search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bunsei Puliyampatti"

    • 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத்திருவிழா நாளை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் கே.ஜி.மஹாலில் நடைபெறுகிறது.
    • தினமும் மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத்திருவிழா நாளை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் கே.ஜி.மஹாலில் நடைபெறுகிறது.

    இது குறித்து விடியல் சமூக நல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெய காந்தன் கூறியதாவது:

    இளைய தலைமுறை மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா நாளை தொடங்கி 5 நாட்கள் கே.ஜி. மஹாலில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்கிறார்கள். கண்காட்சியில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்படுகிறது. அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    தினமும் மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். நாளை மாலை திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், 17-ந் தேதி திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், 18-ந் தேதி கவாலியர் மதிவாணன், 19-ந் தேதி திரைப்பட நடிகர் கவிஞர் ஜோ.மல்லூரி, 20-ந் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் திரைப்பட நடிகர் தாமு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மாண்ட பொது அறிவு திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விடியல் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயகாந்தன், வாணி தருமராசு, லோகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    ×