பொருட்களையும், சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடியவர்கள் போலீசிடம் சிக்கினால் தான் இந்தக் கடத்தல் பின்னணியில் யார்? யார்? உள்ளார்கள் என தெரியவரும்.

    இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆசனூர்- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள 2 காட்டேஜ்களில் அனுமதியின்றி சிலர் மது பானம் குடித்து கொண்டு இருந்தனர்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    ஆசனூர்- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள 2 காட்டேஜ்களில் அனுமதியின்றி சிலர் மது பானம் குடித்து கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் ஒரு காட்டேஜில் விற்பனைக்கு வைத்திருந்த 14 மது பாட்டில்கள் மற்றொரு காட்டேஜில் இருந்து 3 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது அருந்த அனு மதித்த ஜெயபாலன (68), ரமேஷ் (42) ஆகியோரை கைது செய்தனர்.

    இதே போல் ஆசனூர் அருகே உள்ள காட்டே ஜ்களில் மது அருந்த அனு மதித்த ஆசனூர் பகுதியை சேர்ந்த ராஜா (23), பெரியசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மலையம்பாளை யம் அருகே உள்ள வேலம் பாளையம் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் அனுமதியின்றி டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்து இருந்தார். போலீசார் அவரி டம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அடுத்த சீனாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை எதிரில் ஒருவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி னர். இதில் அவர் கிருஷ்ண கிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (31) என்றும், அவர் அதிக விலைக்கு டாஸ்மாக் மதுவை விற்ப னை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு 16 ரோடு பகுதி யில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில் களை விற்பனை செய்ய கொண்டு சென்றார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு அதியமான் நகரை சேர்ந்த சீனிவாசன் (50) என்றும் அவர் மது பானத்தை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அருகே உள்ள காளியம்புதூர் பகுதியில் பழனிசாமி (72) என்பவர் டாஸ்மாக் மது பானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்து இருந்தார். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர் அருகே உள்ள வரபாளையம் அடுத்த அழகம்பாளையம் பகுதியில் வெள்ளியங்கிரி (42) என்பவர் மது பானத்தை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மலையம்பாளையம் அடுத்த குள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பாவா மொய்தீன் (50) என்பவர் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று பெட்டி கடை யில் சோதனை நடத்தி அங்கு இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த னர்.

    ஈரோடு நாடார் மேடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் லாட்டரி சீட்டு களின் எண்களை வெள்ளை தாளில் எழுதி விற்பனை ெசய்து ெகாண்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்த முத்துகிரு ஷ்ணன் (38) என்பவர் 19 ரோடு நாச்சி பாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து 36 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரத்து 10-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×